Back
Home » ஆரோக்கியம்
நம் முன்னோர்கள் பொங்கல் வச்சு படைக்குறதுக்கு பின்னாடி இருக்குற ரகசியம் என்ன தெரியுமா..?
Boldsky | 11th Jan, 2019 05:14 PM
 • பொங்கலோ பொங்கலோ..!


  பொங்கல் அப்படினு பேரு வரதுக்கு காரணமே பொங்கல் அன்று செய்ய கூடிய பொங்கல் தான். மற்ற வகை உணவுகளை விட ஏன் நம் முன்னோர்கள் இந்த பொங்கலை தேர்ந்தெடுத்தாங்கனு தெரியுமா..? இது உழைப்போட ஒரு சின்னமாக இருக்கறதாலதான் பொங்கல் அன்று இதை நாம் சமைத்து சாப்பிடுகின்றோம் என்பது ஒரு காரணம்..


 • ஆரோக்கிய பொங்கல்..!


  பொங்கல் பானையில் வைத்த இந்த பொங்கல் பொங்கி எழும்போது எல்லோரும் பொங்கலோ பொங்கல் என்று கூக்குரல் இடுவோம்.
  அந்த மகிழ்ச்சிக்கு வார்த்தை இல்லையென்றே சொல்லலாம். பிறகு எல்லோரும் சேர்ந்து பொங்கலை உண்டு மகிழுவோம். அதே நேரத்தில் இது ஆரோக்கிய பொங்கலாகவும் அமைந்து விடுகிறது.


 • காரணம் என்ன..?


  தமிழ் நாட்டின் முதன்மையான உணவு என்றால் அது அரிசி தான். பொங்கல் உழவர் திருநாள் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். வருடம் முழுவதும் பாடுபட்ட உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே நாம் அரிசியை பொங்க வைத்து பொங்கலாக கொண்டாடுகின்றோம்.

  உழவர்களையும், உழுத பொருளையும் நன்றி கூறும் விதத்தில் இது அமைய வேண்டும் என்கிற நோக்கில் உருவான பண்பாடு தான் இது.


 • சத்துக்கள் உள்ளதா..?


  பொங்கலில் பலவிதங்கள் உண்டு. வெல்லம் சேர்த்த பொங்கல், மிளகு சேர்த்த பொங்கல், எதையும் கலக்காத வெண்பொங்கல்...இப்படி வெவ்வேறு விதங்கள் இதிலுண்டு.
  இவை எல்லாவற்றிலும் ஒரு தனி சிறப்பு உண்டு. பொங்கல் அன்று பொங்கல் சாப்பிட்டுவதற்கும் காரணம் உண்டு.

  MOST READ: ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி..?


 • இந்த பொங்கல் எப்படி..?


  கிராமங்களை காட்டிலும் நகர பகுதியில் இந்த வகை பொங்கலை செய்து இறைவனுக்கு படைப்பதுண்டு. இவற்றில் அரிசி, வெல்லம், பருப்பு வகைகள், சேர்ப்பதால் இனிப்பாக இருக்கும்.
  எனவே, இது சர்க்கரை பொங்கல் என்கிற பெயர் பெற்று விட்டது. இதில் புரதசத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து அதிகம் நிறைந்துள்ளது என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


 • மிளகு பொங்கல் எப்படி..?


  பொதுவாக குழந்தைகளுக்கு இந்த பொங்கல் கொஞ்சம் அலர்ஜியான ஒன்றாக தோன்றும். ஆனால், இதன் நன்மைகள் ஏராளம்.
  பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த மிளகு பொங்கலை தாராளமாக சாப்பிடலாம். இதற்கு காரணம் இதில் சேர்த்துள்ள அரிசி, மிளகு, இஞ்சி, பருப்பு, ஆகியவை தான்.


 • தூய பொங்கல்..!


  பலருக்கு சாதத்தை அப்படியே சாப்பிடுவது பிடிக்கும். இந்த வகையினருக்கு வெண்பொங்கல் என்றால் கொள்ளை பிரியம்.

  இந்த வகை பொங்கல் தான் கிராமங்களில் பெரும்பாலும் வைப்பதுண்டு. இதில் அரிசி, பால் போன்றவற்றை சேர்ப்பதால் இதன் சுவை தனித்துவம் பெற்றதாக இருக்கும்.


 • நன்மைகள் #1 #2.!


