Back
Home » Business
பூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..!
Good Returns | 5th Dec, 2018 10:41 AM
 • அதிர்ச்சி வைத்தியம்

  கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு செய்து விட்டு மூட்டை முடிச்சுகளோடு வந்த பயணிகளுக்கு , ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கைப்பேசியில் ஒரு குறுந்தகவலை அனுப்பி வைத்தது. உங்கள் பயணத்துக்கு நாங்கள் உத்தரவாதம். இதனை ஏற்க மறுத்தால் இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருந்து. அதிர்ச்சியடைந்த பயணிகள் விசாரித்தபோதுதான் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிய வந்தது. காய்ச்சல்னு காரணம் சொல்லி விமானிகள் எல்லோரும் லீவு எடுத்துக்கிட்டாங்கன்னு அவர்களுக்கு சொல்லப்பட்டது. இது என்னடா கணக்கு வாத்தியாருக்குப் பயந்து பசங்க லீவு போடுறமாதிரினு கேவலமா நினைக்கக் கூடாது. அக்டோபர் மாதம் முதல் சம்பளத்தையே கண்ணுல காட்டலைனா என்ன பண்றது..


 • புதிய முதலீட்டாளர்

  நன்மதிப்பின் விழுந்த அடியில்தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உரைத்தது. கடந்த மாதம் இறுதியில் விமானிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்ற முன் வந்துள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் புதிய முதலீட்டாளர் ஒருவர் நிறுவனத்தை நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவார் என தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார். சம்பளத் தேதியில் உள்ள தாமதம் தற்காலிகமானதுதான் என்ற அவர், 45 முதல் 60 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.


 • நம்பிக்கை

  நெருக்கடியை சமாளிப்பதற்கு முதலீட்டாளர்களும் கைவசம் இருக்கிறார்களாம். அவர்களின் பைகளில் உள்ள கரன்ஸி நிச்சயமாக நெருக்கடியைத் தீர்க்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான், ஊழியர்களுக்கு இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாக துபே தெரிவித்துள்ளார்.


 • கனவில் விழுந்த மண்

  டொமஸ்டிக் ஏவியேசன் மார்க்கெட்டில் அக்டோபர் மாதம் வரை 13.3 சதவீத பங்குகளை வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ், நிதிநிலையை உயர்த்தும் திட்டத்தில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவும், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றமும் பைனான்சியல் ஹெல்த்தை மோசமாக்கி விட்டது. இதனால்தான் ஊழியர்களுக்கு சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. அந்த நிறுவனம். அதனால் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் ஏர்வேஸ் நிறுவனத்தின் கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 • டைம் சரியில்லை

  செப்டம்பர் மாதம் இறுதியில் ஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் 8,052 கோடி ரூபாயாக இருந்தது.மூலதனத்தை உயர்த்தும் நோக்கத்தில் ஆகஸ்டு மாதத்தில் லீவரேஜ் மற்றும் லாயல்டி புரோம்கிராம்களுக்கு செலவிட்ட 2000 கோடி ரூபாயை நிறுத்தி வைத்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் நீண்ட நாட்களாக உள்ள குறைபாடுகளை நீக்கி, ஒரு தொலை நோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்கிறது ஏவியேஷன் கன்சல்டன்ஸி நிறுவனம்ன கபா இந்தியா...
பிரச்சினை எப்படி பெருசோ தீர்வும் அதேபோல நீளமா இருக்கும்போல.. நாள் கணக்கு, வாரக்கணக்காக இல்லாமல் மாதக்கணக்கில் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ். கிட்டத்தட்ட ஒரு எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது . இன்னும் 3 மாதங்களில் இதுகாறும் அனுபவித்து வந்த பாரத்தை புதிய முதலீட்டாளரின் மீது இறக்கி வைக்க இருப்பதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.. இதுக்குக் கூட இன்னும் மூன்று மாதங்கள் வரை பொறுமையா இருக்க வேண்டும் என, ஊழியர்களுக்கு அன்பு வேண்டுகோளை விடுத்துள்ளது.

   
 
ஆரோக்கியம்