Back
Home » ஆரோக்கியம்
தினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..!
Boldsky | 10th Dec, 2018 04:49 PM
 • சுவைமிக்க முந்திரி..!


  பலவித பருப்பு வகைகளில் இந்த முந்திரி அதிக சுவையை கொண்டது. இதற்கு முழு காரணமும் முந்திரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். இவற்றில் மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், ஒமேகா 3,6 கொழுப்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளதாம். இதுதான் முந்திரியின் இத்தனை நன்மைகளுக்கு காரணம்.


 • சுத்தமான ரத்தம்


  தினமும் 4 முந்திரியை சாப்பிடுவதால் இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்பு சத்து உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்யும். மேலும், ரத்த நாளங்கள், எலும்புகள், நரம்புகள், மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதுகாத்து, இவற்றின் செயல்திறனை அதிகரிக்கும்.


 • புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்..!


  இது முந்திரியை பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்காத தகவல். தினமும் 4 முந்திரியை சாப்பிட்டு வருவதால் இவற்றில் உள்ள proanthocyanidin என்கிற மூல பொருள் புற்றுநோயை செல்களை உடலில் உருவாகாத அளவிற்கு பாதுகாப்பை தரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


 • உடல் எடை குறைக்க


  உலக புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு அற்புத முடிவு வெளி வந்துள்ளது. அதாவது, வாரத்திற்கு 2 முறை முந்திரி சாப்பிடுவதால் உடல் எடை குறையுமாம். அத்துடன் இவை சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் உதவுமாம்.

  MOST READ: ஆண்களே, உங்கள் தொப்பை உடனடியாக குறைய இதையெல்லாம் காலையில் சாப்பிட்டாலே போதும்..


 • இதய நோய்களுக்கு


  நீங்கள் முந்திரி சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள கொலெஸ்ட்ரால் குறைய வாய்ப்புகள் உள்ளதாம். மேலும், உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றையும் குறைத்து விடுமாம். இதனால் நீங்கள் இதய நோய்கள் இல்லாமல் இன்பமாக வாழலாம்.


 • முடியின் வளர்ச்சிக்கு


  உங்களுக்கு முடி பிரச்சினை அதிகமாக இருந்தால், இனி அதை பற்றி கவலை படாதீர்கள். தினமும் 4 முந்திரி சாப்பிடுவதால் இவற்றில் உள்ள காப்பர் முடியை அதிக உறுதியுடனும், கருகருவெனவும் வைத்து கொள்ளும். எனவே, முடி உதிரும் பிரச்சினையில் இருந்து நீங்கள் தப்பித்து கொள்ளலாம்.


 • கூர்மையான பார்வைக்கு


  எப்படி கேரட் சாப்பிடுவதால் கண் ஆரோக்கியமாக இருக்கிறதோ அதே போன்று முந்திரி சாப்பிடுவதாலும் கண் பார்வை கூர்மை பெருமாம். காரணம் இதிலுள்ள lutein மற்றும் zeaxanthin என்கிற இரு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களும் தான். இவை பார்வை குறைபாடை குறைக்கிறது.


 • பித்தநீர்க்கட்டிகளை தடுக்கும்..!


  பித்தநீர் கற்களால் இன்று பலர் அவதிப்படுகின்றனர். உங்களை இந்த பிரச்சினையில் இருந்து காக்கிறது முந்திரி. 25% பித்தநீர்க்கட்டிகள் நமது உடலில் உருவாகாதவாறு இவை தடுக்கிறதாம்.

  MOST READ: உங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா..? அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..!


 • மன அழுத்தத்தை குறைக்க


  மன அழுத்தம் கொண்டவர்களுக்கு இவை சிறந்த தீர்வாக இருக்குமாம். இவற்றில் உள்ள வைட்டமின் பி, செரோடோனின் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்வதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பிறக்கிறது.


 • எலும்புகளுக்கு வலிமை


  முந்திரியில் அதிக அளவில் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. இதனால் எலும்பில் ஏற்பட கூடிய பலவித நோய்கள் தடுக்கப்படுகிறது. அத்துடன் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் ஆகிய பிரச்சினைகளில் இருந்தும் காக்கிறது.


 • இளமையான சருமம்


  தினசரி 4 முந்திரி சாப்பிடுவதால் உங்களின் தோலில் உள்ள செல்கள் அதிக புத்துணர்வு பெற்று பொலிவாக இருக்குமாம். ஏனெனில், முந்திரியில் அதிக புரதசத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஜின்க், செலினியம், இரும்புசத்து இருப்பது தான் காரணம். ஆகையால், நீங்கள் சுருக்கங்கள் இல்லாமல் அதிக காலம் இளமையாக இருக்கலாம்.

  இது போன்ற புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முந்திரி, பாதாம், திராட்சை போன்றவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நம்மில் பலர் இதனை அதிக அளவிலும் சாப்பிடுவதும் உண்டு. உண்மையில் இதன் அளவை பொருத்தே இவற்றின் பலன்கள் நமக்கு கிடைக்கும்.

குறிப்பாக தினமும் 4 முந்திரியை சாப்பிட்டு வருவதால் உங்களின் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் சொல்கிறது. வாங்க, என்னென்ன அபூர்வ பலன்கள் நமக்கு கிடைக்கிறது என்பதை தெரிஞ்சிப்போம்.

   
 
ஆரோக்கியம்