Back
Home » ஆரோக்கியம்
ஆண்கள் இந்த ஏழு விஷயங்களை மட்டும் டாக்டர்கிட்ட எப்பவும் மறைக்கக் கூடாது... அது என்னென்ன?
Boldsky | 17th Jan, 2019 11:40 AM
  • நீங்கள் மனச்சோர்வுடன் உள்ளீர்கள்:

    மன அழுத்தம் மிக அபாயகரமானதாக இருக்கலாம், அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட , சரியான நேரத்தில் குணப்படுத்த முடியாவிட்டால் அது தோன்றும்பொழுதெல்லாம் உங்கள் மனம் கட்டுப்பாட்டை இழந்து உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். உங்களுக்குத் தோன்றும் எரிச்சல், வயிற்று வலி மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை கவனத்தில் கொள்ளுங்கள் ஏனென்றால் அவை மனச்சோர்வின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். இந்த நிலைமையைப் பற்றி சங்கடப்படுவதற்கு எதுவும் இல்லை, எனவே மருத்துவரிடம் பேசுங்கள், உங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுங்கள்.


  • நீங்கள் மிகவும் குடிக்கிறீர்கள்:

    ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் நண்பர்கள் சமுதாயத்தில் ஐக்கியமாகி நீங்கள் அதிக அளவில் குடிப்பவர் என்றால், உங்கள் மருத்துவர் அதை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் உங்கள் உடல்நிலை மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றிய தெளிவான படத்தை உங்கள் மருத்துவரிடம் கொடுக்க வேண்டும், அதனால் அவர் உங்கள் நோயைக் கண்டறிவது எளிதாக அமையும்.


  • நீங்கள் நன்றாகத் தூங்கவில்லை:

    தூக்கப் பிரச்சனைகள் எப்பொழுதும் நீங்கள் தூங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தோடு தொடர்புடையது இல்லை. இந்தப் பிரச்சினைகள் உங்கள் பொதுவான தூக்க நேரத்திலும் எழும். உங்கள் தூக்கம் 6 மணி நேரத்திற்கு குறைவாக இருந்தால், உங்கள் மருத்துவர் அதை அறிந்து கொள்ள வேண்டும்.


  • உங்கள் ஆண்மை அல்லது பாலியில் உறவுச் செயல்திறனில் மாற்றம் இருக்கலாம் :

    பாலியல் செயல்திறன் மாற்றம் உங்கள் வாழ்க்கைத் தரத்துடன் நிறைய தொடர்புடையது. இது எளிதான விஷயமில்லை, அது இன்னும் தீவிரமான வேறு ஒரு பிரச்சனையின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.


  • ஒரு இயல்பற்ற நெஞ்சு வலி:

    மார்பு வலி என்பது மாரடைப்பின் ஒரு சிறந்த அறிகுறி அல்ல என்று உங்களுக்குத் தெரியும் என்பதால் ஒரு வித்தியாசமான மார்பு வலியைப் புறக்கணிக்க முடியாது. மேல் குடல், மேல் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் தோன்றும் வலிகள் உங்கள் மருத்துவருடன் விவாதிக்கப்பட வேண்டும்.


  • மாறுபட்ட உடற்பயிற்சியின் திறன்:

    சுவாசப் பிரச்சனைகள் , உடற்பயிற்சி செய்யும் போது தொய்வு ஏற்படுவது அல்லது சமீப காலமாக நீங்கள் அனுபவிக்கும் இத்தகைய உடற்பயிற்சி தொடர்பான மாற்றங்கள் உங்கள் மருத்துவரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.


  • பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது:

    நீங்கள் எடுக்கும் மருந்துகளின் ஒவ்வொரு சிறு விஷயங்களும் உங்கள் மருத்துவர் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர் அந்த மருந்துகளின் அடிப்படை ஆபத்தைக் கண்டறிய, ஒவ்வொரு மருந்தைப் பற்றிய விவரங்களையும் அறிந்துகொள்வது அவசியம்(எவராலும் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் , ஓவர் த கவுண்டர் அல்லது மூலிகை மருந்துகள் )




ஆண்கள் , நம்மால் நம்பமுடியாத விதத்தில் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க தயக்கத்துடன் இருக்கக்கூடும். சிலநேரங்களில், அவர்கள் தங்கள் பிரச்சனைகளை டாக்டரிடம் விவாதிக்க சங்கடப்பட்டு தாமதிக்கலாம் மற்ற நேரங்களில் அறியாமை அவர்களை மீண்டும் தாமதிக்க வைத்திருக்கலாம் .

பரீட்சை மற்றும் ஆய்வக சோதனைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட க்ளூக்களின் மூலம் உங்கள் மருத்துவர் நோய்க்கு சிகிச்சையளிக்க முடிந்தாலும், நீங்கள் கூறும் அறிகுறிகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம் எனவே பேசாமல் இருப்பதால் அதைத் தவறவிடுகிறீர்கள். ஒவ்வொரு ஆணும் தனது ஒவ்வொரு விசயத்திலும் தனது மருத்துவரிடம் தவறாமல் விவாதிக்க வேண்டியவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

   
 
ஆரோக்கியம்