Back
Home » ஆரோக்கியம்
இந்த டீ குடிச்சா போதும்... இனி சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்!
Boldsky | 11th Dec, 2018 01:56 PM
 • சீமை டீயா..?


  ஆமாங்க, சீமை காட்டுமுள்ளங்கியின் இலை அல்லது வேரை கொண்டு இந்த டீ தயாரிக்கப்படுகிறது. நீங்கள் இதுவரை குடித்து வரும் டீ அல்லது காபியில் இருக்கும் நன்மைகளை விட பல மடங்கு இதில் ஆற்றல் நிறைந்துள்ளது. இந்த டீயில் எண்ணற்ற பலன்கள் உள்ளது என ஆராய்ச்சிகளும் சொல்கிறது.


 • மார்பக புற்றுநோய்


  இப்போதெல்லாம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் தாக்கம் கூடி கொண்டே போகிறது. காலையில் சீமையை டீயை குடித்து வருவதால் மார்பக பகுதியில் உருவாக கூடிய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முற்றிலுமாக தடுக்கிறது. அத்துடன் உடலில் ஏற்பட கூடிய பல வகை நோய்களுக்கும் இவை முற்றுப்புள்ளி வைக்கிறது.


 • ரத்த அணுக்களை அதிகரிக்க

  நீங்கள் தினமும் காபி அல்லது டீயிற்கு பதிலாக இந்த சீமை காட்டு முள்ளங்கியின் வேரில் தயாரித்த டீயை குடித்து வந்தால் வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் அதிகரித்து, எந்த வித நோய் கிருமிகளையும் உடலில் அண்டாத படி பார்த்து கொள்ளும். மேலும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் இந்த டீ உதவுகிறது.


 • சீமராஜாவை போல இருக்க...


  இந்த சீமை டீயை ஆய்வு செய்ததில் ஒரு அற்புத தகவல் கிடைத்துள்ளதாம். அதாவது, இந்த டீயில் உள்ள சில ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் போட்டோ கெமிக்கல்ஸ் உடலுக்கு அதிக சுறுசுறுப்பை தந்து எப்போதும் மிடுக்காகவே சீமராஜாவை போல வைத்து கொள்ளும்.

  MOST READ: நம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ! மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..!


 • கல்லீரலின் நண்பன்..!


  இந்த சீமை டீயை கல்லீரலில் நண்பன் என்றே அழைக்கலாம். ஏனெனில், உங்களின் கல்லீரலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்து, ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும், செரிமானத்திற்கு தேவையான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.


 • இதய பாதுகாப்பிற்கு


  கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் இந்த சீமை டீயிற்கு உள்ளதாம். அத்துடன் ரத்த நாளங்களில் எந்தவித நோய்களும் தாக்காதபடி இவை காக்கிறது. எனவே, உங்களுக்கு ஏற்பட கூடிய மாரடைப்பு, இதய நோய்களுக்கான வாய்ப்புகள் மிக குறைவாம்.


 • சிறுநீரக கற்கள்


  சீமை காட்டு முள்ளங்கியில் taraxasterol என்கிற முக்கிய மூல பொருள் உள்ளது. இவை சிறுநீரக கற்களை உடைத்தெறிய கூடிய தன்மை பெற்றதாம். அத்துடன் சீறுநீரக பாதையில் ஏற்பட கூடிய நோய் தொற்றுகளையும் இந்த டீ தடுக்கிறது.


 • சர்க்கரை நோயாளிகளுக்கு


  அன்றாடம் சர்க்கரை நோயினால் அவதிப்படுவோருக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த சீமை டீ உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும், சோர்வடையாமல் வைத்து கொள்ளவும் இந்த டீயை நீங்கள் தினமும் குடிக்கலாம். குடிப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

  MOST READ: ஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...!


 • வலுவான எலும்புகளுக்கு


  இந்த டீயில் உள்ள அற்புத சத்துக்கள் உங்களின் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக எலும்பு தேய்மானம், அடர்த்தி குறைதல், கால்சியம் குறைபாடு, போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்கிறது. மேலும், மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும் இந்த சீமை டீ சிறந்த தீர்வாக உள்ளது.


 • தயாரிக்க தேவையானவை...


  சீமை காட்டு முள்ளங்கி வேர்
  சீமை காட்டு முள்ளங்கி இலை
  தண்ணீர்
  தேன்


 • தயாரிக்கும் முறை...


  சீமை காட்டு முள்ளங்கியின் இலைகள் மற்றும் வேரை எடுத்து கொள்ளவும். பிறகு நன்றாக அலசி கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை கொதிக்க விட்ட பின், 1 ஸ்பூன் நறுக்கிய சீமை வேர் அல்லது இலைகளை சேர்க்க வேண்டும். 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து விடவும். பிறகு கொஞ்சம் ஆறியவுடன் இதனை வடிகட்டி குடிக்கலாம். தேவைக்கு அரை ஸ்பூன் தேனும் கலந்து குடிக்கலாம்.


 • பெரும் சிக்கலா..?!


  நவநாகரீக காலகட்டத்தில் பலருக்கு இருக்க கூடிய பிரச்சினைகளில் முதன்மையானது இந்த மனச்சிக்கல் தான். எதை சாப்பிட்டாலும் மலச்சிக்கல் என்ற நிலைக்கும் நாம் வந்து விட்டோம். இதனை குணப்படுத்த சீமை காட்டு முள்ளங்கி டீயே போதும்ங்க..!

  MOST READ: கொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்! #Photos


 • பருக்கள், கருமை நீங்க


  நீங்கள் தினமும் காலையில் இந்த டீயை குடித்து வருவதால் உங்கள் முக பிரச்சினைகள் அனைத்துமே குணமாகி விடும். குறிப்பாக பருக்கள், வெடிப்புகள், முக கருமை போன்றவை நீங்கி விடும். அத்துடன் முக அரிப்பு, சொறி போன்றவற்றையும் இதை தடுக்கிறது.
பலருக்கும் இருக்க கூடிய மிக சிறந்த ஆசை, வாழும் காலத்தில் போதுமான ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அத்துடன் எந்தவித மோசமான நோய்களுக்கும் தாக்கு பிடிக்கும் அளவிற்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்.

இது போன்ற ஆசைகளை நிறைவேற்றவே இந்த சீமை டீ உள்ளதுங்க. இனி நீங்கள் எதை நினைத்தும் கவலை பட வேண்டாம். உங்களை ஆரோக்கியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது இந்த சீமை டீ. அது என்ன சீமை டீ..?! வாங்க, இந்த டீயின் முழு வரலாற்றையும் அறிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்