Back
Home » ஆரோக்கியம்
ஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..?
Boldsky | 13th Dec, 2018 04:52 PM
 • எப்படி இப்படி..?


  பொதுவாகவே ஜப்பானியர்கள் பார்ப்பதற்கு அதிக இளமையுடனும், ஒல்லியாகவும் இருப்பார்கள். 40 வயதுடையவரை பார்த்தால் 25 வயது உள்ளவரை போன்றும், 30 வயதுடையவரை பார்த்தால் 18 வயது உள்ளவரை போன்றும் தோற்றம் இருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணமே அவர்கள் சாப்பிட கூடிய உணவுகளும், உணவு முறையும் தான் என்கின்றனர்.


 • நொறுக்கு தீனிகள் அல்ல..!


  ஜப்பானியர்கள் இந்த நொறுக்கு தீனிகளையெல்லாம் அதிக அளவில் சாப்பிட மாட்டார்கள். அத்துடன் இனிப்பு வகை உணவுகளை பெரிதும் தவிர்த்து விடுவர். இதற்கு காரணம், சுறுசுறுப்பாகவும், ஒல்லியாகவும் என்றுமே இருக்க ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதாலே. மேலும், சிவப்பு பீன்ஸ்களை இவர்கள் ஸ்னாக்காக சாப்பிடுவார்களாம்.


 • சமையல் முறை...


  சமையல் முறை பல விதங்களில் இவர்களுக்கு வேறுபட்டிருக்கும். உணவுகளை மெல்ல கொதிக்க வைத்தோ, வறுத்தோ, ஆவி காட்டியோ மிக குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிடுவார்கள். மேலும், எல்லாவித காய்கறிகளையும் பொடிசாக நறுக்கிய இவர்கள் சமைப்பார்கள். மேலும், மிதமான அளவில் தான் காரத்தை சேர்த்து கொள்வார்களாம்.


 • நம்மை போலவே..!


  ஜப்பானியர்களும் நம்மை போன்றே அரிசியை முதன்மை உணவாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். இவர்களின் சாப்பிட்டில் சிறு பங்கு வேக வைத்த அரிசி உணவுகள் இருக்குமாம். மேலும் இதில் உப்போ அல்லது வெண்ணெய்யையோ சேர்க்க மாட்டார்கள்.

  MOST READ: ஆண்களே..! உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா..?


 • காலை உணவு எப்படி..?


  காலை உணவில் வகை வகையான உணவுகளை சேர்த்து இவர்கள் உண்பார்களாம். குறிப்பாக மீன், அரிசி, சூப், கடற்களைகள், ஆம்லெட்ஸ், போன்ற உணவுகள் இதில் இடம்பெற்றிருக்கும். அத்துடன் காலை உணவில் அதிக அளவில் சாப்பிடுவார்கள்.


 • மெல்ல உண்ணும் முறை...


  இவர்கள் சாப்பிடுவதற்கென்று சில பாரம்பரிய விஷயங்களை கடைபிடித்து வருகின்றனர். சாப்பிடும் போது ஒவ்வொரு துண்டையும் மெல்ல சுவைத்து சாப்பிடுவார்களாம். மேலும், செயற்கை இனிப்பூட்டிகளையோ சுவையூட்டிகளையோ இவர்கள் பெரும்பாலும் சேர்க்க மாட்டார்களாம்.


 • சோடாக்களுக்கு நோ நோ..!


  நாம் கொஞ்சம் பிரியாணி சாப்பிட்டாலே அதனுடன் ஒரு குளிர்பானம் இருக்க வேண்டும் என விரும்புவோம். ஆனால், ஜப்பானியர்கள் அப்படி இல்லை. சோடாக்கள் நிறைந்த பானங்களை முற்றிலுமாக இவர்கள் தவிர்த்து விடுவார்களாம்.


 • புதுவித உணவுகள்..!


  ஜப்பானியர்கள் பெரும்பாலும் மீன், கடற்களைகள், சோயா, கிரீன் டீ, காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிடுவார்களாம். மேலும், சுஷி என சொல்லப்படும் உணவு வகையை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களாம்.

  MOST READ: பீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos


 • நேரமில்லையாம்..!


  ஜிம்மிற்க்கோ, உடற்பயிற்சி செய்வதற்கோ ஜப்பானியர்களின் பிஸியான நேரத்தில் செய்ய முடியாது. ஆனால், எப்படி இவர்கள் இவ்வளவு ஒல்லியாக இருக்கின்றனர் என்பதற்கு காரணம் "நடைபயிற்சி" தான். பள்ளி அல்லது அலுவலகத்திற்கு காலாலே பெரும்பாலும் நடந்து செல்வார்கள். இது தான் இவர்கள் இந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணி.


 • குறைந்த கலோரி உணவுகள்


  கண்ட நேரத்தில் கண்ட உணவுகளையெல்லாம் சாப்பிட கூடிய பழக்கம் இவர்களுக்கு கிடையாதாம். எப்போதும் குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளையே சாப்பிட விருப்பம் தெரிவிப்பர்.
  மேற்சொன்ன வழி முறைகளை நீங்களும் கடைபிடித்து வந்தால் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
ஜப்பானை பார்த்து பல நாடுகளும் இன்று வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறது. சில நாடுகள் ஜப்பானின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என கண்டுபிடிக்கவே பலவித உளவு துறைகளை வைத்துள்ளது. விண்ணை முட்டும் தொழிற்நுட்பங்கள், ஆச்சரியமூட்டும் உணவு வகைகள், சிறந்த பழக்க வழக்கங்கள் போன்றவை தான் இந்த நிலைக்கு முழு காரணமும்.

இப்படி பல சாதனைகளை ஜப்பானியர்கள் செய்ய அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது அவர்களின் உடம்பும் ஆரோக்கியமும் தான். குறிப்பாக தொப்பை இல்லாமலும், ஒல்லியாகவும், அதிக இளமையாகவும், நீண்ட ஆயுளுடனும் இவர்கள் இருக்கின்றனர். இதெற்கான ரகசியம் என்னனு தெரிஞ்சிக்கணுமா..? வாங்க, இந்த பதிவுல முழுசா தெரிஞ்சிப்போம்.

   
 
ஆரோக்கியம்