Back
Home » ஆரோக்கியம்
உடல் எடையை விரைவிலே குறைக்கணுமா..? அப்போ ரோஸ் டீயை தினமும் குடித்தாலே போதும்..!
Boldsky | 15th Nov, 2018 12:43 PM
 • ரோஜா...ரோஜா..!

  ரோஜா பூவில் இவ்வளவு மகத்துவங்கள் இருக்கிறதா..? என்பது பலரின் கேள்வியாக இப்போது இருக்க கூடும். அழகிற்காகவும், அலங்காரத்திற்காகவும் மட்டுமே நாம் ரோஜாவை பயன்படுத்தி வந்தோம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி ரோஜாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக ரோஜாவை வைத்து டீ போன்று தயாரித்து குடித்தால் பலமடங்கு இதன் பலனை பெறலாமாம்.


 • எதிர்ப்பு சக்தியை கூட்ட...

  ரோஜாவில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை அதிக பலமுடன் வைத்து கொள்ளும். வெளியில் இருந்து உங்களின் உடலில் ஏதேனும் நோய் கிருமிகள்உட்புகுந்தால் அவற்றை எதிர்த்து போராட கூடிய தன்மை ரோஸ் டீயிற்கு உள்ளது.


 • என்றும் இளமை வேண்டுமா..?

  முக அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் என்றுமே இளமையாக வைத்து கொள்ள ரோஜா உதவுகிறது. அத்துடன் இதில் ஆண்டிசெப்டிக், ஆன்டி பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. இதனால் தான் கிளியோபாட்ரா போன்ற பல ராணிகள் அதிக காலம் இளமையாக இருந்தனர். முகத்தில் வரும் பருக்களையும் ரோஸ் டீ வராமல் தடுக்கும்.


 • உடல் எடையை குறைக்க

  உடல் எடையை குறைக்க இன்று ஒரு பெரிய கூட்டமே திண்டாட்டம் அடைந்துள்ளது. உங்களின் உடல் எடையை மிக விரைவில் குறைக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. தினமும் ரோஸ் டீயை 2 முறை குடித்து வந்தால் எடை குறைக்க உதவும். மேலும், அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் இது ஏற்படுத்தாது.

  MOST READ: வெறும் 10 நாட்களில் உங்களின் தொப்பையை குறைக்க, சீரக-இஞ்சி நீர் குடித்தாலே போதும்..!


 • செரிமான பிரச்சினை

  அளவுக்கு அதிகமான உணவுகளாலும், தேவையற்ற பழக்கத்தாலும் செரிமான கோளாறுகள் ஏற்படும். இதிலிருந்து விடுபட பலர் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த ரோஸ் டீ இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. செரிமான பிரச்சினை, குடல் பகுதியில் ஏற்படும் நோய்கள், போன்றவற்றை தடுக்கிறது.


 • சுவைமிக்க ரோஸ் டீ..!

  பல வகையான டீ இருந்தாலும் ரோஸ் டீக்கென்று தனி சிறம்பம்சம் உள்ளது. இதனை தயாரிக்க சில பொருட்கள் தேவை...
  ரோஜா இதழ்கள் 1 கப்
  தேன் 1 ஸ்பூன்
  தண்ணீர் 1 1/2 கப்


 • தயாரிக்கும் முறை...

  ரோஸ் டீயை தயார் செய்வது மிக எளிது. முதலில் ரோஜா இதழை நன்கு அலசி கொள்ளவும். பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றுள் ரோஜா இதழ்களை போடவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் இதனை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். நீரை மட்டும் வடிகட்டி கொண்டு, இறுதியாக தேன் சேர்த்து குடிக்கலாம்.


 • மலட்டு தன்மை, மாதவிடாய் வலிகளுக்கு

  ரோஸ் டீ ஒரு அற்புத மூலிகையாக நமது உடலுக்கு செயல்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகள், மற்றும் மலட்டு தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.
  தேவையானவை :-
  கருப்பு மிளகு தூள் 1 ஸ்பூன்
  தேன் 1 ஸ்பூன்
  ரோஜா இதழ்கள் 1 கப்

  MOST READ: கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..!


 • செய்முறை :-

  முதலில் தண்ணீரைகொதிக்க விட்டு, அதில் ரோஜா இதழை போடவும். 5 நிமிடம் கழித்து இதனை இறக்கி கொண்டு வடிகட்டி கொள்ளவும். இறுதியாக தேன் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து மாதவிடாய் காலங்களில் குடித்து வரலாம். மேலும், பெண்களின் மலட்டு தன்மை பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறதாம்.


 • மலச்சிக்கலை குணப்படுத்த

  மலச்சிக்கல் பிரச்சினை பலருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது எண்ணற்ற விளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்ற இந்த ரோஸ் டீயை தினமும் 2 முறை குடித்தாலே போதும். மலச்சிக்கல், வயிற்று போக்கு போன்ற பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும்.


 • வறண்ட தொண்டை

  வறட்டு இரும்பல் அல்லது தொண்டை சார்ந்த பிரச்சினை இருந்தால் 1 கப் ரோஸ் டீயை குடித்து வாருங்கள். இது அருமையான பலனை உங்களுக்கு தருகிறது. மேலும், தொண்டையில் உள்ள தொற்றுகளையும், கிருமிகளையும் இவை அழித்து விடுகிறதாம்.
  எனவே, நீங்களும் ரோஸ் டீயை குடித்து நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடு வாழுங்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.
காதல் என்றாலே அதனை குறிக்கும் ஒரே பூ ரோஜா தான். பல காதலர்களின் காதலுக்கு என்றும் நினைவு சின்னமாக விளங்குவது இந்த ரோஜாவே. இதை வெறும் பூ என்று சொல்வதோடு இதில் ஏராளமான மருத்துவ பயன்களும் உள்ளன. பல வகையான பூக்கள் இந்த பூமியில் இருந்தாலும் ரோஜாவிற்கென்று தனி தன்மை எப்போதும் உள்ளது.

உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு ஒரு அற்புத வழியை இந்த பூ காட்டுகிறது. உடல் எடையை சட்டென குறைக்க ரோஸ் டீ குடித்தாலே போதும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். மேலும், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கவும் இது உதவுமாம்.

   
 
ஆரோக்கியம்