Back
Home » ஆரோக்கியம்
சித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா..? அப்போ இத சாப்பிடுங்க போதும்..!
Boldsky | 7th Dec, 2018 04:54 PM
  • நியாசின்


    வைட்டமின் பி3-யை பெரும்பாலும் நியாசின் என்றே அழைப்பார்கள். இது கொலஸ்ட்ராலை குறைக்கவும், சுவாச கோளாறு, தசை பிரச்சினை, ரத்த ஓட்டம், மூளை செயல்பாடு குறைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இவை தீர்வை தருகிறது.


  • காளான்


    காளானில் 71% இந்த வைட்டமின் பி3 உள்ளது. அத்துடன் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் இதில் நிறைந்திருக்கிறதாம். காளானை சாப்பிடுவதால் உங்களுக்கு எளிதில் வைட்டமின் பி3 கிடைத்து விடும். நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ இந்த காளான் உங்களுக்கு உதவும்.


  • வேர்க்கடலை


    பலருக்கு கடலை போடுவதும் சாப்பிடுவதும் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். கடலையில் வைட்டமின் பி3 அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் கடலையில் 69 சதவீதம் வைட்டமின் பி3 உள்ளது. இந்த சத்து கடலையில் அதிகம் உள்ளது என்பதற்காக அதிகம் சாப்பிடாதீர்கள். பிறகு கொலஸ்ட்ரால் உடலில் உயர்ந்து விடும்.


  • கிட்னி பீன்ஸ்


    கிட்னி வடிவத்தில் இருக்கும் இந்த பீன்ஸ் வகையில் அதிக நியாசின் உள்ளதாம். இதனை சூப் போன்றோ அல்லது குழம்பாகவோ செய்து சாப்பிட்டால் இதன் பலன் அப்படியே கிடைக்கும். எனவே இதனை சாப்பிட்டு வந்தால் எளிதில் வைட்டமின் பி3-யின் பயன்கள் கிடைக்கும்.

    MOST READ:காரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..!



  • சிவப்பு அரிசி


    வெள்ளை அரிசியை காட்டிலும் இந்த சிவப்பு அரிசி அதிக மகத்துவம் கொண்டது. இந்த அரிசியில் சமைத்து சாப்பிடுவதால் உங்களுக்கு வைட்டமின் பி3 மட்டுமில்லாமல் நார்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் கிடாவுக்கும்.


  • கோழியின் மார்பு


    மற்ற உணவு வகைகளை காட்டிலும் இந்த கோழியின் மார்பு பகுதியில் அதிக அளவில் வைட்டமின் பி3 இருக்கிறதாம். 100 கிராம் மார்பு பகுதியில் கிட்டத்தட்ட 74% இந்த சத்து உள்ளது. நீங்கள் இதனை சமைத்து சாப்பிட்டால் இதன் பலன் அதிகம் கிடைக்கும்.


  • முழு கோதுமை


    நியாசின் கொண்ட உணவுகளில் முழு கோதுமையும் ஒன்று. 30% இதில் வைட்டமின் பி3 இருக்கிறதாம். சாப்பிடும் உணவில் இந்த உணவு பொருளை சேர்த்து கொண்டால் எந்த வித உடல்நல குறைபாடும் இன்றி நீண்ட நாட்கள் வாழலாம்.


  • பயன்கள் #1


    இதய நோய்கள் வருவதை இந்த வைட்டமின் பி3 உணவுகள் குறைக்கிறது. ஏனெனில், இவை உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை சரியான அளவில் இருக்கும் படி பார்த்து கொள்கிறது. அத்துடன் உடலில் ரத்த ஓட்டம் சீராக செல்லவும் இது உதவுகிறது.

    MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு முன்ஜென்மம் இருந்துள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்


  • பயன்கள் #2


    ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த வைட்டமின் பி3 சிறந்த மருந்தாக உதவுகிறது. கொலஸ்ட்ராலை எப்படி கட்டுப்படுத்துகிறதோ அதே போன்று சர்க்கரை அளவை குறைத்து நம்மை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.


  • பயன்கள் #3


    மேற்சொன்ன வைட்டமின் பி3 உணவுகளை சாப்பிட்டால் நீங்கள் நீண்ட இளமையை பெறுவது எளிது. மேலும், சூரிய ஒளியில் இருந்தும் உங்களை காக்கும். உங்களின் சரும செல்களை எப்போதும் புத்துணர்வுடனே வைத்து கொள்ளும்.


  • பயன்கள் #4


    வைட்டமின் பி3 கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் உங்களின் மூளை திறன் இரட்டிப்பாகும். மேலும், ஞாபக சக்தி கூடும். மிக முக்கியமாக வைட்டமின் பி3 உங்கள் செரடோனின் ஹார்மோனை அதிகம் உற்பத்தி செய்து எப்போதும் மகிழ்ச்சியை தருகிறது.


  • பயன்கள் #5


    செரிமான கோளாறுகளை குணப்படுத்த வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் சிறந்தது. மேலும், உங்களுக்கு எந்தவித வயிற்று சமபந்தமான பிரச்சினைகளும் ஏற்படுவதையும் இது தடுத்து விடும்.

    MOST READ: தேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா..?





நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ யாருக்கு தான் ஆசை இருக்காது. சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்க்காம சாப்பிட்டு வந்தாலே அதிக ஆயுளுடன் இருக்க முடியும். எந்தெந்த உணவுகள் அப்படி இருக்குனு யோசிக்கிறீங்களா..?

நீங்கள் வைட்டமின் பி3 உணவுகளை தினமும் சேர்த்து சாப்பிட்டாலே ஏராளமான வித நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். எந்தெந்த உணவுகளில் வைட்டமின் பி3 இருக்கிறது, அவற்றை சாப்பிடுவதால் எப்படி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும் என்கிற பல தகவல்களை இனி இதில் தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்