Back
Home » ஆரோக்கியம்
வெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா..? அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்...!
Boldsky | 14th Nov, 2018 01:53 PM
 • ஏன் தொப்பை போடுகிறது..?

  பலருக்கு இந்த கேள்வி கட்டாயம் இருக்கத்தான் செய்யும். சிலருக்கு அதிகமாக சாப்பிட்டதால் தொப்பை போடும். சிலருக்கு எதையும் சாப்பிடாமலே தொப்பை போடும். பொதுவாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், நொறுக்கு தீனிகளை எந்நேரமும் சாப்பிடுவதாலும் தொப்பை போடும். எதையுமே சாப்பிடாமல் இருந்தால் வயிற்று பகுதி உப்பசம் பெற்று தொப்பையாக மாறும்.


 • மிக பெரிய மன உளைச்சல்..!

  பாடி ஷேமிங்(Body shaming) என்கிற ஒன்று பல இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, ஒருவரை உடல் அளவில் கேலி அல்லது அவமானப்படுத்தினால் அதை Body shaming என்பர். குறிப்பாக ஒருவர் குண்டாக தொப்பையுடன் இருந்து விட்டால் போதும், உடனே அவரை எப்போது பார்த்தாலும் "குண்டா, குண்டி, தொப்பை" போன்ற வார்த்தைகளால் அழைப்பார்கள். இதுவே பலரின் மன உளைச்சலுக்கு காரணமாக உள்ளது.


 • மாயாஜாலம் நிகழ்த்தும் நீர்..!

  விரைவிலே உங்களின் தொப்பையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால் உங்களுக்கு ஒரு அருமையான ஒரு வழி உள்ளது. அது தான் இந்த சீரக இஞ்சி நீர். இவை இரண்டின் கலவை உண்மையில் பல மாயாஜாலங்களை நிகழ்த்த கூடியது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


 • உடல் பருமனுக்கும் ஏற்றது..!

  சீரக இஞ்சி நீரின் தன்மை அதி அற்புதமானது. இந்த நீரால் உடல் எடையும் குறைய தொடங்கும். குறிப்பாக உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க கூடிய தன்மை இந்த நீருக்கு உள்ளது. எனவே, இதனை குடிப்பதால் உடல் எடையும் குறைந்து விடும்.

  MOST READ: கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..! • புற்றுநோய்க்கும் உகந்த நீர்..!

  இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது. புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இந்த நீருக்கு உள்ளதாம். குறிப்பாக மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும்.


 • என்ன செய்யலாம்..?

  தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பியை குறைத்து விடலாம். இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க ஒரு சில முக்கிய பொருட்கள் தேவைப்படுகிறது.
  இஞ்சி சிறு துண்டு
  சீரகம் 1 ஸ்பூன்
  எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்


 • செய்முறை :-

  500 ml நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின், மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு, அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும். 250 ml வரும்வரை இந்த நீரை கொதிக்க விட்டுஇறக்கி கொள்ளவும். இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து, தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.


 • கலோரிகளை கரைக்க

  அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளும், கொலஸ்ட்ராலும் தான் இந்த நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது. மேலும், அதிக படியான கலோரிகளை கரைப்பதற்கு ஓடவோ, பெரிய பெரிய ஜிம் சாதனங்களை பயன்படுத்துவதை காட்டிலும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது.

  MOST READ: ஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா..? அப்போ இதை செய்யுங்க போதும்..! • சர்க்கரையை கட்டுக்குள் வைக்க...

  இஞ்சி சீராக நீரை குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். மேலும், எதிர்ப்பு சக்தியையும் இந்த நீர் இரட்டிப்பாக கூட்டும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடன் இருக்க இதன் நீர் உங்களுக்கு பெரிதும் உதவும்.


 • இதயம் காக்கும் நீர்

  உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இந்த நீர் குறைப்பதால் தொப்பை நிச்சயம் குறையும். அத்துடன், கொலெஸ்ட்ராலால் ஏற்படுகின்ற இதய நோய்கள் மற்றும் மாரடைப்புகள் ஆகியவையும் இந்த நீரால் தடுக்க படுகிறது. எனவே தினமும் காலையில் இந்த நீரை குடித்து வாருங்கள் நண்பர்களே.
  இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிர்ந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
இன்று பலரின் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை கூடுதல் தான். இது ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்க கூடிய மிக மோசமான தொல்லையாக உள்ளது. உணவு கட்டுப்பாடு இல்லையென்றால் குறிப்பாக இந்த நிலை ஏற்படும். உடல் எடை கூடி கொண்டே போவதால் இதய கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை வர கூடும்.

இதன் தாக்கத்தால் தொப்பையும் அளவுக்கு அதிகமாக பெரிதாகி கொண்டே போகிறது. தொப்பையை சரி செய்ய இனி நீங்கள் இந்த சீரக-இஞ்சி நீரை குடித்த வந்தாலே போதும்ங்க..! வெறும் 10 நாட்களிலே உங்களின் தொப்பையை இந்த நீர் குறைந்து விடும். இதை எவ்வாறு தயார் செய்வது என்பதையும், எப்படி ஒத்து தொப்பையை குறைக்கும் என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்