  மேற்சொன்ன பொங்கல் வகைகள் அனைத்திலும் பலவித நன்மைகள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் நமது உடலுக்கும் அதிக அளவில் ஆரோக்கியம் கிடைக்கும்.
  இந்த வகை உணவுகளில் கொலஸ்ட்ரால் இருப்பதில்லை. ஆதலால் உடல் எடை பிரச்சினைக்கு பாய்..பாய்..சொல்லி விடலாம். மேலும், இது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.

  MOST READ: தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட தினமும் இரவில் 1 கிளாஸ் இதை குடித்து விட்டு தூங்குங்கள்..!


 • முழு ஆரோக்கியமும்...


  பொங்கலில் நம் நினைப்பதை விட ஏராளமான சத்துக்கள் உள்ளது என உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக புரதசத்து, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள், பச்சையம், நொதிகள் போன்றவை உள்ளன.
  தென்னிந்திய உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பதற்கு காரணம் இதுவே.


 • எதிர்ப்பு சக்திக்கு...


  எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பொங்கல் அருமருந்தாக இருக்க கூடும். காரணம் இந்த உணவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான்.
  தசைகளில் ஏற்பட கூடிய சோர்வை குறைக்கவும், வலியையும் நீக்கவும் இந்த உணவு உதவுகிறது.


 • செரிமான எப்படி..?


  மற்ற உணவை போன்று பொங்கலை பார்த்து நாம் பயப்பட தேவையில்லை. ஏனெனில், இதில் அவ்வளவு சத்துக்கள் ஒளிந்துள்ளன.

  குறிப்பாக இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் மிக சுலபமாக செரிமானம் அடைந்து விடும். மேலும், இந்த உணவில் கொலஸ்ட்ராலும் கிடையாது.


 • பொங்கல் கொண்டாட்டங்கள்..!


  மேற்சொன்ன பல நன்மைகள் இந்த பொங்கலில் உள்ளது. அதுமட்டுமன்றி பொங்கலை நமது பாரம்பரிய உணவாக நம் முன்னோர்கள் வைத்துள்ளமைக்கு இதுவும் ஒரு காரணம் தான். கரும்போடு பொங்கலை சாப்பிட்டு கொண்டே மகிழ்ச்சியான "தை திருநாளை" கொண்டாடுங்கள்.

  "பொங்கலோ..பொங்கல்.." என கூறி கொண்டு, அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..!

  MOST READ: சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன..?
அப்ப்பா..! பொங்கலுக்கு தொடர்ந்து 6 நாளு லீவு.. இந்த லீவுல வேற லெவல் பிளான்லா போட்டு, அத எப்படியெல்லாம் நிறைவேற்றலாம்னு ஒரு பெரிய எதிர்பார்ப்போடு பலர் காத்துட்டு இருப்போம். மற்ற பண்டிகை நாட்களை விடவும் பொங்கல் தமிழர்களுக்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பான நாள் தான். "தமிழர் திருநாள் பொங்கல்" என்று தான் இந்த உலகமே இந்த நாள கொண்டாடுது.

PC: Thiagupillai

பொங்கல் என்ன அவ்வளவு சிறப்புமிக்க நாளா..? அப்படினு கேக்குற வெளி ஆட்களுக்கு பொங்கல் பத்தின பாட்டுகளே நச்சுனு பதில் சொல்லும். பொங்கல் திருநாள் என்றதுமே நாம் எல்லோரும் ஒரு மாதத்திற்கு முன்பே தயாராக ஆரம்பித்து விடுவோம். பொங்கல் என்றதுமே பெருசுகளை விட இளசுகளுக்கு ஒருவித துள்ளல் இருக்கத்தான் செய்யும்.

எல்லாமே சரி, பொங்கலுக்கு நாம்ம முக்கியமா இரண்டு பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுவோமே, அத மறந்துட்டா எப்படி..! ஆமாங்க, சப்பிடற பொங்கலையும் கரும்பையும் தான் சொல்லுறேன். கரும்புல இருக்குற சத்துக்கள் நமக்கு நல்லாவே தெரியும். ஆனா, நம்ம முன்னோர்கள் எதனால இந்த பொங்கல சாப்பிடற பழக்கத்தை கொண்டு வந்தாங்கனு தெரியுமா..? இந்த ரகசியத்த இந்த பதிவுல தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

   
 
ஆரோக்கியம்