Back
Home » ஆரோக்கியம்
கால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா? உடனே என்ன செய்ய வேண்டும்?
Boldsky | 12th Nov, 2018 01:20 PM
 • நீர்த்தேக்கம்

  நீர் தேங்கும் பகுதியில் உள்ள திசுக்கள் அங்குள்ள நச்சு நீரால் அழற்சியாகி அந்த நீர் அப்படியே இரத்த நாள்களுக்கு செல்லுகிறது. இதனால் கால் பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் வலி கூட ஏற்படுகிறது.
  இந்த நீர்த் தேக்கத்தை எப்படி கையாள்வது என்பதை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

  MOST READ: முடிக்கு வாசலின் தடவினா நல்லா வளருமாமே! எப்படி அப்ளை பண்ணணும்? • காரணங்கள்

  அதிக உடல் எடை

  அதிகப்படியான உடல் எடை கொண்ட பெண்கள், ஆண்களுக்கு இந்த கால்களில் நீர்த் தேக்கம் ஏற்படுகிறது.


 • அதிக நேரம் உட்கார்தல்

  இரயில் மற்றும் விமானத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதாலும் இந்த கால்களில் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.


 • மருந்துகள்

  நீங்கள் சாப்பிடும் சில மருந்துகள் இந்த நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் சில குறிப்பிட்ட மருநு்துகள் எடுத்துக் கொள்ளும்போது இந்த நீர் கோர்த்தல், வீக்கங்கள் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக உங்களுடைய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அல்லது அந்த குறிப்பிட்ட மருந்துகளை மாற்றச் சொல்லுங்கள்.


 • கால்களில் அடிபடுதல்

  மூட்டுகளில் ஏற்படும் விபத்துகள் இதனால் கூட கால்களில் நீர்த்தேக்கம் ஏற்படலாம்.
  வெரிகோஸ் வீன்ஸ் போன்றவற்றாலும் கூட, நீர் கோர்த்தல் ஏற்படும்.

  MOST READ: உடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி?


 • சிறுநீரக பிரச்சினை

  இதய நோய்கள் மற்றும் இரத்த ஓட்ட பாதிப்புகள்
  மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை
  அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்த்தல்


 • உணவில் உப்பை அதிகம் சேர்த்தல்.

  எனவே இந்த நீர்த்தேக்எத்தை சரியாக கண்டு கொள்றவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இந்த நீர்த் தேக்கத்தை போக்க சில வீட்டு முறைகள் உள்ளன. அதையும் செய்து பார்க்கலாம்.


 • பெருஞ்சீரக டீ

  பெருஞ்சீரக டீ இந்த நீர்த் தேக்கத்தை போக்க உதவுகிறது. இந்த டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சாப்பிட்டு 15 நிமிடங்கள் கழித்து எடுத்து கொண்டு வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

  தேவையான பொருட்கள்

  1 டீ ஸ்பூன் பெருஞ்சீரகம் (5 கிராம்)
  1/2 டீ ஸ்பூன் நட்சத்திர வடிவ பூ(3 கிராம்பு)
  1 கப் தண்ணீர் (200 மில்லி லிட்டர்)

  தயாரிக்கும் முறை

  ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து மேலே உள்ள பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்.
  20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவு‌ம்.
  பிறகு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.


 • குதிரைவாலி மூலிகை டீ

  நீர்த்தேக்கத்தை சரி செய்ய இது சிறந்தது. மருந்து கடைகளில் இது கிடைக்கிறது.
  அடைபட்ட இரத்த ஓட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்கிறது.
  இதிலுள்ள சிலிக்கான் சருமத்தை புதுப்பித்து பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்கிறது.
  நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது.
  இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  எனவே நீர்த்தேக்கம் உள்ளவர்கள் இந்த டீயை காலையில் குடித்து வந்தால் நல்லது.

  MOST READ: கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?


 • உப்பு

  நீர்தேக்கத்திற்கு முக்கிய காரணம் அதிகப்படியான உப்பை எடுத்துக் கொள்வது. எனவே தினசரி சரியான அளவு உப்பை மட்டுமே உணவில் சேர்க்க வேண்டும்.
  அதிகப்படியான உப்பால் கால்களில் நீர் தேங்கி அந்த நீர் வியர்வை சிறுநீர் வழியாக வெளியேற முடியாமல் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.


 • செய்ய வேண்டியவை

  உப்பைத் தவிர்த்து சேச்சுரேட்டேடு உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள செயற்கை பானங்கள், ஸ்வீட்ஸ், மைதா போன்ற உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  எனவே இதையெல்லாம் தவிர்த்து உணவில் கீழ்க்காணும் பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்
  வெங்காயம்
  அஸ்பாரகஸ்
  பார்சிலி
  செலரி
  கூனைப் பூ
  கீரைகள்
  தண்ணீர் பழம்
  பேரிக்காய்
  அன்னாசி
  வாழைப்பழம்
  முலாம் பழம்
  சுருள் வகை செடி (என்டிவ்)
  கத்தரிக்காய்.


 • அதிக நீர் அருந்துங்கள்

  நீர்த்தேக்கம் ஏற்பட்டால் முதலில் அதிக நீர் அருந்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
  மேலும் ஒரேடியாக தண்ணீர் குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்ளுங்கள்.

  MOST READ: உங்க முடி இப்படி ரொம்ப வறண்டு போயிடுதா? அப்போ ஆலிவ் ஆயிலை இப்படி தேய்ங்க...


 • தினமும் அரைமணி நேரம் நடங்கள்

  நடப்பதற்கான ஆடைகள், காலணிகளை அணிந்து கொண்டு தினமு‌ம் அரைமணி நேரமவவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் இரத்த குழாய் களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. இதனால் உங்கள் சருமம் எலாஸ்டிக் தன்மையுடன் இருக்கும். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களால் ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.
உடலில் நீர்த் தேக்கம் ஏற்பட முக்கிய காரணம் உடலில் தேங்கும் அதிகப்படியான சோடியம் ஆகும். இந்த சோடியத்தால் திசுக்கள் அழற்சிக்குள்ளாகிறது. இந்த பிரச்சினை வராமல் தடுக்க அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் சேச்சுரேட்டேடு கொழுப்புகளை தவிர்க்க வேண்டும்.

இந்த நீர்த்தேக்கத்தால் கால்கள் வீங்கி போய் நடக்க முடியாத அசெளகரியமான சூழல் உருவாகும். இந்த கால்களில் ஏற்படும் நீர்த்தேக்கம் பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குகிறது. அதிலும் கோடை காலங்களில் மற்றும் உடலின் சீரோட்ட நிலையில் ஏற்படும் பாதிப்பால் இது ஏற்படுகிறது.

   
 
ஆரோக்கியம்