Back
Home » ஆரோக்கியம்
ஸ்டிக்கரில் 9 னு ஆரம்பிக்கிற ஆப்பிளை மட்டும் பார்த்து வாங்குங்க... ஏன்னு தெரியுமா?
Boldsky | 11th Jan, 2019 10:40 AM
 • குழந்தைகளுக்கு

  நிறைந்த ஊட்டச்சத்துக்கள் ஆப்பிளில் அதிக அளவில் இருப்பதால் தான் ஆறு மாதமான கைக்குழந்தைக்குக் கூட தாய்ப்பாலைத் தொடர்ந்து ஆரம்ப கால இணை உணவாக ஆப்பிள் கொடுக்கலாம் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

  MOST READ: "நான் ஒரு ஏமாந்த கோழி" தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா


 • ஊட்டச்சத்துக்கள்

  ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் கிட்டதட்ட 95 கலோரிகள் இருக்கும்.

  ஆப்பிளில் 86 சதவீதம் தண்ணீர்ச்சத்து தான் இருக்கிறது. அதற்கடுத்து புரோட்டீன் (0.3கி), கார்போஹைட்ரேட், சர்க்கரை, நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, ஒமேகா 3, ஒமேகா 6 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு டிரான்ஸ் ஃபேட் வெறும் ஜீரோ. அதனால் குழந்தைகள் முதல் பல் போன பெரிசுகள் வரையிலும் எந்த பயமும் இன்றி தாராளமாக ஆப்பிள் சாப்பிடலாம்.


 • டயட்டில் இருப்போர்

  சர்க்கரை நோய் இருப்பவர்கள், கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், உயர் ரத்தம் அழுத்தம் இருப்பவர்கள், எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் என எல்லா வகையான டயட்டில் இருப்பவர்களுக்கும் தங்களுடைய டயட் லிஸ்டில் முதலில் இருப்பது ஆப்பிள் தான். ஆனால் அதே ஆப்பிள் ரசாயனமாக மாறிவிட்டால் என்ன ஆகும்? பயப்படாதீங்க. அது பற்றி கீழே விரிவாகப் படியுங்கள்.


 • ஸ்டிக்கர் ஒட்டுதல்

  முன்பெல்லாம் ஆப்பிள் கடைகளுக்கு வரும். அதிகபட்சம் ஒருவாரம் தாங்கும். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும். ஏனென்றால் அதில் பெரிதாக ரசாயனங்கள் கலக்கப்படாமல் இருந்தது. ஆப்பிள் எப்போது மக்களின் நம்பிக்கைக்கு உரிய உணவாக மாறியதோ அப்போதே அதிலும் ரசாயனக் கலப்புகள் உண்டாக ஆரம்பித்துவிட்டன. அப்படி ஆப்பிளில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.


 • ஸ்டிக்கரில் நம்பர்

  ஆப்பிள் வாங்கும்போது அதில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் சில நம்பர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்கள் பற்றி நாம் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி ஆப்பிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பருக்கு PLU code (price lookup number) என்று பெயர்.

  அதாவது நாம் சாப்பிடுகின்ற ஆப்பிள் இயற்கையாக விளைவிக்கப்பட்டதா அல்லது அது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா ரசாயனக் கலப்பு கொண்டதா என்பதை நாம் தெரிந்து கொள்வதற்காக தான் அந்த ஸ்டிக்கரில் உள்ள எண்.

  MOST READ: 40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்


 • இலக்க எண்கள்

  இந்த PLU code (price lookup number) என்பது ஆப்பிளில் 4,5, கொண்ட எண்கள் இருக்கும். அந்த எண் தான் பொதுவாக காய்கறிகள் எந்த தன்மையில் விளைவிக்கப்பட்டவை, அதில் ரசாயனக் கலப்பு இருக்கிறதா என்றெல்லாம் அறிந்து கொள்ள இயலும்.


 • நான்கு இலக்கம்

  Image Courtesy

  PLU code (price lookup number) ல் நான்கு இலக்க எண்கள் இருந்தால் அந்த ஆப்பிள் முழுக்க முழுக்க வேதி உரங்கள் கலந்து விளைவிக்கப்பட்டது என்று அர்த்தம்.


 • ஐந்து இலக்கம்

  Image Courtesy

  PLU code (price lookup number) ல் ஐந்து இலக்க எண்கள் இருந்தால் அதிலும் குறிப்பாக 8 என்ற எண் கொண்டு தொடங்கினால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆப்பிள் என்று அர்த்தம்.

  MOST READ: சிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...


 • 9 என்ற எண்

  Image Courtesy

  ஆப்பிளில் PLU code (price lookup number) ல் ஐந்து இலக்க எண்களும் அதில் 9 என்ற எண் கொண்டு தொடங்கியது என்றால் அந்த ஆப்பிள் முழுக்க முழுக்க இயற்கை முறையில் மரபணு கலப்பு இல்லாமல் விளைவிக்கப்பட்டது. அதனால் இனிமேல் ஆப்பிளில் 9 என்ற எண் கொண்டு ஒட்டப்பட்ட பழங்களைப் பார்த்து வாங்குங்கள்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உங்களுடைய வாழ்நாள் முழுக்க மருத்துவரையே சந்திக்க வேண்டிய தேவை இருக்காது என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருப்போம்.

நாம் சாப்பிடும் எல்லா உணவுகளையும் விட ஆப்பிளில் தீங்கில்லாத உயரிய ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கின்றன என்பது தான் அதன் காரணம்.

   
 
ஆரோக்கியம்