Back
Home » ஆரோக்கியம்
கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்..!
Boldsky | 12th Dec, 2018 02:41 PM
 • இவ்வளவு ஈஸியா..?


  எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனை இயற்கையான முறையில் கையாளுவது சிறந்தது. ஏனெனில், இயற்கை முறைகள் எந்தவித பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாது.
  சிலர் சின்ன காய்ச்சல் வந்தால் கூட மாத்திரைகளை எண்ணி எண்ணி போட்டு கொள்வார்கள். அந்த வகையில் உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை எளிதாக சுத்தம் செய்ய எளிதில் கிடைக்க கூடிய இந்த மூலிகைகளே போதும்.


 • கீழாநெல்லி


  இந்த மூலிகையின் திறன் பலருக்கு தெரியாமலே உள்ளது. இவை கல்லீரல் கோளாறுகளை மிக விரைவில் குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
  அத்துடன் கல்லீரலில் சேர்ந்துள்ள அசுத்தங்களை வெளியேற்ற கீழாநெல்லி நன்கு உதவுமாம்.


 • சீந்தில்


  இது கொடி போன்று படர்ந்து வளர கூடிய தாவரமாகும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் இதில் நிறைந்துள்ளதால் கல்லீரல் நோய்களை வரவிடாமல் தடுத்து விடும்.
  மேலும், கல்லீரலில் சேர்ந்துள்ள பலவித நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலுக்கு தேவையான நொதிகளை சிறப்பாக உற்பத்தி செய்யும்.


 • சீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION)


  உங்களின் கல்லீரலை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டுமென்றால், இந்த சீமை காட்டு முள்ளங்கியின் வேரை டீ போட்டு குடித்தாலே போதும். இந்த பூமியின் அற்புத மூலிகைகளில் ஒன்றாக இதனை சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். சர்க்கரை நோய் முதல் கல்லீரல் கோளாறு வரை பலவித நோய்களை குணப்படுத்த கூடிய ஆற்றல் இதற்குண்டு.

  MOST READ: பெருங்குடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் அபாயகர உணவுகள்..!


 • பால் நெருஞ்சில்


  இந்த மூலிகையின் தாக்கம் கிட்டத்தட்ட 2000 வருடம் பழமை வாய்ந்தது என பல குறிப்புகள் சொல்கிறது. உடல் முழுவதையும் சுத்தம் செய்ய இந்த பால் நெருஞ்சில் பெரிதும் பயன்படுகிறது.
  குறிப்பாக கல்லீரலின் திசுக்கள் அல்லது செல்கள் சேதம் அடைந்தால் அதனை குணப்படுத்துவும், பித்த நீரை சீரான முறையில் உற்பத்தி செய்யவும் இந்த மூலிகை உதவுகிறது.


 • இஞ்சி


  இஞ்சியில் உள்ள Gingerols என்கிற மூல பொருள் கல்லீரலில் உள்ள கொழுப்புக்களை வெளியேற்ற கூடிய ஆற்றல் பெற்றது. பல ஆயிரம் வருடமாக இதனை நாம் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றோம். உணவில் போதுமான அளவில் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டாலே கல்லீரல் அழுக்குகள் நீங்கி விடும்.


 • அதிமதுரம்


  பண்டைய ரோமர்கள், பெர்சியர்கள், அரேபியர்கள் இந்த மூலிகையை போற்றி வந்தனர். ஏனெனில், இது செய்யும் அற்புதம் எண்ணில் அடங்காதவையாம். இதனை தினமும் 1 வேளை டீ போன்று தயாரித்து குடித்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றி விடலாம்.


 • ஊசிக்களா


  நாம் அதிகம் பயன்படுத்தாத மூலிகைகளில் ஒன்று தான் இந்த முள்ளுக்களா அல்லது ஊசிக்களா. உங்கள் கல்லீரலை நோய்களில் இருந்து காத்து ஆரோக்கியமாக வைத்து கொள்ள இந்த மூலிகை உதவுகிறது.

  MOST READ: மூங்கிலை தின்னும் மிசோரம் மக்கள்..! ஏன் இதை சாப்பிடறாங்கனு தெரியுமா..? • மஞ்சள்


  "கிருமி நாசினி" என்று போற்றப்படும் இந்த மஞ்சளில் பலவித மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. curcumin என்கிற முக்கிய மூல பொருள் இதில் உள்ளதால் கல்லீரலை மிக விரைவில் சுத்தம் செய்யும்.
  மேலும், உங்களின் கல்லீரலில் சேர கூடிய கொழுப்புகளையும் சேர விடாமல் பார்த்து கொள்ளும். இதில் இயற்கையிலே ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்டதால் கல்லீரலில் செயல்திறனை அதிகரித்து சுறுசுறுப்புடன் நம்மை வைத்து கொள்ளும்.


 • நெல்லி

  கல்லீரல் அழுக்குகளை நீக்குவதில் நெல்லிக்காயிற்கும் பெரும் பங்குண்டு. நெல்லியில் உள்ள வைட்டமின் சி கல்லீரல் கோளாறுகளை எளிதாக குணப்படுத்த கூடியதாம். இதற்கு தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே சிறந்த தீர்வு கிடைக்குமாம்
உறுப்புகளில் மிக பெரிய உறுப்பாக இந்த கல்லீரலை சொல்லலாம். உடலில் உருவாகின்ற கோளாறுகளுக்கும் இந்த கல்லீரலுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும். இவ்வளவு முக்கியமான உறுப்பை நாம் பல விதங்களில் அசுத்தம் செய்து விடுகின்றோம். கல்லீரலில் சேர கூடிய அழுக்குகள் நமது உயிருக்கே அபாய மணியை தர கூடியது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்புகள், நச்சு தன்னையுள்ள பொருட்கள் போன்றவை தான் அழுக்காக பல நாட்கள் சேர்ந்து, பிறகு மரண ஓசையை நமது வீடு தேடி வந்து கொடுத்து விடுகிறது. இந்த நச்சு பொருட்கள் கல்லீரலில் உள்ள செல்களை சேதம் அடைய செய்து, கல்லீரலை முழுவதுமாக செயலிழக்க செய்து விடுகிறது. இப்படி படு மோசமாக பாதித்துள்ள கல்லீரலை ஒரு சில ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு சுத்தம் செய்து விடலாம். வாங்க, என்னென்ன மூலிகைகள் இந்த தன்மையை கொண்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்.

   
 
ஆரோக்கியம்