Back
Home » ஆரோக்கியம்
தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்?
Boldsky | 7th Dec, 2018 05:03 PM
 • ஊட்டச்சத்துக்கள்

  பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன.

  அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.

  MOST READ: ஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி? • ரத்தசோகை நோயாளிகள்

  புரதங்களைப் பலப்படுத்துகின்ற அமிலங்களைக் கொண்டது. இந்த பசலைக் கீரை நம்மை பேணிப் பாதுகாக்கின்ற முக்கியமானதொரு உணவுப் பொருள். இதில் காரச்சத்து அதிகம் கொண்ட தாதுப்பொருள்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. அதோடு பசலைக்கீரையில் மிக அதிக அளவில் இரும்புச்சத்து இருப்பதனால் இது ரத்தசோகை அதிகம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியதாகவும் ஹீமோகுளோபிளை அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது.


 • மலச்சிக்கல்

  தினமும் ஒரு சிறிய கப் அல்லது ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரையை உணவோடு சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் மிக எளிதில் மலச்சிக்கலில் இருந்து விடுபட முடியும். ஏனென்றால் இதில் நார்ச்சத்து மிக அதிகம். இது ஜீரண மண்டலத்தினுடைய செயல்பாடுகளை முறைப்படுத்தி, செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க உதவி செய்யும்.


 • தோல் நோய்கள்

  பித்தம், நீர்த்தாரை, வெட்டை நோய்கள், மேகநோய் போன்ற தோல் நோய்களைக் குறைக்கும் வேலையை இந்த பசலைக்கீரை செய்கிறது.

  MOST READ: இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது


 • குழந்தைகளுக்கு

  இந்த பசலைக்கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து சாறெடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் குழந்தைகளுக்கு இருக்கின்ற நீர்க்கோர்வை கூட சரியாகிவிடும்.


 • விந்து கெட்டிப்பட

  விந்து நீர்த்துப் போகிறது, உங்களுக்குத் தெரியாமலேயே தூக்கத்தில் விந்து வெளியேறுவது போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் தினமும் பச்லைக்கீரை சாறினை எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் தாது கெட்டிப்படும்.


 • தலைவலிக்கு

  இந்த பசலைக்கீரை இலைகளை நெருப்பில் லேசாக வாட்டி எடுத்து தலைக்குப் பற்று போட்டால், தலைவலி சரியாகும். மூளைக்கும் ஆற்றல் பெருகும்.


 • கர்ப்பிணிகள்

  கருவுற்றிருக்கக் கூடிய பெண்களுக்கும் குழந்தை பிறந்து குழந்தைக்குப் பாலூட்டுகின்ற பெண்களுக்கும் இந்த பசலைக்கீரை மிகச்சிறந்த உணவாக அமையும். இதிலிலுள்ள ஃபோலிக் அமிலம் பெண்களுக்கு ரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும்.


 • எடையைக் குறைக்க

  உடல் பருமனால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தினமும் இந்த பசலைக்கீரையை டயட்டில் சேர்த்து வந்தால், மிக வேகமாகப் பலன் கிடைக்கும். பொதுவாகவே பசலைக்கீரையில் கார்போஹைட்ரேட் அளவும் கலோரி அளவும் மிகக் குறைவு என்பதனால் நிச்சயம் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

  MOST READ: நம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?


 • எப்படி சாப்பிடலாம்?

  இதை மற்ற கீரைகளைப் போல கடையல் அல்லது பொரியலோ செய்து தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. நாம் கொத்தமல்லி இலைகளைப் பயன்படுத்துவது போல பொடியாக நறுக்கி, சாலட்டுகளில் தூவி சாப்பிடலாம்.

  இலைகளை பொரியல், கடையல், துவையல் என செய்து சாப்பிடலாம்.

  முருங்கைக் கீரையைப் போன்று சூப் செய்து சாப்பிடலாம். குறிப்பாக இந்த சூப் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

  இவை எல்லாவற்றையும் விட, இந்த இலைகளைச் சாறெடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் குடித்துவரலாம்.
பொதுவாகவே நாம் கீரைகளை விரும்பிச் சாப்பிடுவதில்லை. அப்படியே மருத்துவ குணங்கள் காரணமாக நாம் சாப்பிட்டாலும் கூட, பசலைக் கீரையைப் பற்றி பெரிதாகத் தெரிந்து கொள்ளவோ அல்லது சாப்பிடுவதோ கிடையாது.

ஆனால் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்