Back
Home » ஆரோக்கியம்
செய்யும் வேலையில் கவனச்சிதறல் ஏற்படுகிறதா? உங்களுக்கு சில மோசமான நோய்கள் இருக்க வாய்ப்புள்ளது
Boldsky | 12th Dec, 2018 05:50 PM
 • ஹார்மோன் சமநிலையின்மை

  நம் உடலின் செய்தி தொடர்பாளர்கள் ஹார்மோன்கள்தான். அதில் சமநிலையின்மை ஏற்படும்போது சிக்னல்கள் சரியாக செல்ல போராடலாம். எனவே உங்களுக்கு கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நமது மூளையை சீராக பராமரிப்பதற்கு ஹார்மோன்கள் மிகவும் அவசியமானவை. எனவே கவனச்சிதறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


 • பதட்டம் மற்றும் கவலை

  பதட்டமானது கவலையை போல அல்ல. நீங்கள் மற்ற விஷயங்கள் தொடர்பான நினைவுகளில் மூழ்கி இருக்கு,போதோ அல்லது பததட்டத்தில் இருக்கும்போதோ உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எப்பொழுது நமது மூளை ஒரே விஷயத்தை பற்றி மட்டும் நினைக்க முடியமால் தவிக்கிறதோ அப்போது நிச்சயம் கவனச்சிதறல் ஏற்படும். இது உங்களின் அறிவாற்றல் மற்றும் மூளையின் செயல்திறனை பாதிப்பதோடு மனஅழுத்தத்தையும் அதிகரிக்கும்.


 • ADHD

  இது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ள பெண்கள் மற்றவர்களின் தேவை என்னவென்பதை அறிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்துக்கொள்வார்கள். இது நாளடைவில் விபரீதமான விளைவுகளை கூட ஏற்படுத்தும். உங்கள் கவனச்சிதறல் பல கோளாறுகளை உண்டாக்கும் பட்சத்தில் நீங்கள் முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.


 • தூக்கமின்மை

  உங்களுக்கு கவனக்குறைவு ஏற்பட இது ஒரு நேரடியான காரணமாகும். எப்பொழுது உங்கள் மூளைக்கு போதிய தூக்கமில்லையோ அப்பொழுது மூளைக்கும், செல்களுக்கும் இடையே இருக்கும் இணைப்பில் பிரச்சினை ஏற்படும். இதன் விளைவாக கவனச்சிதறல் ஏற்படும். சுறுசுறுப்பாக இருக்கவும், மூளை நன்கு செயல்படவும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டியது அவசியமாகும்.

  MOST READ: பக்கவிளைவுகள் இல்லாமல் ஒரே வாரத்தில் 3-5 கிலோ குறைக்க உதவும் நிருபிக்கப்பட்ட எளிய டயட்


 • நீண்டகால மனஅழுத்தம்

  நீண்டகால மனஅழுத்தம் என்பது பதட்டம் மற்றும் கவலையை போன்றதல்ல ஆனால் அதேஅளவு ஆபத்தை உண்டாக்கக்கூடியது. மனஅழுத்தம் உங்கள் கவனத்தை குழைக்கும் இருக்கு முக்கிய காரணமாகும். உங்கள் கவனம் எதிலும் முழுதாக இல்லையென்றால் நீங்கள் மனதளவில் அதிக அழுத்தத்துடன் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே உங்கள் மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வையுங்கள்.


 • நாள்பட்ட வலி

  நீண்டகால வலியுடன் இருக்கும் பலரும் " மூளை பனி " என்ற வார்த்தையை நன்கு அறிந்திருப்பார்கள். அதாவது நீண்ட கால ஆரோக்கிய பிரச்சினையால் ஏற்படும் பக்கவிளைவை மருத்துவர்கள்இவ்வாறு கூறுவார்கள். வலி மற்றும் மூளை பணி உங்கள் கவனத்தை சீர்குலைக்கக்கூடும். நமது கவனத்தை நேரடியாக பாதிக்கும் காரணிகளில் வலியும் ஒன்று. குறிப்பாக மூட்டுவலி,முதுகுவலி போன்றவை இருக்கும்போது உங்களால் எந்த செயலையும் முழுகவனத்துடன் செய்யமுடியாது.


 • இரும்புச்சத்து பற்றாக்குறை

  உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களில் பற்றாகுறை ஏற்படும்போது அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளை உண்டாக்கும். இதில் கவனச்சிதறலும் அடங்கும். ஆக்சிஜனை உங்கள் உடலுறுப்புகள் அனைத்திற்கும் கடத்திச்செல்ல முக்கியமான சத்து என்றால் அது இரும்புச்சத்துதான். ஆண்களை காட்டிலும் பெண்களை இரும்புசத்து பற்றாக்குறை பெண்களை இம்மாடங்கு பாதிக்கும். குறிப்பாக சோர்வும், கவனசிதறலும் இதன் முக்கிய பிரச்சினைகளாகும்.


 • தைராய்டு பிரச்சினை

  கவனம் சிதறலை ஏற்படுத்தும் மிகப்பெரிய பிரச்சினைகளில் தைராய்டும் ஒன்று. தைராய்டு பிரச்சினை உள்ள பலரும் நினைவாற்றால் பிரச்சினை, கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகள் உள்ளதாக கூறுகிறார்கள். சொல்லப்போனால் கவனசிதறல்தான் தைராய்டு நோயின் முதல் அறிகுறியாகும். எனவே குறைந்தளவு கவனச்சிதறல் ஏற்படும்போதே மருத்துவரை அணுகுவது நல்லது.

  MOST READ: இன்ஸ்டாகிராம்ல நடக்குற பித்தலாட்டத்த பாருங்களேன்... # Funny Photos
கவனச்சிதறல் என்பது உங்களுக்கு சாதாரண குறைபாடாக தோன்றலாம். சில உடல் கோளாறுகளும், மனக்கோளாறுகளும், உங்கள் வாழ்க்கை முறையும் உங்களுக்கு கவனக்குறைவை ஏற்படுத்தக்கூடும். பொதுவாக நீங்கள் நினைப்பது சரியாக தூங்காமல் இருப்பதால்தான் கவனக்குறைவு ஏற்படுகிறது என்று. இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும், கவனக்குறைவு உங்கள் உடலின் பல்வேறு குறைபாடுகளின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

ஆம், நீங்கள் சாதாரண கவனக்குறைவு என நினைக்கும் பல செயல்கள் உங்கள் அலுவலக பணிகளில், தனிப்பட்ட வாழ்க்கையில் என பல விளைவுகளை உண்டாக்கும். இப்படி கவனக்குறைவு முதலில் ஏற்படும்போது அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் உங்கள் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருந்தால் உங்களுக்கு கவனக்குறைவு ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்