Back
Home » ஆரோக்கியம்
கல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..!
Boldsky | 12th Nov, 2018 03:18 PM
 • முக்கிய உறுப்புக்கே ஆபத்தா..?

  கிட்டத்தட்ட 10 செ.மீ அளவும், 1.4 கிலோ எடையும் இந்த கல்லீரல் கொண்டிருக்குமாம்.கல்லீரல் மூன்று முக்கிய செயல்களை செய்து வருகிறது. அழுக்குகளை நீக்குவது, பித்த நீரை உற்பத்தி செய்வது, சத்துக்களை சேகரிப்பது போன்றவற்றை செய்கின்றது. இத்தகைய முக்கிய வேளையை செய்து கொண்டிருக்கும் கல்லீரலில் கொழுப்புகள் சேர்த்து அடைப்புகள் ஏற்பட்டால் உடலின் மொத்த செயல்பாடும் நின்று விடும்.


 • வடிகட்டிய அரிசி நீர்

  பலருக்கு இந்த வைத்திய முறை சற்றே ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இது அதிக பயனை தர கூடியது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, அரிசியை வேக வைத்து, அதனை வடிகட்டிய பின்னர் மீதம் இருக்கும் நீரை நீங்கள் குடித்தால், கொழுப்புக்களை அகற்றி கல்லீரலின் செயல்பாட்டை வேகமாக வைத்து கொள்ளுமாம்.


 • இந்த சாறு போதுமே..!

  பலருக்கு கற்றாழையின் மகத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெறும் தலை முடிக்கு மட்டும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், முக்கிய உறுப்பான கல்லீரலை காப்பதற்கு கற்றாழை சாற்றை தொடர்ந்து எடுத்து கொண்டாலே போதும். இது அருமையான பலனை தர கூடியதாகும்.


 • மூக்கிரட்டை

  ஆயுர்வேத மூலிகைகளில் இந்த மூக்கிரட்டை அதிக அற்புத தன்மை வாய்ந்தது. இதனை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைத்து விடலாம். குறிப்பாக இந்த பொடியை வெது வெதுப்பான நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வருவது உங்களுக்கு அதிக பலனை தரும்.

  MOST READ: அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க..!


 • பப்பாளி

  கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை நீக்குவதற்கு ஒரு அருமையான வைத்தியம் இந்த பப்பாளி தான். பப்பாளி மற்றும் இதன் விதைகள் கல்லீரல் கொழுப்பை சீக்கிரமாகவே வெளியேற்றி விடுமாம். இதனை ஒரு சில முறையுடன் சாப்பிட்டால் பலன் அதிகம் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 • எவ்வாறு எடுத்து கொள்ளலாம்..?

  பப்பாளியை துண்டு துண்டாக அரிந்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் அருமையான பலனை அடைய முடியும். மேலும், இவை கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு சிறந்த முறையாக உள்ளது. அடுத்து, பப்பாளியின் விதைகளை அரைத்து நீருடன் கலந்து தினமும் குடித்து வரலாம்.


 • மோர்

  நம்மில் பலருக்கு தினமும் பால் குடிக்கும் பழக்கமே அதிகம் இருக்கும். ஆனால், பாலில் இருந்து தயாரிக்கபடுகின்ற இந்த மோரை தினமும் குடித்து வந்தால் கல்லீரலுக்கு வர கூடிய ஆபத்தை எளிதாக தடுத்து விடலாம். அத்துடன் நாள் முழுக்க அதிக சுறுசுறுப்புடனும் இது இருக்க செய்கிறது.


 • மஞ்சள்

  மகத்துவங்கள் நிறைந்த மஞ்சளை நாம் உணவில் போதுமான அளவு சேர்த்து கொண்டாலே எல்லா வித நோய்களில் இருந்தும் தப்பி விடலாம். கல்லீரலில் கொழுப்புக்களை கரைக்க 1 கிளாஸ் நீரில் 1/4 ஸ்பூன் மஞ்சளை போட்டு தொடர்ந்து குடித்து வரலாம். அல்லது, பாலில் மஞ்சளை கலந்தும் குடித்து வரலாம். இந்த முறை அருமையாக வேலை செய்யும்.

  MOST READ: படத்தில் காட்டும் முத்திரையை நீங்கள் செய்தால், உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு தெரியுமா...? • நெல்லி கனி

  பல மருத்துவ பயன்களை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் இந்த நெல்லி கனி கல்லீரலில் உள்ள கொழுப்புகளை எளிதில் நீக்க கூடியது. நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்கனி ஒன்றை தினமும் எடுத்து கொண்டால் கொழுப்புகள் நீங்கி விடும். இவை உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் தீர்வை தருகிறது.


 • இதை முதலில் தவிருங்கள்..!

  பலருக்கு கல்லீரல் பாதிப்படைய முதன்மையான காரணமாக இருப்பது குடி பழக்கம் தான். அத்துடன் அடிக்கடி சாப்பிடும் கொழுப்பு உணவுகள் தான். இவை தான் கல்லீரலில் முக பெரிய எமனாக இருக்கிறது. எனேவ, மேற்சொன்ன ஆயுர்வேத முறைகளை பயன்படுத்தி உங்களின் கல்லீரலை பாதுகாத்து கொள்ளுங்கள்.
  மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் நாளுக்கு நாள் சீர்கேடு அடைந்து கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் காரணத்தை நாம் அடுக்கி கொண்டே போகலாம். உடலில் உள்ள உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டே போனால் மிக விரைவிலே மரண வாசலை நாம் எட்ட வேண்டி இருக்கும்.

அந்த வரிசையில், அபாயகரமான நிலையில் உள்ள உடல் உறுப்புகளில் இந்த கல்லீரலும் உள்ளது. கல்லீரலில் சேர கூடிய தேவையற்ற கொழுப்புகள் தான், அதனை முழுமையாக பாதிக்க செய்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து கல்லீரலை காக்க, நமது முன்னோர்கள் சொல்லி தந்த ஆயுர்வேத முறைகளை பின்பற்றினாலே போதும்.

   
 
ஆரோக்கியம்