தற்போதுள்ள காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் நோயில் விழுகின்றனர். இதற்கு காரணம் மாறிவரும் காலநிலைகளும், மாறிவிட்ட உணவுப்பழக்கங்களும்தான். உடல்நிலையில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கும் மருத்துவரை அணுகுவது இப்பொழுது வழக்கமாகிவிட்டது. இந்தியாவில் தினம் தினம் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால்தான் இந்தியா உலக மருந்து நிறுவனங்களின் சந்தையாக மாற்றப்பட்டுவிட்டது.
மருத்துவர்கள் தரும் பெரும்பாலான மருந்துகளில் நமது பிரச்சினைகள் குணமாகினாலும் அதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் நமக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன சாப்பிடுவார்கள் என்பதுதான். இதற்கான ஆய்வு சமீபத்தில் மருத்துவர்களிடையே நடத்தப்பட்டது. அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.