Back
Home » ஆரோக்கியம்
கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்...!
Boldsky | 13th Nov, 2018 02:38 PM
 • ஏன் இந்த நிலை..?

  இன்று நாம் இந்த மோசமான நிலையை அடைந்ததற்கு பல முதன்மையான காரணிகள் கூறப்படுகிறது. குறிப்பாக விரைவு உணவுகள், பாக்கெட்டில் அடைபட்ட உணவுகள், பீட்சா, பர்கர், செயற்கை இனிப்பு மற்றும் நிறமூட்டிய உணவுகள் போன்றவற்றால் தான் நாம் இன்று உடல் பருமனால் அவதிப்படுகின்றோம்.


 • தேனும் பூண்டும்..!

  நம்மில் பலருக்கு ஆயுர்வேத முறைகளில் பயன்படுத்த கூடிய வீட்டு மூலிகைகளை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல மூலிகைகள் நமது வீட்டிலே எளிமையாக கிடைக்கிறது. அந்த வரிசையில் இந்த பூண்டும், தேனும் அடங்கும். இவை உங்களின் கொலஸ்ட்ராலை கரைக்க பெரிதும் உதவும்.


 • தயாரிக்கும் முறை எப்படி..?

  முதலில் 20 பூண்டு பற்களை எடுத்து கொண்டு தோல் உறித்து, அதனை நசுக்கி கொள்ளவும். பிறகு இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு கொண்டு, இவை மூழ்கும் அளவுக்கு தேனை இதனுள் சேர்க்க வேண்டும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும், இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தி வரலாம்.


 • ஜின்செங்க் (குண சிங்கி)

  ஏராளமான மூலிகை தன்மைகளை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த ஜின்செங்க் (குண சிங்கி). ஆசிய கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக இவை பயன்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ராலை முற்றிலுமாக வெளியேற்றி இதயத்தை பாதுகாப்பாக வைக்க இவை உதவுகிறது.

  MOST READ: தினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..! • மூலிகை டீ தெரியுமா..?

  உங்களின் உடலுக்கு பேராபத்தை தர கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை எளிதாக கரைக்க கூடிய சக்தி இந்த மூலிகை டீயிற்கு உள்ளது. epigallocatechin gallate (EGCG) என்கிற முக்கிய மூல பொருள் இந்த மூலிகை டீயில் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை சீக்கிரமாகவே இவை கரைத்து விடும்.
  தேவையானவை :-
  கிரீன் டீ 1 ஸ்பூன்
  தேன் 1 ஸ்பூன்
  தண்ணீர் 1 கப்


 • தயாரிக்கும் முறை...

  முதலில் 1 கப் நீரில் கிரீன் டீயை சேர்த்து கொண்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு எடுத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த டீயை தினமும் 2 முறை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் கரைந்து விடும்.


 • துளசி

  மூலிகை தன்மை அதிகம் நிறைந்த இந்த துளசியின் மகிமை நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தது தான். என்றாலும், இவை கொலஸ்ட்ராலை சரி செய்ய உதவும் என்பதே புதுவிதமான தகவல். உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதில் துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 • எளிய முறை இதுவே..!

  1 எலுமிச்சை இருந்தால் போதும். உடல் எடை சார்ந்த பல பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளியை வைத்து முடியும். குறிப்பாக இந்த வைத்தியம் உங்களின் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவும்.
  தேவையானவை :-
  தேன் 1 ஸ்பூன்
  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  1 கப் நீர்

  MOST READ: கல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..! • தயாரிக்கும் முறை...

  முதலில் நீரை சூடு செய்து கொள்ளவும். மிதமான சூட்டில் இருக்கும் பட்சத்தில் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த டீயை வெறும் வயிற்றில் தினமும் 1 முறை குடித்து வரலாம்.


 • கொத்தமல்லி

  உணவில் கடைசியாக சேர்த்து கொள்ளும் இந்த சிறிய வகை கீரைக்கு எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. இதனை தினமும் உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் எளிதில் கொலஸ்ட்ராலை இவை கரைத்து விடும். அத்துடன் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதையும் இது தடுக்கும்.


 • ஆளி விதைகள்

  இந்த சிறிய வகை விதைகளை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய இந்த விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. மேலும், இவை மாரடைப்பு போன்றவற்றை தடுக்கவும் செய்கிறது.


 • 1 ஸ்பூன் சாப்பிடுங்க..!

  வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள வெந்தயத்தை தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உங்களின் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வர கூடும். மேலும், இவை செரிமான மண்டலத்தையும் சீராக வைத்து கொள்ளும்.
  எனவே, இந்த பதிவில் கூறிய ஆயுர்வேத முறைகளை பயன்படுத்தி கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பிறருடன் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள் நண்பர்களே.

  MOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே

இன்றைய காலகட்டத்தில் நாம் வீட்டு உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது. வீட்டில் இருக்கும் உணவுகளை நாம் சாப்பிட்டு வந்த வரைக்கும் உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற பிரச்சினை குறைந்த அளவில் இருந்தது.

குறிப்பாக கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக சேர்வதால் உடல் எடை கூடுதல், இதய கோளாறுகள், புற்றநோய் போன்ற மிக மோசமான நிலைக்கு நாம் வந்து விடுகின்றோம். இதனை சரி செய்ய சித்தர்கள் பல வகையான ஆயுர்வேத மூலிகைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துள்ளார். அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.

   
 
ஆரோக்கியம்