Back
Home » ஆரோக்கியம்
ஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி?
Boldsky | 6th Dec, 2018 02:36 PM
 • ஆரோக்கியம்

  மனித உடலானது ஒரு இயங்கும் எந்திரம். இந்த எந்திரத்தில் அவ்வப்போது பழுதுகள் உண்டாகத் தான் செயயும். அந்த பழுதுகளுக்கு காரணமாக அமைவதும் அதே எந்திரங்கள் தான். சரியான பராமரிப்பு இருந்தால் தான் எந்தவொரு எந்திரமும் மிக சிறப்பாக வண்டி ஓட்ட முடியும். அதேபோல தான் நம்முடைய உடலும் சரியாகப் பராமரித்தால் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியில்லாமல் வாழ முடியும்.

  MOST READ: நட்புக்காக உயிரையே கொடுக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? தெரிஞ்சி பழகுங்க...


 • பல் பராமரிப்பு

  நம்முடைய உடலின் எல்லா பாகங்களுமே ஏதாவது ஒரு வகையில் மிக முக்கியப் பங்கை ஆற்றுகிறது. ஆனால் நாமோ நம்முடைய உடல் உள்ளுறுப்புகளை மட்டுமே உயிர் காக்கும் உறுப்புகளாகப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட உள்ளுறுப்புகள் கெட்டுப் போவதற்கு நம்முடைய வெளி உறுப்புகளை நாம் பராமரிக்காமல் இருப்பது ஒரு காரணம் என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். அதேபோல் உள்ளுறுப்புகள் பாதிப்பை வெளியுறுப்புகளின் சில மாற்றங்களின் அறிகுறிகளால் மட்டும் தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதில் பல் எந்த விதத்தில் நாம் பராமரிக்காததால் நம்முடைய உள்ளுறுப்புகளை பாதிக்கும். என்னென்ன மாதிரி பிரச்சினைகளை கொண்டு வரும் என்று விரிவாகப் பார்ப்போம்.


 • உடைந்த பல் - ஞாபகக் கோளாறு

  உங்களுடைய பல்லுக்கும் உங்கள் வயது மற்றும் நினைவாற்றலுக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய பற்களும் அதிலிருந்து செல்கின்ற வேர்களும் சில வகைகளில் நம்முடைய மூளையுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. அந்த பற்கள் உடைந்து விட்டிருப்பவர்களுக்கு நினைவாற்றல் குறித்த பிரச்சினைகள் இருக்கின்றன. அதன் தன்மை அவர்களுடைய வயதுக்கு ஏற்ப மாறுகிறது. வயதானவர்களுக்கு அவர்குளுடைய கடந்த கால நினைவுகள் மறந்து போவதாகவும் இளம் வயதினருக்கு எந்த பொருளை வைத்தோம் என்பது போன்ற சங்கிலி தொடர் போன்ற தொடர்புடைய சில விஷயங்கள் அடிக்கடி மறந்து போகும் வாய்ப்புண்டு.

  MOST READ: இன்னைக்கு இந்த ராசிக்காரர் மட்டும் வாயைத் திறக்காம இருக்கிறது நல்லது... திறந்தா நஷ்டந்தான்


 • பல் நோய் - இதய நோய்கள்

  நம்முடைய பல்லுக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தொடர்பு இருக்கிறது. இரண்டுக்குமே ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவை இரண்டுக்குமே அடிப்படை இரண்டுமே தொற்றினால் ஏற்படுகிறது. சமீபத்திய நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களும் ரிப்போர்களும் இதய நோய்கள் இருப்பவர்கள் குறித்த ரிப்போட்டுகளும் பொருத்திப் பார்க்கப்பட்ட பொழுது, இரண்டுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது. அதாவது இதய நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்திருக்கிறது. அதேபோல் பல் பிரச்சினைகள் இருந்தவர்களின் இதயத் துடிப்புகள் நார்மலாக இல்லை. அதனால் எப்போதும் பல்லை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.


 • பல் - அல்சைமர்

  அல்சைமர் என்னும் மறதி நோய் பல் மற்றும் ஈறுகள் தொடர்புடைய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் ஈறுகளில் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த அல்சைமர் என்னும் மறதி பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


 • பல் வலிமையும் மாரடைப்பும்

  ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே பற்களுடைய ஆரோக்கியத்துக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் மருத்துவர்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு அதிகமாக உண்டாகியிருக்கிறது. பல் சொத்தைக்கும் மாரடைப்புக்கும் நிறைய நெருங்கிய தொடர்பு இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

  MOST READ: எப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா?... அதுக்கு நீங்க பண்ற இந்த 5 விஷயம் தான் காரணம்...


