Back
Home » ஆரோக்கியம்
மூங்கிலை தின்னும் மிசோரம் மக்கள்..! ஏன் இதை சாப்பிடறாங்கனு தெரியுமா..?
Boldsky | 11th Dec, 2018 06:01 PM
 • எழில் கொண்ட மாநிலம்..!


  பலதரப்பட்ட மக்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும் இந்த மிசோரம் மக்களுக்கென்று சில தனி சிறப்புகள் இருக்கின்றன. இங்கு பலவித பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையானோர் மிசோ பழங்குடி இனத்தவர்கள் தான் இருக்கின்றனர். இந்த மாநிலத்தின் உணவிற்காகவே பல நாட்டினர் இங்கு வந்து செல்கின்றனர்.


 • மீனும் அரிசியும்..!


  நமது மாநிலத்தை போன்றே இந்த மாநிலத்தவர்களும் அரிசியை பிரதான உணவாக சாப்பிடுவார்கள். அத்துடன் இவர்கள் மீனை அதிகம் விரும்பி சாப்பிட கூடிய பழங்குடி மக்கள். ஆனால், இதை தவிர் மிசோ மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் அது மூங்கிலும், வாத்துகளும் தான்.


 • கடுகு எண்ணெய்


  பொதுவாக மிசோ மக்கள் நம்மை போன்று கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டார்கள். இவர்கள் எந்த வித சமையலை செய்தலும் அதில் கடுகு எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்குமாம். ஏன், இந்த மூங்கில் உணவான பாய், மூக்கில் தண்டு ப்ரை ஆகியவற்றையும் கடுகு எண்ணெய்யில் தான் சமைத்து உண்பார்களாம்.


 • பாய் (bai)


  மிசோ மக்களின் பிரதான ரெசிபிகளில் ஒன்று இந்த பாய் தானாம். இவர்கள் எண்ணெய் வகை உணவுகளை அதிகம் விரும்புவதில்லை. மாறாக வேக வைத்த உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் தருவார்கள். மிசோ மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு இதுதான் காரணம். அதே போன்று தான் இந்த பாய் ரெசிபியிலும் முளைக்கீரை, பன்றி இறைச்சி, மூங்கில் தண்டு, மேலும் சில மூலிகைகளை கொண்டு சமைத்து உண்வார்களாம்.


 • மூங்கில சாப்பிடலாமா..?


  இங்கு நாம்ம மூங்கில வெறும் ஒரு பொருளா மட்டுமே பயன்படுத்துறோம். ஆனா, மிசோ மக்கள் இதை பலவித வகையில் பயன்படுத்துறாங்க. குறிப்பாக மூங்கில இவங்க அதிகம் சாப்பிடுவாங்கலாம். இவர்களுக்கு ரொம்ப பிடித்த உணவே மூக்கில் தானாம். அதுவும் 'மூங்கில் தண்டு வறுவல்' என்றாலே ஒரு கை பார்த்து விடுவார்களாம்.


 • மூங்கில் தண்டு வறுவல் (Bamboo Shoot Fry)


  என்னப்பா, மூங்கிலலாம் வறுத்து சாப்பிடலாம்ணு நீங்க நினைக்குறது நல்லாவே புரியுதுங்க. ஆனால், இது உண்மைதாங்க. மிசோ மக்கள் அதிகம் விரும்பி சாப்பிட கூடிய உணவு இதுதான். இதில் காளான், மூங்கில் தண்டு, மேலும் சில மூலிகை மசாலாக்களை சேர்த்து உண்பார்களாம். இவர்கள், மூங்கிலை ஏன் இவ்வளவு விரும்பி சாப்பிடுறாங்கனு தெரியுமா..?


 • உடல் எடை


  மிசோ மக்கள் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க இந்த மூங்கில் தான் காரணம். இவற்றில் உள்ள குறைந்த கலோரிகள் உடல் எடையை கூடாமல் வைத்து கொள்ளும். அத்துடன் கொலஸ்ட்ராலையும் சீரான அளவில் வைத்து கொள்ள இந்த உணவு வகைகள் உதவுகிறதாம்.


