ஒவ்வொருவரின் உடலும் அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபடும். ஒரு சிலரது உடல் மிக வெப்பமாக இருக்கும். கொஞ்சம் நெருங்கினாலே வெப்ப கனலாக கொதித்து கொண்டு இருக்கும். ஒரு சிலரின் உடலோ மிகவும் குளிர்ந்த தன்மையாகவே இருக்கும். எவ்வளவு வெப்பம் கொளுத்தினாலும் இவர்களின் உடல் ஜில்லென்றே இருக்க கூடும். அதுவும் குறிப்பாக ஆண்களின் உடலை காட்டிலும் பெண்களின் உடல் அதிக குளிர் நிலையிலே இருக்கும். பலரும் இதை கவனித்து இருப்பீர்கள்.
அதாவது, உங்களின் காதலி அல்லது மனைவியை கட்டி அணைக்கும் போது மிகவும் குளிர்ந்த நிலையிலே அவர்களின் உடல் இருக்கும். இப்படி பெண்களின் உடல் அதிக குளிர் நிலையில் இருப்பதற்கும் ஒரு சில விஞ்ஞான பூர்வமான காரணங்கள் உள்ளன. இது மிகவும் புதுவிதமான தகவலாக உள்ளது என ஆய்வுகளும் சொல்கின்றன. சரி, வாங்க ஆண்களின் உடலை விட பெண்களின் உடல் ஏன் இப்படி ஜில்லுனு இருக்கு என்பதை இனி தெரிந்து கொள்வோம்.