 • பல் பாக்டீரியா - அல்சர்

  உங்களுடைய பற்களில் பாக்டீரியா தொற்றுக்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அல்சர் (வயிற்றுப்புண்) இருக்கும் என்று ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெலிகோபேக்டர் பைலோரி என்னும் பேக்டீரியா தாக்கம் இருந்தால் அதிலிருந்து வெளியேறும் அமிலம் உங்களுடைய ஜீரண மண்டலத்தை பாதித்து வயிற்று எரிச்சல், வலி மற்றும் வயிறங்றுப்புண் (அல்சர்) ஆகியவற்றை உண்டாக்குகிறது.


 • பல் - நுரையீரல்

  பற்களில் உண்டாகும் பாக்டீரியாக்கள் மற்றும் மற்ற நுண்ணுயிர்க் கிருமிகள் அங்கிருந்து நேரடியாக வாய் வழியாகச் சென்று நுரையீரலைத் தான் முதலில் தாக்குகின்றன. அதுபோன்ற சமயங்களில் பம்ப் பயன்படுத்துபவராக இருந்தால் இரண்டுக்கும் இடையில் ஒரு குழாய் ஒன்று வைத்துதான் சுவாசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நுரையீரல் பாதிப்பால் அவதிப்படுகிற பெரும்பாலானோருக்கும் பற்களின் வழியாக பாக்டீரியா தொற்றுக்கள் பரவியிருப்பது தெரிய வந்தது.


 • பல் பராமரிப்பு - எலும்பு நோய்

  அங்கங்கு மூட்டுகளில் வலியும் எலும்புத் தேய்மான பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களும் முதலில் சென்று பார்க்க வேண்டியது பல் மருத்துவரைத் தான். பற்களைச் சுத்தம் செய்து பாருங்கள். உங்களுக்கு மூட்டுக்களில் உண்டாகிற வலி போன்ற இன்னும் பல பிரச்சினைகள் குறைவதை உங்களால் உணர்ந்து கொண்டு விட முடியும்.


 • பல் நோய் - ஆண்மைக்குறைவு

  பல் பிரச்சினைகள் இருப்பவர்கள் குறிப்பாக பாக்டீரியா தொற்று இருப்பவர்களுக்கு விறைப்புத் தன்மை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் யோசித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும். இவை இரண்டுமே நரம்புகளுடன் தொடர்புடைய பிரச்சினையாபக இருக்கிறது. இரண்டு சம்பந்தப்பட்ட நரம்புகளும் நம்முடைய உடலின் ஏதோ ஒரு இடத்தில் இணைகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதிலும் பற்களில் இருந்து ரத்தம் வடிதல் பிரச்சினை இருப்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.


 • பல்லும் சர்க்கரை நோயும்

  ஒருவருடைய உடலில் தொற்றுக்குள் உண்டாகிவிட்டால், அதிலும் குறிப்பாக பற்களில் தொற்று உண்டாகிவட்டால் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு அபாய நிலைக்குப் போய்விடும் என்பதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக கார்பனேட்டட் பானங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டால் தான் பற்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதே பொருள்கள் தான் சர்க்கரை நோய்க்கும் காரணமாகின்றன. இதனுடைய தொடர்பு நாம் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று தான்.

  MOST READ: கோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா? வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க...


 • பல் நோய் - புற்றுநோய்

  உங்களுடைய பாதிக்கப்பட்ட பற்கள் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். அதிக அளவிான பாக்டீரியா தொற்று பற்களில் இருந்தால், அதிலும் குறிப்பாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இருந்தால் அது அவர்குளை மரணம் வரையிலும் கொண்டு போய் விடும்.

  பாக்டீரியா தொற்று அதிகரிக்க அதிகரிக்க 80 சதவீதத்துக்கும் மேல் வாய் புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
நீங்கள் தொடர்ந்து அடிக்கடி பல்லை சுத்தம் செய்வதற்கு உங்களுக்கு கண்ட கண்ட காரணத்தையும் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது நம்முடைய சுகாதாரம் சார்ந்த விஷயம். அது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய காரணங்கள் நிறைய உண்டு. பல்லில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை வெறுமனே பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். ஏனென்றால் அது நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும் காரியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

   
 
ஆரோக்கியம்