Back
Home » ஆரோக்கியம்
நம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ! மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..!
Boldsky | 8th Dec, 2018 03:58 PM
 • ரோபோடா..!


  அறிவியலில் வளர்ச்சி உண்மையில் விண்ணை பிளக்க வைத்துள்ளது என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. மனிதன் செய்ய கூடிய அனைத்தையும் இந்த ரோபோக்கள் செய்ய கூடியதாக விஞ்ஞானம் அபரிமிதமாக வளர்கிறது. இதன் தாக்கமே, இந்த உலக சாதனை படைத்த டெலி ரோபோ அறுவை சிகிச்சை.


 • இது இல்லனா... அவ்வளவுதான்..!


  மனிதனின் உடலில் மற்ற உறுப்புகள் இல்லாமல் உயிர் வாழ இயலும். ஆனால், அனைத்து உறுப்புகளையும் இயங்க வைத்து கொண்டிருக்கும் இந்த இதயம் இல்லையெனில் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாது. அவ்வளவு உணர்வுபூர்வமான உறுப்பு இந்த இதயம். இதனை ரோபோ அறுவை சிகிச்சை செய்துள்ளது என்றால், எவ்வளவு பிரம்மிப்பான ஒன்று..!


 • 90% அடைப்பு ஏற்பட்ட இதயம்..!


  பொதுவாக 505 அடைப்பு ஏற்பட்டாலே நம்மால் இயல்பாக வாழ்வது மிக கடினம். ஆனால், 90% இதயம் அடைப்பு ஏற்பட்டுள்ள ஒரு பெண்மணிக்கு டெலி ரோபோ மூலமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது நிச்சயம் ஒரு நிமிடம் வாய் பிளந்து யோசிக்க கூடிய விஷயம் தான்.


 • யார் அந்த மருத்துவர்..?


  இதய அறுவை சிகிச்சைக்கு உலக அளவில் புகழ்பெற்றவர் தான் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தேஜஸ் படேல் அவர்கள். பலவித விளிம்பு நிலை இதய கோளாறுகளை சர்வ சாதாரணமாக வெற்றி அடைய வைப்பவர் இவர். அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இவர் பணி புரிந்து வருகின்றார்.

  MOST READ: ஆண்மை குறைவை போக்க, இந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுங்கள்..! • டெலி ரோபோகள்..!


  மருத்துவ உலகில் மிக முக்கிய மைல் கல்லாக இந்த டெலி ரோபோடிப்ஸ் முறை உள்ளது. எவ்வளவு தொலைவில் உள்ளவர்களையும் எளிதில் மருத்துவம் பார்க்க கூடிய வசதி கொண்டது தான் இந்த முறை. இப்படிப்பட்ட மருத்துவ வளர்ச்சி விஞ்ஞானத்தின் உச்சியாக கருதப்படுகிறது.


 • 32 கி.மிக்கு அப்பால்..!


  இந்த இதய அறுவை சிகிச்சையை 32 கி. மேற்கு அப்பால் உள்ள ஒரு கோவிலில் இருந்த படியே இவர் செய்துள்ளார். இதனை பொது மக்கள் பார்க்கின்ற வண்ணம் ஏற்பாடும் செய்யப்பட்டது. இந்த முறையால் கிராமப்புறத்தில் இருக்கும் மக்களுக்கும் பலவித முக்கிய மருத்துவ முறைகளை எளிதில் கொண்டு செல்ல முடியுமாம்.


 • 18 மில்லியன் பேர் இறக்கின்றனர்..!


  ஒரு ஆய்வின் படி, உலகளவில் ஒரு ஆண்டுக்கு 18 மில்லியன் பேர் இதய அடைப்பு, சீரற்ற இதய செயல்பாடு, மாரடைப்பு போன்றவற்றால் இறக்கின்றனர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த டெலி ரோபோடிக்ஸ் முறை இது போன்ற பலவிஹா அறுவை சிகிச்சைகளை செய்ய பெரும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


 • சிகிச்சை எப்படி..?


  இந்த டெலி ரோபோடிக்ஸ் சிகிச்சை முறை என்பது பல மைல் தூரத்தில் இருந்து கொண்டும் மருத்துவர்கள் இணைய உதவுடன் அறுவை சிகிச்சை செய்ய கூடிய முறையாகும். மருத்துவர் கூறும்படியே இங்கிருந்தே தொலைவில் உள்ளவருக்கு மருத்துவம் பார்க்கப்படும். அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் இந்த முறை பெரும்பாலும் பயப்படுத்தப்பட்டு வருகிறது.

  MOST READ: 2019 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும் தெரியுமா? • இதயத்திற்கு மட்டுமா..?


  இந்த டெலி ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை இதயத்திற்கு மட்டுமில்லாமல் வேறு சில முக்கிய உறுப்புகளுக்கும் ஏற்றதாக உள்ளது. குறிப்பாக கண், கல்லீரல், மூளை, போன்ற பலவித உள் உறுப்புகளுக்கும் இவை பொருந்தும். இந்த அறுவை சிகிச்சையால் பல உயிர்களை காக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 • அறிவியலும்...மருத்துவமும்..!


  விஞ்ஞானம் என்பது கூர்மையான கத்தியை போன்றது. நாம் அதனை கையாளும் விதத்திலே இதன் பலன் உள்ளது. டெலி ரோபோடிக்ஸ் போன்ற அற்புத கண்டுபிடிப்புகளை வடிவமைத்தால் விஞ்ஞானம் போற்றுதலுக்குரிய ஒன்றாகவே இருக்கும். இவை அனைத்துமே இதை கையாளும் நம்மிடமே உள்ளது.

  எனவே, விஞ்ஞான வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தி நிறைவான வாழ்வை பெறுவோம் நண்பர்களே..!
2.0 பார்த்த பூரிப்பில் இருக்கும் அனைவருக்கும் மேலும் ஒரு அபூர்வ செய்தி காத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழிற்நுட்பமும், மருத்துவமும் பின்னி பிணையப்பட்டுள்ளது என்றே கூறலாம். 2.0 படத்தின் முதல் பாகத்தில் சிட்டி ரோபோ செய்தது போன்றே நம் இந்தியாவிலும் ஒருவர் ரோபோவை வைத்தே மருத்துவம் செய்துள்ளார்.

ரோபோவை வைத்து உண்மையில் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா..? இந்த அறுவை சிகிச்சையை செய்து உலக சாதனை செய்தவர் யார்..? மேலும் பல தகவல்களை வாங்க, தெரிஞ்சிக்கலாம்...

   
 
ஆரோக்கியம்