Back
Home » ஆரோக்கியம்
உடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி?
Boldsky | 10th Nov, 2018 01:01 PM
 • புதினா செடி

  புதினா டீ தயாரிப்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், புதினா செடியை அடையாளம் காண்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சூப்பர் மார்கெட்டில் அல்லது ஒரு தோட்டத்தில், எந்த இடத்தில் இருந்தாலும், புதினா செடியின் வெளிர் பச்சை நிறம் மற்றும் அதன் நறுமணம் , அதனை அடையாளம் காட்டி விடும்.

  புதினா மற்றும் பெப்பர் மின்ட் என்று சொல்லப்படும் மிளகுக்கீரைக்கும் சில அம்சங்கள் பொருந்தி இருந்தாலும் அடிப்படையில் இரண்டும் வெவ்வேறானவை.
  புதினாவின் முக்கிய அம்சங்களை இப்போது காணலாம்.

  MOST READ: டயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா? இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...


 • வீட்டில் வளர்ப்பது

  புதினா இலைகள், பெப்பெர்மின்ட் இலைகளை விட கூர்மையானதாக இருக்கும்.
  ஈரப்பதமான வெப்பநிலையில் செழிப்பான மண்ணில் புதினா வளரும்.
  புதினா விதைகள் மிகச் சிறியதாகவும், விதைப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.
  புதினா செடிக்கு பல வித இயற்கை நன்மைகள் இருப்பதால், எடை குறைப்பில் இது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் உடல் பருமனைக் குறைத்து அழகாக மாற்றுவது மட்டும் இதன் வேலை இல்லை. புதினாவின் மற்ற நன்மைகளைக் குறித்து கீழே காணலாம்.


 • பதட்டத்தைத் தவிர்க்கிறது புதினா

  புதினா டீயை சூடாக பருகுவதால் உங்கள் பதட்டம் தவிர்க்கப்படுகிறது.
  பதட்டத்தைக் குறைத்து அமைதி படுத்துவதற்காக ஹோமியோபதி மருத்துவர்களால் புதினா பயன்படுத்தப்படுகிறது.


 • நன்மைகள்

  புதினா மிக அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் கொண்டது. வளிமண்டலத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராட புதினா உதவுகிறது.

  இதய நோய், சீரழிவு நோய், நரம்பு மண்டல நோய் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுக்க புதினா உதவுகிறது. வயிற்று வலியைப் போக்க புதினா உதவுகிறது.

  புதினாவில் மென்தால் இருப்பதால் குடல் தொடர்பான தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கிறது. அஜீரணம் மற்றும் வயிறு வலி போன்றவற்றிற்கு புதினாவை உபயோகிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.


 • சமையலில்

  பொதுவாக எடை குறைப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் புதினா, சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருள். பல்வேறு உணவுகளுக்கு ஒரு புதிய பிரெஷ் சுவையைத் தருவது புதினா என்பது மறுப்பதற்கில்லை.

  MOST READ: இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்... • புதினா டீயை தயாரிப்பது எப்படி?

  புதினா டீயை எப்படி வேண்டுமானாலும் தயாரிக்கலாம். இதன் தயாரிப்பில் பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றில் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன


 • ஆரஞ்சு சேர்த்த புதினா டீ

  தேவையான பொருட்கள்:
  ஒரு ஆரஞ்சு பழத்தின் தோல் மட்டும்
  2 ஸ்பூன் புதினா இலைகள் (30 கிராம்)
  2 கப் வெந்நீர் (500 மிலி )

  செய்முறை

  முதல் கட்டமாக, ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து அந்த தோலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதன் சதைப் பகுதி டீயில் கொதிக்கும்போது மிகவும் கசப்பாக இருக்கும்.
  வெந்நீரில் புதினா மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலை போட்டு பாத்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு ஆறியவுடன் ஐஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து பருகவும்.


