Back
Home » ஆரோக்கியம்
ஆண்களே..! உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...?
Boldsky | 13th Dec, 2018 02:34 PM
 • கன்னத்தில் மட்டும் தாடியா..?


  உங்களுக்கு தெரியுமா, இந்த தாடிக்காரங்க அதிக இளமையுடன் இருப்பதை உணர்த்துகிறது. இவர்கள் ரொம்ப சிம்பிளாக இருக்கும் வகையை சேர்ந்தவர்கள். பல சமயங்களில் இவர்கள் தாடியே இவர்களின் முக பாவனைகளை எடுத்து சொல்லும்.


 • அட..! இவங்க கொஞ்சம் வித்தியாசம்ங்க..!


  முகம் முழுக்க தாடி இருந்தால் , எப்போதும் ட்ரிம் செய்த படி இருக்கும் இந்த தாடிக்கார்களுக்கு பலவித குணாதிசயங்கள் இருக்கும். பெண்களை இந்த தாடியின் அழகு கவர்ந்தாலும், யாரையும் கண்டு கொள்ளாதது போல இவர்கள் பாவனை காட்டுவார்கள்.


 • முழு தாடி


  உங்கள் தாடி அர்ஜுன் ரெட்டி படத்தில் வருவது போல மழுமையான தாடியுடன், அதிக கவற்சியுடையவராக நீங்கள் இருப்பீர்கள். இந்த முழு தாடி உங்களின் தன்னம்பிக்கையை குறிக்கிறது. பெண்கள் உங்கள் தாடிக்கு மிக பெரிய ரசிகையாக இருப்பார்கள். உங்களின் உடலில் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் நீங்கள் அதிக ஆண்மையுடன் இருப்பதை இது குறிக்கிறது.


 • முழுசா எடுத்தவரா..?


  சிலருக்கு தாடியை முழுசா ஷேவிங் செய்யறது தான் பிடிக்கும். VIP படத்தில் "அம்மா..அம்மா.." பாட்டில் ஒரு சீனில் தனுஷ் கிளீன் ஷேவ் செய்திருப்பது போல, நீங்களும் வைத்திருந்தால் வாழ்க்கையை அர்த்தமுடன் வாழ நினைக்கும் தன்மையுடைவராக இருப்பீர். பார்க்க குழந்தையை போலவும், அம்மாஞ்சியாகவும் தெரியவர்கள்.

  MOST READ: இந்த ஒரு ஊட்டசத்து உங்கள் உடலில் செய்யும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..? • குறுந்தாடி


  கன்னங்களின் இரு புறத்திலும் தாடியை எடுத்து விட்டு, கீழ் பகுதியில் மட்டும் சிறிது தாடி வைத்திருப்பவரா நீங்கள்..? இந்த் வகையானவர்கள் கொஞ்சம் எடக்குமுடக்கான டைப். ஆனால், கற்பனை திறன் இவர்களுக்கு அதிகம். அத்துடன் எதை செய்தாலும் இவர்கள் புதுமையை விரும்புவார்கள்.


 • உங்கள் தாடி மெல்லிசாகிடுச்சா..?


  சிலருக்கு தாடியின் முடி திடீரென்று மெல்லிசாகி விடும். இவ்வாறு ஆவதற்கு சில காரணங்களும் உண்டு. இதற்கு முழு காரணமும், ஊட்டசத்து குறைபாடு தான். குறிப்பாக புரதசத்து உடலில் குறைவாக இருந்தால் இது போன்று மெல்லிசாக கூடும். முட்டை, சிக்கன், யோகர்ட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சினை தீர்ந்து விடும்.


 • ஹிட்லர் ஸ்டைல்


  சில காலகட்டத்தில் ஹிட்லரை போல தாடியை இல்லாமலும், குட்டி மீசையுடன் இருக்கும் ஸ்டைலை பலர் கடைபிடித்து வந்தனர். இது அவர்களை இனவாதி உடையவராக காட்டுமாம். அத்துடன் நியாய- தர்மம்களை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். மேலும். சற்றே மிருக தனமும் இவர்களிடம் இருக்குமாம்.


 • தாடி பிரச்சினை...


  தாடி முடி வட்ட வட்டமாக முகத்தில் கொட்டுகிறதா..? இப்படிபட்ட அறிகுறி உங்களுக்கு இருந்தால் கொஞ்சம் பிரச்சினை தான். இதனால் முகத்தில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் போன்றவையும் ஏற்படும். மேலும், இதனால் முடி கொட்டும் பிரச்சினையும் உண்டாகும்.

  MOST READ: கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்...! • வறட்சியும், உடைதலும்..!


  சிலருக்கு தாடி மிகவும் மொரடாக இருக்கும். இதற்கு பார்க்கவும் முரட்டு தனம் போன்று தெரிவார்கள். ஆனால், இதற்கு காரணம் தாடியில் ஈரப்பதம் இல்லாதமையே. மேலும், ,முடியின் ஊட்டம் குறைந்துள்ளது என்றும் அர்த்தம்.


 • தாடியில் பொடுகா..?


  சிலருக்கு தாடியில் சிறிது தூசுகள் கொட்டுவது போன்று இருக்கும். இதற்கு காரணம் தாடியில் ஏற்பட்டுள்ள பொடுகு தான். இப்படி பொடுகு போன்று தாடியில் இருந்தால் அரிப்பு, தாடி முடி கொட்டுதல் போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் தாடியில் உள்ள கிருமிகள் தான்.


 • தாடி இல்லையா..?


  சில ஆண்களுக்கு பருவம் அடைந்த பிறகும் தாடி அல்லது மீசை வளராமல் இருக்கும். இது பல கோளாறுகள் உடலில் இருப்பதை குறிக்கலாம். எனவே, இவ்வாறு உங்களுக்கு இருந்தால் கட்டாயம் மருத்துவரை ஆலோசியுங்கள்.
பிரேமம், அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களை பார்த்த ஆண்களுக்கு நிச்சயம் அதில் இருப்பவர்களை போல தாடியை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். இந்த 2 படத்திலையுமே கதாநாயகன் தாடியோட இருந்த சீன்கள பொண்ணுங்களும் கண் இமைக்காமல் பார்த்திருப்பார்கள். இதிலுருந்தே ஈஸியா நாம்ம தெரிஞ்சிக்கலாம், பொண்ணுங்களுக்கு தாடி மீது எப்போதும் ஒரு கண்ணு இருக்கத்தான் செய்யும்னு.

தாடி வைத்த ஆண்மகன்களை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள் என்று ஒரு கருத்து கணிப்பு சொல்கிறது. உண்மையிலே தாடி பிடிச்சதால காதல் வயப்பட்ட பெண்களும் இங்கு இருக்காங்க. அப்படி என்னதான் இந்த தாடியில இருக்குனு நீங்க தெரிஞ்சிக்கணுமா..? அதோடு உங்க தாடி உங்கள பத்தி என்ன சொல்கிறதுனும் தெரிஞ்சிக்கணுமா..? வாங்க, உங்க எல்லா சந்தேகத்துக்கான பதிலையும் இங்கு தெரிச்சிக்கலாம்.

   
 
ஆரோக்கியம்