Back
Home » செய்தி
சர்கார் விவகாரத்தில் தப்பினாலும், முருகதாஸ் தலை மீது தொங்குதே 'கத்தி'!
Oneindia | 9th Nov, 2018 05:00 PM
  • கத்தி பட கதை

    அப்போது பேசிய அவர் கூறியதாவது:

    2012ல் தாக்கபூமி என்ற குறும் படத்தை எடுத்து இருந்தேன். உதவி இயக்குனர் வேண்டும் என்று முருகதாஸ் கேட்டு இருந்த போது என்னுடைய குறும் படத்தை அனுப்பி இருந்தேன். அந்த கதைக் களத்தை வைத்து முருகதாஸ் திரைப்படமாக எடுத்து விட்டார். 'கத்தி' படத்தின் பிளாஷ் பேக் கதை என்னுடையது என்று மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன்.


  • குற்றவியல் வழக்கு

    மேலும் முருகதாஸ் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் புகார் அளித்து இருந்தேன். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் என்னை அழைத்து பேசுவதாக கூறி உள்ளார்.


  • முதல்வரை சந்திப்பேன்

    இது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேச வாய்ப்பு கேட்டு இருக்கிறேன். தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி தர வேண்டும். நியாயத்தின் அடிப்படையில், ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியில் நான் முதல்வரை நம்பித்தான் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


  • முருகதாசுக்கு சிக்கல்

    அன்பு ராஜசேகர் பேட்டியை வைத்து பார்க்கும்போது, இதன் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தால் முருகதாசுக்கு சிக்கல் காத்திருப்பதாகவே தெரிகிறது. சர்கார் பிரச்சினை தொடர்பான வழக்கில் முருகதாஸ் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், இப்பிரச்சினையில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




சென்னை: சர்கார் பிரச்சினையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினாலும் கத்தி பட பிரச்சினை ஏ.ஆர்.முருகதாசை விடாமல் துரத்தி வருகிறது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம், அன்பு ராஜசேகர் பேட்டி.

கத்தி படத்தின் பிளாஷ் பேக் கதை தன்னுடையது என்று தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் இயக்குனர் அன்பு ராஜசேகர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அன்பு ராஜசேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

[முதல்வரிடம் போகிறது "கத்தி" பிளாஷ்பேக் விவகாரம்.. முருகதாஸுக்கு புது சிக்கல்?]

   
 
ஆரோக்கியம்