 • ஏலக்காய் மற்றும் தேன் சேர்த்த புதினா டீ :

  தேவையான பொருட்கள்:
  1 கப் வெந்நீர்
  2 ஸ்பூன் புதினா இலைகள் (30 கிராம்)
  ஒரு ஸ்பூன் நுணுக்கிய ஏலக்காய் (15 கிராம்)
  தேன் (சுவைக்கேற்ப)
  எலுமிச்சை சாறு (சுவைக்கேற்ப)

  செய்முறை

  ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீருடன் புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  இதில் நுணுக்கி வைத்த ஏலக்காயை சேர்க்கவும்.
  5 நிமிடம் கொதித்தவுடன், இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  விரும்பினால் இந்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இனிப்பு சுவையை விரும்புபவர்கள், சிறிது தேன் சேர்த்து பருகலாம்.


 • பெப்பெர்மின்ட் புதினா டீ

  2 ஸ்பூன் க்ரீன் டீ (30கிராம்)
  1/2 கப் புதினா இலைகள் (100 கிராம்)
  1 ஸ்பூன் சர்க்கரை (15 கிராம்)
  1/2 கப் பெப்பெர்மின்ட் இலைகள் (100 கிராம்)
  4 கப் தண்ணீர் (1 லிட்டர்)

  செய்முறை

  தண்ணீரைத் தவிர மற்ற பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
  பிறகு அந்த கலவையில் தண்ணீர் சேர்க்கவும்.
  நன்கு நிமிடம் கழித்து இன்னும் சிறிது புதினா மற்றும் பெப்பெர்மின்ட் இலைகள் சேர்த்து பரிமாறவும்.

  MOST READ: இந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம் சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்?


 • எடை குறைவதற்கான சில பானங்கள்

  புதினா டீ பருகுவதால் மட்டும் எடை குறைப்பு நிகழ்வதில்லை. மேலும் சில பானங்கள் பருகுவதால் கூட எடை குறைப்பு சாத்தியமாகும்.
  அவற்றுள் சிலவற்றை இப்போது காணலாம்.


 • லவங்கப் பட்டை டீ

  செரிமான மண்டலத்தின் இன்சுலின் எதிர்ப்பு தன்மையைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது லவங்கப் பட்டை.


 • க்ரீன் டீ

  உணவுக் கட்டுப்பாடு முறையுடன், வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, க்ரீன் டீ பருகுவதால், வளர்சிதை மாற்றம் அதிகரித்து, எடை குறைப்பு விரைவாகிறது.


 • ரெட் டீ

  உங்கள் உடல் எடை குறைய தினமும் ரெட் டீ பருகுவதை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் சிறுநீர் பிரிப்பு மற்றும் நச்சுகளைப் போக்கும் தன்மை உள்ளது.

  MOST READ: முடிக்கு வாசலின் தடவினா நல்லா வளருமாமே! எப்படி அப்ளை பண்ணணும்?


 • ப்ளாக் டீ

  எடை குறைப்பில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு டீ இந்த ப்ளாக் டீ . இதில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரால் மற்றும் டென்ஷன் பாதிப்புடன் போராட இந்த டீ பெரிதும் உதவுகிறது.
புதினா டீ எடை குறைப்பிற்கான ஒரு சிறந்த மருந்து. இது மட்டுமல்ல. புதினா டீ வயிற்று வலிக்கான சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது. அன்டி ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதால் சீரழிவு நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் அதிக உடல் எடையை குறைத்து சரியான எடையை அடைய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக அதற்கான முயற்சியில் இறங்குவார்கள். அவர்களின் எடை குறைப்பிற்கான பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது, எலுமிச்சை நீர், தொடர் உடற் பயிற்சி மற்றும் புதினா டீ போன்றவை ஆகும்.

கடந்த சில ஆண்டுகளில் புதினா டீ பருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த புதினாவின் நன்மைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, இந்த செடியைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

   
 
ஆரோக்கியம்