Back
Home » ஆரோக்கியம்
தேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?
Boldsky | 7th Dec, 2018 03:35 PM
 • சிறந்த கலவை...

  பல ஜோடிகள் இந்த பூமியில் உள்ளன. ஆனால், தேன் + தேங்காய் எண்ணெய் ஜோடி அவை அத்தனையையும் மிஞ்சி விட்டது. இது சற்று வித்தியாசமானதாக தான் இருக்கும். ஆனால், இந்த ஜோடி உங்களின் உடலில் செய்ய போகும் அற்புத மாற்றங்கள் ஏராளம். உச்சம் தலை உள்ளங்கால் வரை உள்ள எண்ணற்ற பிரச்சினைகளுக்கு இது தீர்வை தருகிறதாம்.


 • சுவாச கோளாறுகளுக்கு

  பல நாட்களாக சுவாச பிரச்சினையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு தான் இந்த குறிப்பு. நீங்கள் மிக விரைவிலே இதிலிருந்து விடுதலை பெற இது உதவும். இதற்கு தேவையானவை...
  தேன் 1/4 ஸ்பூன்
  தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  எலுமிச்சை 2 ஸ்பூன்
  வெது வெதுப்பான நீர் 1 கப்


 • செய்முறை :-

  முதலில் ஒரு பாத்திரத்தில் மேற்சொன்ன பொருட்களை எல்லாம் சேர்த்து கொள்ளவும். அடுத்து 3 முதல் 5 நிமிடம் மிதமான சூட்டில் சூடு செய்து கொண்டு, இந்த கலவையை வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடவும். இந்த வைத்தியம் உங்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாச பிரச்சினைகளில் இருந்து முழுமையாக காத்து கொள்ளும்.


 • மன நிம்மதிக்கு

  நாள் முழுவது இயந்திரம் போன்று உழைத்து தேய்ந்தவர்களுக்கு மன நிம்மதியும், நல்ல தூக்கமும் கிடைப்பது மிக கடினமாக உள்ளது. உங்களுக்கு சொர்க்கம் போன்று தூக்கத்தை தர இந்த குறிப்பு நச்சுனு வேலை செய்யுமாம்.
  தேவையானவை :-
  உப்பு 1/8 ஸ்பூன்
  தேன் 1/4 ஸ்பூன்
  தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

  MOST READ: படுக்கைக்கு போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..! மீறி சாப்பிடால் என்னவாகும்..?



 • செய்முறை :-

  முதலில் தேங்காய் எண்ணெய்யையும், தேனையும் நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். இந்த குறிப்பு உங்கள் மனநிலையை அமைதியாக வைத்து, ஆழ்ந்த உறக்கத்தை தரவல்லது. ஒரு முறை ட்ரை செய்து விட்டு, எப்படி வேலை செய்கிறதுனு கமெண்ட்ஸ்ஸில் பதிவிடுங்கள் நண்பர்களே.


 • முடி பிரச்சினைகளுக்கு

  பலருக்கு இந்த முடி பிரச்சினை மிக மோசமானதாக உள்ளது. முடி சேதமாவதாலே இந்த பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி தருகிறது இந்த குறிப்பு.
  தேவையானவை :-
  தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
  தேன் 1 ஸ்பூன்


 • செய்முறை :-

  தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை முதலில் நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இதனை தலையில் தடவவும். இவ்வாறு தடவும் போது உடைந்த முடி அல்லது அதிக வறட்சி கொண்டு பகுதியில் தடவவும். இது சிறந்த கண்டிஷனர் போன்று செயல்படும்.


 • இது ஒன்று போதுமே..!

  நீங்கள் அதிக பலத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க இந்த குறிப்பு நன்கு பயன்படும். இதனை தயாரிக்க தேவையானவை..
  இளநீர் 1 கப்
  தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
  தேன் 1 ஸ்பூன்
  அவகேடோ பழம் பாதி
  பெரிஸ் 1 கப்

  MOST READ: நம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?


 • செய்முறை :-

  முதலில் அவகேடோ பழம், இளநீர், தேங்காய் எண்ணெய், தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் பெரிஸ் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு குடிக்கலாம். இந்த் ஸ்மூத்தி உங்களுக்கு பலவித பயன்களை தரவல்லது.இதில் உள்ள வைட்டமின், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், தாதுக்கள் தான் உங்களின் உடலை அத்தியாகி ஆற்றலுடன் வைத்து கொள்ள உதவும்.


 • சரும பிரச்சினைகளுக்கு

  முகத்தில் ஏற்பட கூடிய பலவித சரும பிரச்சினைகளுக்கும் தீர்வை தருகிறது இந்த டிப்ஸ். அதற்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தாலே போதும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பு முகப்பருக்கள், அரிப்புகள், முகத்தின் அழுக்குகள், வறட்சி போன்ற பலவற்றிற்கு தீர்வை தரும்.




ஒரு சில உணவுகளை வேறொரு உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் பல மடங்கு அதன் நன்மைகள் ஏற்படுமாம். இது போன்று உணவுகளை கலந்து சாப்பிடுவதால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

அந்த வகையில் தேனும் தேங்காய் எண்ணெய்யும், மிக சிறந்த கலவையாக உள்ளது. இவற்றை சேர்த்து சாப்பிட்டால் உங்களின் நாள்பட்ட பிரச்சினைகள் அனைத்துமே பறந்து போய் விடும். வாங்க, தேன் + தேங்காய் எண்ணெய் = ? என்பதை இனி அறிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்