Back
Home » ஆரோக்கியம்
ஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா? வேறு என்னவெல்லாம் குடிக்கக்கூடாது?
Boldsky | 6th Dec, 2018 10:01 AM
 • கவனிக்க வேண்டியவை

  ஜிம்முக்கு தினமும் செல்பவர்கள் சில விஷயங்களை மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சியின் போதும், பயிற்சிக்குப் பின்னும் நிறைய லிக்வியூடு பானங்களாக குடிப்பது உடலுக்கு நல்ல ஸ்டாமினாவைக் கொடுக்கும் என்பது தெரியும். அதைத் தான் எல்லோரும் பின்பற்றுகின்றனர். ஆனால் என்ன மாதிரியான பானங்கள் குடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது மக அவசியம். என்ன குடிக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் என்ன குடிக்கக் கூடாது என்பதை அவசியம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம். அப்படி என்னென்ன பானங்கள் குடிக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

  MOST READ: குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது? விட்டா என்ன நடக்கும்?


 • ஜிம்முக்கு செல்லும் முன்

  உடற்பயிற்சியைத் தொடங்கும் போதே சில பானங்களைக் குடித்துவிட்டு, முட்டை போன்ற ஏதாவது சில உணவுகளைச் சாப்பிடுவது வழக்கம். அப்படி உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் குடிக்கக்கூடாத சில பானங்களைப் பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.


 • ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்

  பயிற்சியைத் தொடங்கும் முன்பாக ஸ்போர்ட்ஸ் ட்ரிங்கைக் குடித்தால் உடலுக்கு பயிற்சி செய்வதற்கான அதிக ஸ்டாமினா கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது கட்டாயம் தவறு. ஏனென்றால் அதில் அதிக அளவில் சர்க்கரை இருப்பதால் அது உடலின் மெட்டபாலிசத்தைக் கெடுத்துவிடும் முடிந்தவரையில் வீட்டில் தயாரிக்கும் பழச்சாறுகளைக் குடிப்பது நல்லது.


 • கார்பனேட்டட் பானங்கள்

  விளம்பரங்கள், தொலைக்காட்சிகளில் கூட உடற்பயிற்சி செய்கிற பொழுது ஸ்டாமினாவுக்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் கார்பனேட்டட் பானங்களைக் குடிப்பதாகத் தான் காட்டப்படுகிறது. ஆனால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  கார்பனேட்டட் பானங்களிலும் சர்க்கரையின் அளவு அதிகம். இது உங்களுடைய உடலை பாழாக்கிவிடும். அதிலும் உடற்பயிற்சிக்கு முன்பாக இதை குடித்தீர்கள் என்றால் வயிற்றில் வாய்வுத்தொல்லை, உடலில் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்.

  MOST READ: எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை? அட நீங்களும் இந்த ராசியா?


 • பால், பால் தொடர்புடைய பானங்கள்

  ஜிம்முக்கோ அல்லது வீட்டிலேயோ உடற்பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பாக சட்டாயமாக பால் குடிப்பதை நிறுத்த வேண்டும். பால் உடலுக்கு ஆரோக்கியமான பானம் தானே. அதில் அதிக அளவில் கால்சியம் இருக்கிறது என்றெல்லாம் நினைக்கலாம். அதேபோல் மில்க் ஷேக்குகள் எதுவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், பால் மற்றும் பால் பொருள்களில் அதிக புரதம் இருக்கிறது. பொதுவாகவே புரதங்கள் செரிமானம் அடைய நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் உங்களால் அதிகமாக உடற்பயிற்சி செய்ய முடியாது. அதனால் ஊட்டச்சத்து நிபுணர்களும் பால் பொருள்களை பயிற்சிக்குப் பின்பு எடுத்துக் கொள்ளவே பரிந்துரை செய்கிறார்கள்.


 • நிகோடின் (ம) காஃபினைன்

  காஃபினைன் மற்றும் நிகோட்டின் சம்பந்தப்பட்ட எந்த பொருள்களையும் உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக் கொள்ளவே கூடாது. இந்த வகையான பானங்கள் உங்களுடைய உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை முறையாகச் செலுத்துவதைத் தடுக்கும். அதனால் நீங்கள் பயிற்சி மேற்கொள்கிற பொழுது அதிகமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.


 • ஆல்கஹால்

  ஆல்கஹால் நம்முடைய உடலை குறிப்பாக கல்லீரலைத் தாக்கக் கூடியது என்பது நமக்கு நன்கு தெரியும். அதிலும் உடற்பயிற்சியின் போது நம்முடைய ரத்த அழுத்தம் இயல்பை விட கூடுதலாக இருககும். அதனால் கட்டாயமாக உடற்பயிற்சிக்கு முன்பாக ஆல்கஹகால் கூடவே கூடாது.

  MOST READ: இனிமேல வெறும் டீக்கு பதிலா அதுல இப்படி ஒரு பட்டையை போட்டு குடிங்க... ஏன்னு தெரியுமா?


 • இனிப்பான பழச்சாறு

  பொதுவாகவே பழச்சாறுகள் உடலுக்கு ஆரோக்கியமானவை தான். அது ஒரு நல்ல சாய்ஸ் தான். ஆனாலும் அதற்கான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் உங்களுடைய பிரக்டோஸ் அளவை அதிகரித்து விடும். ஒருவேளை உங்களுக்கு பயிற்சிக்கு முன்பாக நிச்சயம் ஏதாவது குடிக்க வேண்டும் என்று நினைத்தால் வீட்டில் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, லெமன், கிரேப், திராட்சை போன்ற பழங்களில் இருந்து இயற்கையாகப் பிழ்ந்த ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
தற்போதைய நவீன காலங்களில் எல்லோருமே தங்களுடைய உடலை மிகவும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான முயற்சிகளையும் கூட உண்மையாகவே அக்கறையோடு எடுக்கிறார்கள். அதற்கான எடுக்கின்ற மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்று காலையிலும் மாலையிலும் கட்டாயமாக ஜிம்முக்கு செல்வது.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மட்டும் முக்கியமல்ல. ஜிம்முக்கு செய்வதை விடவும் அதற்கு ஏற்றபடி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு எடுத்துக் கொள்வதும் உங்களுடைய டயட்டை மெயின்டெய்ன் செய்வது தான் மிக முக்கியம்.

   
 
ஆரோக்கியம்