Back
Home » ஆரோக்கியம்
எடை குறைப்பிற்கு குளிர்ந்த நீர் குடிப்பது நல்லதா அல்லது சூடான நீரை குடிப்பது நல்லதா?
Boldsky | 17th Jan, 2019 07:03 PM
  • தண்ணீரும் எடை குறைப்பும்

    தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் நீரின் அளவை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. நிபுணர்களின் கருத்துப்படி சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பது நீங்கள் சாப்பிடும் உணவின் அளவை குறைக்கும். இதன்மூலம் எடைகுறைப்பிற்கு தண்ணீர் மறைமுகமாக உதவும். சூடான தண்ணீர் நமது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம் நம் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் எற்படும் திரவ இழப்பை சரிசெய்யும். ஆனால் குளிர்ந்த தண்ணீர், அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீர் என அனைத்தும் எடை குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.


  • ஏன் சுடுதண்ணீர்?

    நிபுணர்களின் கருத்துப்படி சூடான நீரானது செரிமான மண்டலத்தில் உள்ள தடைகள் மற்றும் பிரச்சினைகளை வெளியேற்றி உங்களை ரிலாக்ஸாக உணர வைக்கிறது. மேலும் ஆயுர்வேதத்தின்படி தினமும் காலையில் சுடுதண்ணீருடன் எலுமிச்சைசாறு சேர்த்து குடிப்பது உங்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது.


  • குளிர்ந்த நீரும் எடை குறைப்பும்

    சூடான தண்ணீர் குடிப்பது நமது உடலின் குறிப்பிட்ட அளவு கலோரிகளை குறைக்கும் எனவும், நமது உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும் எனவும் நாம் அறிவோம். சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு கிளாஸ் சூடான தண்ணீர் குடிப்பது 8 கலோரிகளை குறைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8 க்ளாஸ் தண்ணீர் குடிப்பது வெறும் 64 கலோரிகளை மட்டுமே எரிக்கும். இது மிகவும் குறைவான அளவாகும். 15 நிமிடம் உடற்பயிற்சியின் மூலம் இதைவிட அதிகமான கலோரிகளை உங்களால் எரிக்க இயலும்.


  • அறை வெப்பநிலை தண்ணீர் நல்லதா?

    சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அறை வெப்பநிலையில் உள்ள நீரை குடிப்பதில் எந்த பக்கவிளைவும் இல்லை. இதனை குடிப்பதால் கலோரிகள் எந்த விதத்திலும் அதிகாரிக வாய்ப்பில்லை, எனவே எங்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை குடிக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்வது எடை குறைப்பில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதுடன் உங்கள் உடல் தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றலையும் வழங்குகிறது.

    MOST READ: இந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்


  • போதுமான தண்ணீர் குடிப்பது

    நீங்கள் உண்மையிலேயே உடல் எடையை தண்ணீரின் உதவியுடன் குறைக்க விரும்பினால் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில் உறுதியாய் இருங்கள். பொதுவாக ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுவார்கள், ஆனால் உண்மையில் நமது உடல் எடை மற்றும் செயல்பாடுகளை பொறுத்தே நாம் குடிக்க வேண்டிய நீரின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. எனவே உங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று மருத்துவரிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நீர்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.




நமது உடலுக்கு மட்டுமின்றி பூமியின் வளர்ச்சிக்கும், சமநிலைக்கும் முக்கியமான ஒரு பொருள் என்றால் அது நீர்தான். நமது உடலின் சீரான இயக்கத்திற்கும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் நீர் மிகவும் அவசியமான ஒன்றாகும் குறிப்பாக எடை குறைப்பில் தண்ணீர் முக்கியபங்கு வகிக்கிறது. எடை குறைப்பு என்றால் கலோரிகளை எரிப்பதுதான் அதில் முக்கியமான ஒன்றாகும்.

கலோரிகளை எரிப்பதில் தண்ணீர் முக்கியபங்கு வகிப்பதுடன் தண்ணீரை கொண்டு எடையை குறைப்பது மிகவும் எளிதான ஒன்றாகும். தண்ணீர் கலோரிகளை எரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எந்த தண்ணீர் எடை குறைப்பிற்கு சிறந்தது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். இந்த பதிவில் எடை குறைப்பிற்கு பச்சை தண்ணீர் நல்லதா அல்லது சூடான தண்ணீர் நல்லதா என்பதை பார்க்கலாம் .

   
 
ஆரோக்கியம்