Back
Home » ஆரோக்கியம்
காலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே?
Boldsky | 9th Nov, 2018 11:20 AM
 • காலை உணவு

  சில பேர் காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என்று தவறாக நம்புகிறார்கள். உண்மையில் நீங்கள் காலை உணவை தவிர்த்தால் உங்கள் உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் காலையில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

  MOST READ: ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குணமாகணுமா? அப்போ நீங்க குடிக்க வேண்டிய ஜூஸ் இதுதான்


 • போதிய எனர்ஜி கிடைக்காது

  ஒரு நாள் முழுவதும் உங்கள் உடல் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பணிகளையெல்லாம் செய்து சோர்ந்து போய் இருக்கும். இந்த நிலையில் மறுநாள் காலையில் எழுந்ததும் உடலுக்கு போதிய ஆற்றல் தேவைப்படும். அதற்கு கண்டிப்பாக காலை உணவு என்பது அவசியம். அப்பொழுது தான் உங்கள் உடல் ரீசார்ஜ் செய்து கொண்டு சுறுசுறுப்பாக வேலைகளை செய்யும். நீங்களும் நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக செயல்படுவீர்கள்.

  காலையில் எழுந்ததும் வெறும் காபி, டீ குடித்தால் மட்டும் போதாது. உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் உடலுக்கு எரிபொருளாக செயல்படும்.


 • இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்

  உங்களுக்கு தெரியுமா காலை உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. நீங்கள் காலை உணவை தவிர்க்கும் போது இன்சுலின் சுரப்பு குறைந்து இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடும். இதனால் தான் நிறைய பேர் டயாபெட்டீஸ் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.


 • அதிக பசி எடுத்தல்

  நீங்கள் காலை உணவை தவிர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான பசி எடுக்க வாய்ப்புள்ளது. இந்த அதிகப்படியான பசியால் கலோரிகள் அதிகமாகி உடல் எடை கூட ஆரம்பித்து விடும்.


 • மன அழுத்தம் ஏற்படுதல்

  காலை உணவை தவிர்க்கும் போது உங்க உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் உணர்வு சமநிலையின்மை ஏற்படும். இதனால் மன அழுத்தம், எரிச்சல் போன்றவை ஏற்படும். இதனால் உங்கள் வேலையில் ஏன் குடும்பத்தில் பிரச்சினை உண்டாக கூட வாய்ப்புள்ளது.

  எனவே செரோடோனின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளான டார்க் சாக்லேட், வாழைப்பழம், அவகேடா போன்றவற்றை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்ு கொள்ளுங்கள்.

  MOST READ: கல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்?


 • நோயெதிர்ப்பு சக்தியை குறைத்தல்

  காலை உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதுவே நீங்கள் காலை உணவை சரியாக சாப்பிடாமல் தவிர்க்கும் போது நோயெதிர்ப்பு சக்தி குறைந்து எண்ணற்ற நோய்கள் உங்களை தாக்க நேரிடலாம்.


 • சீரண மண்டலம்

  காலை உணவை தவிர்ப்பதால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் உங்கள் சீரண மண்டலம் வளர்ச்சி அடையாமல் இருக்கும்.

  எனவே காலை உணவில் நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகள் மற்றும் நீர் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இந்த ஊட்டச்சத்தால் வயிற்றின் pH அளவு சமநிலையில் இருக்கும். இதனால் சீரண சக்தி அதிகரித்து உணவுக் கழிவக ளை எளிதாக வெளியேற்றி விடும்.

  MOST READ: கணுக்கால் சுளுக்கிடுச்சா? இத செய்ங்க... உடனே சரியாகிடும்...


 • இதய நோய்கள் அபாயம்

  ஹார்வர்ட் டி.ஹெச். பொது சுகாதாரம், சான் ஹான்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு படி காலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு 27% இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

  காலை உணவை தவிர்ப்பதால் வரும் டயாபெட்டீஸ்,உயர் கொலஸ்ட்ரால் மற்றும் ஹைபர்டென்ஷன் போன்றவையே இதய நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. மேலும் மூளை ஆரோக்கிய மும் பாதிப்படைகிறது.

  எனவே காலை உணவை தவிர்ப்பதை நிறுத்தி ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு நலமுடன் வாழுங்கள்.
காலை உணவு என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த காலை உணவு தான் நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. நமது உடல் தனக்கு தானே ரீசார்ஜ் செய்து கொள்ள இந்த ஊட்டச்சத்து உணவு மிகவும் அவசியம்.

இந்த அவசர காலத்தில் நிறைய மக்கள் தங்கள் காலை உணவை உண்பதே கிடையாது. அதனால் வரும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களிடம் எந்த வித விழிப்புணர்வும் இருப்பதில்லை. அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் நேரங்களில் ஆரோக்கியமான காலை உணவை உண்ணாமல் பாஸ்ட் புட் போன்ற தீங்கு விளைவிக்கும் உணவுகளையே மக்கள் நாடிச் செல்கின்றனர்.

   
 
ஆரோக்கியம்