Back
Home » ஆரோக்கியம்
உங்கள் காதலிக்கு பிடித்தது போன்ற Close-Up பற்களை பெற இதை சாப்பிட்டால் போதும்...!
Boldsky | 11th Jan, 2019 03:55 PM
 • ஆரஞ்சு


  உங்களது பற்களை பளபளவென மாற்ற கூடிய சக்தி ஆரஞ்சிற்கு உள்ளது. காரணம், இதிலுள்ள வைட்டமின் சி தான். இவற்றில் இயற்கையாகவே பற்களுக்கு வெண்மை தர கூடிய பண்பு உள்ளதாம்.
  எனவே, ஆரஞ்சை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் Close-Up-பில் வருவது போன்று வெண்மையான பற்களை பெறலாம்.


 • நட்ஸ்கள்


  பற்களை மிக எளிதில் வெண்மையாக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். அதாவது, தினமும் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் பற்கள் மஞ்சளாகாமல் தடுத்து விடலாம். மேலும், இவை பற்களுக்கு உறுதியையும் சேர்க்கும்.


 • ஆப்பிள்


  "தினமும் ஒரு ஆப்பிள்= நோய்கள் இல்லா உடம்பு" என்கிற பாணியில் தான் இந்த ஆப்பிளின் நன்மைகள் உள்ளன. ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பலவித மாற்றங்கள் நடைபெறும்.

  அவற்றில் இதுவும் ஒன்று. அதாவது, ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் எச்சியை அதிகம் சுரக்க செய்து கறைகளையும், நச்சுக்களையும் சுத்தம் செய்கிறதாம்.


 • கேரட்


  வாயில் அதிக அளவு எச்சில் சுரந்தாலே மிக எளிதாக பற்களை வெண்மையாக்கி விடலாம். ஏனெனில் நமது எச்சில் தான் இயற்கையான முறையில் பற்களுக்கு வெண்மை நிறத்தை அளிக்க கூடியது.
  அந்த வகையில், கேரட் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. அத்துடன் பாக்டீரியாக்களையும் அழித்து துர்நாற்றத்தை போக்குகிறது.

  MOST READ: நம் முன்னோர்கள் பொங்கல் வச்சு படைக்குறதுக்கு பின்னாடி இருக்குற ரசியம் என்ன தெரியுமா..? • வாய் கொப்பளித்தல்..!


  உங்களின் பற்களை மஞ்சள் நிறத்தில் இருந்து வெண்மை நிறத்தில் மாற்ற கூடிய ஆற்றல் இந்த எண்ணெய்யிற்கு உள்ளது. தினமும் நல்லெண்ணெய்யினால் வாய் கொப்பளித்தால் பற்கள் வெண்மை பெறுமாம்.

  வேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்யையும் பயன்படுத்தி கொள்ளலாம்.


 • ஸ்ட்ராபெர்ரி


  பற்களை வெள்ளையாக மாற்ற கூடிய தன்மை ஸ்ட்ராபெர்ரிக்கு உள்ளதாம். இவற்றில் உள்ள மாலிக் அமிலம் பற்களுக்கு உறுதியை தந்து வெண்மையாக வைக்கிறது. இதனை இப்படி பயன்படுத்தினால் பலன் அதிகம்.
  தேவையான பொருட்கள்...
  பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  ஸ்ட்ராபெர்ரி 1


 • பயன்படுத்தும் முறை...


  ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து கொண்டு அவற்றுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து பல் துலக்கவும். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கி பளபளபாக்கும். மேலும், வாய் துர்நாற்றத்தையும் இது குறைத்து விடுமாம்.


 • யோகர்டும் சீஸும்...


  பொதுவாக கால்சியம் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்து கொண்டால் அவை நமது பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
  குறிப்பாக யோகர்ட், சீஸ் போன்றவற்றை உணவில் போதுமான அளவு சேர்த்து கொண்டால் பற்களுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும்.

  MOST READ: தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட தினமும் இரவில் 1 கிளாஸ் இதை குடித்து விட்டு தூங்குங்கள்..! • வெங்காயம்


  உணவில் சேர்க்கும் வெங்காயத்தை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை தவிர்த்தாலே உங்களின் பற்களை வெண்மையாக வைத்து கொள்ளலாம்.
  ஏனெனில், வெங்காயத்தில் பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் சத்துக்கள் நிறைந்துள்ளது.


 • அன்னாச்சி


  பற்களை ஜோலி ஜொலிக்கும் வெள்ளையாக மாற்ற, அன்னாசி உங்களுக்கு உதவும். காரணம், இதிலுள்ள நொதிகளும் ஊட்டச்சத்துக்களும் தான். எனவே, அன்னாச்சியை சாப்பிடுவதாலும் பற்கள் வெண்மை பெறுகின்றன.


 • தவிர்த்து விடுங்கள்..!


  கலர் கலராக கடைகளில் விற்க கூடிய உணவுகளை தவிர்த்தாலே உங்கள் பற்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
  மேலும், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதையும் தவிர்த்து விடுவது நல்லது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இனிப்பு பொருட்கள் தருவதை குறைத்து விடவும்.
பொதுவாக நமது உடலில் இருக்க கூடிய ஒரு சில உறுப்புகள் நம்மை எப்படிப்பட்டவர் என்பதை தெளிவாக காட்டி விடும். குறிப்பாக முகத்தில் உள்ள கண்கள், வாய், பற்கள், மூக்கு போன்றவை இதில் அடங்கும். ஒருவருக்கு வெண்மையான Close-Up விளம்பரத்தில் காட்டும் பற்களை போன்று இருந்தால் நிச்சயம் அவரை பலருக்கும் பிடிக்க கூடும். இதுவே அந்த பற்கள் அழுக்கு படிந்து மஞ்சளாகவும், சொத்தையாகவும் இருந்தால் பேசுவதற்கே கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கும் நிலை ஏற்படும்.

இப்படி பற்களினால் நாம் பிறரை சங்கட படுத்த வேண்டுமா..? என்பதை யோசித்தீர்கள் என்றால் இதற்கான விடை உங்களுக்கு கிடைக்கும். பற்கள் நம்மை பற்றி நல்ல விதமாக பேச வேண்டுமே தவிர, மோசமான விதத்தில் நம்மை எடுத்து காட்ட கூடாது.

அதற்கு நமது பற்கள் வெண்மையாக துர்நாற்றம் வீசாமல் இருந்தாலே போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பலனை எந்தவித மருந்துகள் இன்றியும் நம்மால் பெற முடியும். ஆமாங்க, நம் வீட்டில் இருக்க கூடிய ஒருசில உணவு பொருட்களை வைத்தே இதற்கு தீர்வை தந்து விடலாம்.

   
 
ஆரோக்கியம்