 • அட, புற்றுநோய் வராதா..!


  மிசோ மக்கள் மூங்கிலை விரும்பி சாப்பிடறதுக்கு பின்னாடி இருக்கும் ரகசியம் இது தாங்க. இந்த மூங்கில் தண்டை சமைத்து சாப்பிடுவதால் இவற்றில் உள்ள phytosterols என்கிற புற்றுநோய் தடுப்பு மூல பொருள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து விடுமாம்.


 • இரட்டிப்பு எதிர்ப்பு சக்தி..!

  இந்த மூங்கில் தண்டை சாப்பிடுவதால் உங்களின் எதிர்ப்பு சக்தி மண்டலம் மேலும் வலு பெறுமாம். எனவே, நீங்கள் எளிதில் நோய்களில் இருந்து தப்பித்து விடலாம். இதற்கெல்லாம் காரணம் இதிலுள்ள அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், தாதுக்கள், வைட்டமின்கள் மட்டுமே.


 • உறுதியான இதயத்திற்கு


  மூங்கில் தண்டில் உள்ள phytosterols மற்றும் phytonutrients உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்டரோலை கரைக்க கூடிய தன்மை கொண்டது. அத்துடன் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து இதயத்தில் கோளாறு ஏற்படாதவாறு பார்த்து கொள்ளுமாம்.


 • சுவாச கோளாறுகளுக்கு


  இந்த மூக்கில் தண்டு மிக சிறந்த உணவாகும். இதனை சாப்பிடுவதால் நுரையீரலில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி தூய்மையான சுவாசத்தை பெற முடியும். நீண்ட நாட்களாக உள்ள சளி, நுரையீரல் பிரச்சினைகளுக்கும் இது சிறந்த மருந்தாக உதவுமாம்.


 • விஷ முறிவு தன்மை


  இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மூங்கிலின் சாற்றை விஷ முறிவு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தேள் மற்றும் பாம்பு கடியின் விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என இந்த மக்கள் நம்புகின்றனர். மேலும், வலி நிவாரணியாகவும் இதனை மிசோ மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


 • வயிற்று புண்கள்


  மிசோ மக்கள் மூங்கில் தண்டை சாப்பிடுவதற்கு இன்னொரு முக்கிய காரணம், இவை அல்சர் போன்ற பலவித வயிற்று புண்களை குணப்படுத்தி, இனியும் வராமல் காக்குமாம். மேலும், இதனை மருத்துவ பயன்பாட்டிற்கும் அதிகம் உபயோகிப்பார்களாம்.
  நீங்கள் மிசோரம் சென்றால், இந்த மூங்கில் உணவுகளை சாப்பிட மறந்து விடாதீர்கள் நண்பர்களே..!
இந்தியா என்பது பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடாகும். இங்கு ஒவ்வொரு ஊர் மக்களுக்கும் தனித்துவமான பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு, உணவு, உடை...இப்படி ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. சில ஊர்களில் இப்படிப்பட்ட கலாசாரங்கள் கூட இருக்குதா..? என்கிற அளவிற்கு நம்மை வாய் பிளக்கும் வைக்க கூடிய ஒரு சில மாநிலங்களும் இங்கு உள்ளன. அப்படிப்பட்ட பிரம்மிக்க வைக்கும் மாநிலம் தான் மிசோரம். கடைக்கோடியில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ளது இந்த மிசோரம்.

இந்த மக்கள் பார்ப்பதற்கு சற்று சீனர்களை போன்றும் தோற்றம் கொண்டிருப்பர். இவர்களின் உணவு பழக்கத்தை கேட்டால் நீங்களே அரண்டு விடுவீர்கள். ஆமாங்க, மூங்கிலை தான் இவர்கள் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக சாப்பிடுவார்களாம். இதை கேட்ட உடனே, பலருக்கும் வடிவேல் காமெடியில் பல்பு சாப்பிட்டது தான் ஞாபகத்துக்கு வந்திருக்கும். ஏன் மிசோ மக்கள் மூங்கிலை சாப்பிடுகிறார்கள் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்