Back
Home » உலக நடப்புகள்
எந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா?
Boldsky | 6th Dec, 2018 06:00 AM
 • மேஷம்

  தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கின்ற புதிய முயுற்சிகள் அனைத்துமே வெற்றியைக் கொடுக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகளுடைய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கத் தொடங்கும். தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரிக்கச் செய்வீர்கள். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். சொந்தமாக நீங்கள் செய்யும் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வேலையிடத்தில் உங்களுடைய தகுதிக்கு ஏற்ப முக்கியப் பொறுப்பு ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

  MOST READ: வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து வழிபட வேண்டுமென்றால் செய்ய வேண்டிய விதிமுறைகள் என்ன?


 • ரிஷபம்

  எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்த இலக்கினை அடைவீர்கள். அரசு அதிகாரிகளினுடைய உதவியினால் மனதுக்குள் நிறைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களுக்கு மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை வாங்கி வீட்டில் வைப்பீர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். வியாபாரங்களில் சில சின்ன சின்ன மாற்றங்களைச் செய்வதன் மூலமாக உங்களுக்கு தொழிலில் லாபங்கள் உண்டாகும். புதிதாக சில நட்பு வட்டத்தை உருவாக்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.


 • மிதுனம்

  உங்களுடைய பேச்சுத் திறமையினாலும் வாதத்திறமையாலும் சில முக்கியமான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பரம்பரை சொத்துக்கள் தொடர்பான சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தொழிலில் முடங்கியிருந்த சில பொருள்களை விற்றுத் தீர்ப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை செய்கின்ற இடத்தில் உங்களுக்கு இருந்த சில மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி, முன்னேறிச் செல்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

  MOST READ: மனிதன் இறக்கும்போது வலிக்குமா?... இன்னும் பல மர்மங்களுக்கு விடை இதோ...


 • கடகம்

  வீட்டில் இதுவரை இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வுறுபாடுகுள் நீங்க ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இதுவரையிலும் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நன்மையில் முடியும். உறவினர்கள் உங்களைப் பற்றியும் நீங்க்ள அவர்களையும் நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழிலில் உங்களுடைய வேலையாட்களின் நேர்மையால் நல்ல லாபம் உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.


 • சிம்மம்

  எந்த காரியமாக இருந்தாலும் நீங்கள் அதை திட்டமிட்டு செயல்படுவது தேவையில்லாத கால தாமதத்தை தவிர்க்க உதவும். உங்களுடைய முக்கிய பணியின் காரணமாக வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதற்கு வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உங்களுடைய முன்கோபத்தை கைவிடுவது நல்லது. வேலையிடத்தில் உங்களுக்குப் பின்னால் இருந்து சதித் திட்டங்கள் தீட்டுவது குறைந்து போகும். நீங்கள் எதிர்பாராத சில முக்கியமான பிரச்சினைகளின் மூலமாக உங்களுக்கு அவ்வப்போது மனதில் சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.


 • கன்னி

  வாழ்க்கையில் இதற்கு முன் உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் உங்களைத் தேடி வருவதற்கான சூழல்கள் உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி இடைவீர்கள். புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதற்கான அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்து விடுவீர்கள். பெரியோர்களுடைய முக்கிய ஆலோசனைகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.


 • துலாம்

  உங்களுடைய தொழில் சம்பந்தமாக உங்களுக்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்கம் போல இல்லாமல் அடுத்தவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உங்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து கொஞ்சம் நிம்மதி அடைவீர்கள். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருங்கள். வியாபாரங்களில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்றபடி முழு பலனும் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.


 • விருச்சிகம்

  ஆன்மீகத் துறையில் இருக்கின்ற பெரியவர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய நண்பர்கள் வட்டம் உருவாகும். அதன்மூலம் உங்களுக்குப் புதிய அனுபவங்கள் உண்டாகும். யாரிடம் பேசினாலும் கொஞ்சம் நிதானத்துடனும் அமைதியாகவும் பேசுங்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் யாவும் நீங்கி, எல்லாவற்றிலும் ஒரு தெளிவு பிறக்கும். வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்களே எதிர்பாராத இடங்களில் இருந்தும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

  MOST READ: இந்த 10 வேலை செய்றவங்கதான் குண்டாகிட்டே போவாங்களாம்... நீங்களும் இதான் செய்றீங்களா?


 • தனுசு

  வீடு வாங்குகின்ற எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வாகனங்களை பராமரிப்பு வேலை செய்வீர்கள் வியாபாரங்களில் இருநு்த மந்தநிலை மாறி வுகமாகும். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பு கூடிக்கொண்டே போகும். வெளியிடங்களில் இருந்து எதிர்பாராத தகவல்க்ள வந்து சேரும். உறவினர்குள் வழியாக உதவிகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.


 • மகரம்

  உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வழியில் நல்ல முன்னேற்றமும் ஒற்றுமையும் இருக்கும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்குகள் சம்பந்தப்பட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும். எந்த வேலையாக இருந்தாலும் அதை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.


 • கும்பம்

  உங்களுடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளால் பண லாபம் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். கடல் வழிப் பயணங்களின் மூலம் உங்களுக்கு சாதகமான அனுகூலமான செய்திகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

  MOST READ: நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...


 • மீனம்

  தந்தையின் வழி உறவினர்களிம் நிதானமாக நடந்து கொண்டு, கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் உள்ளவர்களின் மூலமான தேவையற்ற வீண் விரயச் செலவு ஏற்படும். கால்நடைகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் உங்களுக்கு சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். பதவி உயர்வினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

   
 
ஆரோக்கியம்