Back
Home » ஆரோக்கியம்
இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா? அப்படின்னா உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம்
Boldsky | 15th Nov, 2018 11:55 AM
 • எப்படி கண்டறிவது

  நமது நோயெதிர்ப்பு மண்டலம் போர் வீரர்களைப் போல் செயல்படக் கூடியது. அந்நியக் கிருமிகள் உள்ளே நுழையும் போது அதை அழித்து நமது உடலை காப்பது தான் இதன் வேலை. இந்த மண்டலம் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் இவற்றால் உருவான ஒரு பாதுகாப்பு கட்டமைப்பாகும்.

  இந்த செல்கள் தான் வெள்ளை அணுக்கள் என்று அழைக்கப்படுகிறது. எந்த உறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதோ அதை பாதுகாப்பது இதன் கடமை. இந்த வெள்ளை அணுக்கள் தைமஸ், மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் அமைந்துள்ளது. இது லிம்போடிக் உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.

  இந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

  MOST READ: வெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன? எது உடம்புக்கு நல்லது?


 • சோர்வு

  நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போதே மிகச் சோர்வாகவும் பலவீனமாகவும் தென்படுவதை சாதரணமாக விட்டு விடாதீர்கள். மேலும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


 • தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல்

  சிறுநீரக தொற்று, வயிற்று பிரச்சினைகள், அழற்சி, சிவந்த பல் ஈறுகள், வயிற்று போக்கு போன்றவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்த தை குறிக்கிறது. அதனால் நோய்க்கு காரணமான வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்று அர்த்தம்.


 • ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண்

  ப்ளூ, சளித் தொல்லை மற்றும் தொண்டை புண் அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து உள்ளது. எனவே உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

  MOST READ: உங்க நாக்குலயும் இப்படி வெள்ளையா இருக்கா? அது ஆபத்தா? எப்படி சுத்தப்படுத்தலாம்?


 • அழற்சிகள்

  சில பேர்களுக்கு அடிக்கடி அழற்சி ஏற்படும். சுற்றுப்புற தூசிகள், மாசுக்கள் போன்றவை சரும அழற்சி, சுவாசப் பாதை அழற்சியை ஏற்படுத்தும். இதுவும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதை காட்டுகிறது.


 • காயங்கள் ஆற நாளாகுதல்

  வெட்டு காயங்கள், சருமக் காயங்கள் ஆற நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது. இந்த நீண்ட நாட்கள் ஆகியும் காயங்களில் வலி, அழற்சி மற்றும் தொற்று ஏற்படுதல். இவ்வாறு இருந்தால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிப்படைந்து உள்ளது என்று அர்த்தம்.

  MOST READ: உலக சர்க்கரை நோய் தினம்: இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது...


 • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது எப்படி?

  ஆரோக்கியமான உணவுப் பழக்கம்

  ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆரோக்கியமான உடல் நலத்தை தரக் கூடியது. எனவே காய்கறிகள், புரோட்டீன், பழங்கள், சர்க்கரை குறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்து கொள்வது, கொழுப்புகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்ப்பது போன்றவற்றை செய்யுங்கள்.

  சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பப்பாளி, திராட்சை, தக்காளி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


 • போதுமான தூக்கம்

  போதுமான தூக்கத்தை தூங்குங்கள். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஓய்வு கொடுத்து நல்ல ஆற்றலுடன் செயல்பட உதவும். இன்ஸோமினியா போன்ற தூக்கமின்மை பிரச்சினை உங்க் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

  MOST READ: மரண பயத்தை கொடுக்கிறதா பன்றிக் காய்ச்சல்? இந்த சூப் குடிங்க... காய்ச்சல் உங்க பக்கமே வராது...


 • சுத்தமாக இருத்தல்

  சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுதல், பிராணிகளை தொட்ட பிறகு கைகளை கழுவுவது, வேலைகள் செய்த பிறகு கைகளை எழுவது போன்ற சுத்தமான காரியங்களை செய்யுங்கள்.

  காய்கறிகளை நன்றாக கழுவி விட்டு சமையுங்கள்.


 • மன அழுத்தத்தை சரியாக கையாளுங்கள்

  மன அழுத்தம் மட்டுமே போதும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க. நாள்பட்ட மன அழுத்தம் தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். நச்சுக்களை உடம்பில் சேர்த்து விடும். இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து பல நோய்கள் வர காரணமாக்கி விடும்.
  மேற்கண்ட முறைகளை பின்பற்றி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி கொள்ளுங்கள்.
நமது நோயெதிர்ப்பு மண்டலம் தான் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் இது நம்மை நோக்கி வரும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை களை எதிர்த்து போராடக் கூடியது.

இதன் மூலம் தான் நமக்கு வரும் நோய்களை நாம் தடுக்க முடியும். சரியற்ற உணவுப் பழக்கம், மன அழுத்தம் போன்றவை நம் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

   
 
ஆரோக்கியம்