Back
Home » ஆரோக்கியம்
உங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்
Boldsky | 13th Dec, 2018 04:39 PM
 • நல்ல கண்டிஷனர்

  குளிர்ந்த காற்று மற்றும் வானிலை உங்கள் முடியை வறட்சியடைய வைக்கும், இதனால் முடி உடைய நிறைய வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையை சமாளிக்க இரவும் தூங்கச்செல்லும் முன் உங்கள் தலைக்கு சிறிது தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். தேங்காய் எண்ணெயை தேய்த்து வேர் முதல் நுனி வரை நன்கு மசாஜ் செய்துவிட்டு ஒரு துண்டால் தலையை கட்டிக்கொள்ளவும். காலை எழுந்து தலைக்கு குளித்தால் உங்கள் முடி மென்மையாக இருக்கும்.


 • நாசி பிரச்சினை

  குளிர்காலத்தில் உங்கள் மூக்கில் வற்றச்சி ஏற்படும். ஒரு சிறிய அளவு பஞ்சு துணியில் சில துளிகள் தேங்காய் எண்ணையை விட்டு அதனை உங்கள் மூக்கின் இரண்டு ஓட்டைகளிலும் வைப்பது உங்களுக்கு உடனடி நீரேற்றத்தை வழங்கும்.


 • கை, கால்களை குணப்படுத்த

  குளிர்காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவது நமது கைகளும், பாதங்களும்தான். எனவே இதனை சரிசெய்ய தூங்குவதற்கு முன் கை மற்றும் பாதங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு ஒரு சாக்ஸ் கொண்டு மூடிவிடுங்கள். காலை எழுந்ததும் சாக்ஸை துவைத்து விடுங்கள். இது உங்கள் உடலின் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.


 • இதழ் பொழிவு

  குளிர் உங்கள் இதழ்களில் வெடிப்பு மற்றும் வறட்சியை உண்டாக்கும். இதனை சரிசெய்ய சுலபமான வழி உங்கள் லிப்ஸ்டிக்குடன் சிறிது தேங்காய் எண்ணெயை கலந்து உங்கள் உதட்டிற்கு பூசவும். இது உங்கள்
  இதழ்களை கடுமையான குளிரிலிருந்து பாதுகாப்பதுடன் உங்கள் இதழுக்கு மினுமினுப்பையும், அழகிய வண்ணத்தையும் கொடுக்கும்.

  MOST READ: 1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள்? உங்கள் பிறந்த வருடம் உங்களை பற்றி கூறுவது என்ன?


 • மேக்கப்பை நீக்க பயன்படும்

  சிறிய பஞ்சு துணியில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும், பின்னர் இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்கு அழுத்தி தேய்க்கவும். இது உங்கள் சருமத்தில் இல்ல மேக்கப்பை நீக்குவதுடன் சருமத்தின் ஈரபதத்தையும் பாதுகாக்கிறது.


 • ஷேவிங் க்ரீம்

  தேங்காய் எண்ணெய் முகத்தின் நீரேற்றத்தை அதிகரித்து, மென்மையான ஷேவிங் செய்ய உங்களுக்கு உதவும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது உங்களுக்கு வறட்சியான சருமம் ஏற்பட வாய்ப்பில்லை. உங்கள் ஷேவிங் க்ரீமுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவது உங்களுக்கு சிறந்த ஷேவிங்கை வழங்கும்.


 • எக்ஸ்போலியேஷன்

  உலர் சருமம் மற்றும் செல்கள் மடிவதை தடுக்கவும், மடிந்த செல்களை அகற்றவும் எக்ஸ்போலியேஷன் ஒரு சிறந்த சிகிச்சையாகும். தேங்காய் எண்ணெயுடன் சிறிது சர்க்கரை தேய்த்து உங்கள் சருமத்தில் பூசுவது உங்கள் சருமத்தை சுத்தமாகவும், ஈர்ப்பத்துடனும் வைத்திருக்க உதவும்.


 • நகங்களின் ஆரோக்கியம்

  இந்த குளிர்காலத்தில் உங்கள் நகங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க உங்கள் நகங்களின் புறத்தோல்கள் மீது சிறிது தேங்காய் எண்ணெயை தேய்க்கவும். சில நிமிடங்கள் இப்படியே வைத்திருந்துவிட்டு பின்னர் கைகளை கழுவவும்.

  MOST READ: பீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos


 • சரும அரிப்பு க்ரீம்

  கடுமையான குளிர் காலத்தில் சருமம் சேதம் அடைந்திருக்கும்போது உங்கள் இறந்த செல்களை காப்பாற்ற தேங்காய் எண்ணெய் உதவும். எரிச்சல் மற்றும் தடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் போதுமான அளவு தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். கூடுதல் பலனிற்கு இதனுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக்கொள்ளவும்.
குளிர்காலம் வந்துவிட்டாலே நமக்கு சந்தோஷம்தான். ஏனெனில் வெயில் குறைவாக உள்ள இந்த காலத்தில் வெளியில் செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மற்ற பருவக்காலங்களை காட்டிலும் குளிர்காலத்தில் சுகமான தூக்கம் வரும், அதிகாலை நேர தூக்கம் சொர்க்கத்தையே உங்கள் போர்வைக்குள் கொண்டுவரும். ஆனால் குளிர்காலத்தில் சரும வறட்சி, பனிவெடிப்பு, ஆற்றல் இழப்பு என சில பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளை சரிசெய்ய பல மருந்துகளை நீங்கள் பயன்படுத்துவீர்கள். ஆனால் இவற்றை சரிசெய்ய உங்கள் வீட்டில் உள்ள சாதாரண தேங்காய் எண்ணெயே போதும். இது சரும வறட்சி,அரிப்பை போக்குவதுடன் செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பது என பல நன்மைகளை வழங்கக்கூடியது. குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்