Back
Home » ஆரோக்கியம்
நுரையீரலில் இருக்கிற மொத்த அழுக்கையும் வெளியேற்றணுமா? வெங்காயத்தை இப்படி செஞ்சு சாப்பிடுங்க...
Boldsky | 18th Jan, 2019 02:32 PM
 • காய்களின் வயாக்ரா

  சரி. சரி. ரொம்பவும் யோசிச்சு குழம்ப வேண்டாம். நாங்களே அந்த காய் என்ன என்று சொல்லிவிடுகிறோம். இவ்வளவு ஆச்சர்யத்துக்கும் ஆரோக்கியத்து்க்கும் உரிய காய் என்றால் அது வெங்காயம் தான். ஆம். வெங்காயம் தான் காய்களின் வயாக்ரா என்று அழைக்கப்படுகிறது.


 • பாலுணர்வைத் தூண்ட

  வெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனல் அதையுமு் தாண்டி அப்ரோஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டக் கூடிய பொருட்களும் வெங்காயத்தில் அதிக அளவில் நிறைந்துள்ளது.


 • கின்னஸ் சாதனை

  தினந்தோறும் குறிப்பிட்ட அளவுக்கு கணிசமாக வெங்காயத்தைத் தன்னுடைய உணவில் சேர்த்துக் கொண்டு தினமும் சாப்பிட்டு வந்ததால் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் அதேசமயம் அதிக பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸ் சாதனையே புரிந்திருக்கிறார்.

  MOST READ: இந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்


 • தேனீக்கடி

  மிகச் சிறிதாக தேனீயோ குளவியோ கொட்டிவிட்டால் வலி உயிர் போகிறது என்பார்கள். அதோடு அதிலிருக்கிற விஷம் உயிரை பறித்துவிடும் ஆபத்து கூட உண்டு. அப்படி தேனீ ஏதேனும் கொட்டி விட்டால் உடல் திடகாத்திரம் உள்ளவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அனுபவம் வாய்ந்த பெரியோர்களோ உடல் வலிமையைக் காட்டிலும் மன வலிமை அதிகம் இருப்பதால் வலியைப் பொருத்துக் கொண்டு விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் சில வெங்காயத்தை எடுத்து நசுக்கித் தேய்த்து விடுவார்கள். விஷம் முறிந்துவிடும்.


 • அழற்சி எதிர்ப்பு

  வெங்காயத்தில் மிக அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பொருள் இருக்கிறது. ஆம். வெங்காயத்தில் உள்ள என்சைம்கள் உடல் வலிமையையும் அழற்சியை எதிர்க்கும் ஆற்றலை வழங்குகிறது. பொதுவாக நம்முடைய உடலில் அழற்சி உணடாவதற்கு ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்னும் வேதிப்பொருள் தான் காணமாகவே அமைகிறது. ஆனால வெங்காயம் அந்த பொருளைச் சிதைத்துவிடுகிறது. உடலில் விஷம் சேராமல் நச்சுத் தன்மையை வெளியேற்றி விடுகிறது.


 • தினசரி உணவில்

  பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். அதுபோலத் தான் வெங்காயமும். வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும். வெங்காயத்தை மற்ற காய்கறிகள் போல் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அதை பச்சையாகவோ, சமைத்தோ, சூப்பாகவோ, சாலட்டாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


 • ரத்தத்தில் கொழுப்பு

  பொதுவாக வெங்காயம் இதயத்தின் உற்ற தோழன் என்று அழைக்கப்படும். வெங்காயத்துக்குள் இருக்கின்ற உட்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது. இயல்பாகவே வெங்காயத்திற்கு கொழுப்பைக் கரைக்கும் தன்மை இருப்பதால் அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கொலஸ்ட்ரால் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது.


 • பெண்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை

  பொதுவாக ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களுக்கோ தக்க சூழல் உண்டாகாத போது அடக்கி வைத்துக் கொள்வார்கள். இப்படி அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அதிகமாகி நோயை உண்டாக்கும். இதன்மூலம் சிறுநீர்தாரை தொற்று ஏற்படும். அதனால் பெண்கள் வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கழிவுப் பொருள்களைக் கரைத்து அழற்சியைக் குறைக்கும். சிறுநீர்த்தாரை தொற்று நோயும் குறையும்.

  MOST READ: வீட்டில் பெரியர்வர்கள் இறந்தால் மகனுக்கு மொட்டை அடிப்பது ஏன் தெரியுமா?


 • மூட்டுவலி

  யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீர்ப் பையில் கற்கள் உண்டாகும். இதுபோன்று யூரிக் அமிலத்தால் மூட்டுவலி தொல்லை இருப்பவர்கள் உணவில் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெயுடன் வெங்காயத்தை அரைத்தோ அல்லது அதன் சாறையோ கலந்து வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குறைய ஆரம்பிக்கும்.


 • நுரையீரல் சுத்தம்

  பொதுவாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகிற பொழுது, அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். நுரையீரலில் சிலருக்கு அழற்சி உண்டாகும். மூக்கில் எரிச்சல் உண்டாகும். இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயச் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். நுரையீரலிலி தேங்கியிருக்கிற நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றுகின்ற ஆற்றல் இதற்கு உண்டு.
பொதுவாகவே முருங்கைக் காய் என்றாலே அது அந்தரங்க சமாச்சாரத்துக்கு உரிய காய் என்ற எண்ணம் நம் எல்லோருக்குமே உண்டு. அதற்கான அடிப்படைக் காரணத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. அது நரம்பு தளர்ச்சி மற்றும் வாதம், உடல் பலவீனத்தைப் போக்குகின்ற ஆற்றல் கொண்டதாக முருங்கை இருக்கிறது. முருங்கை காய் மட்டுமல்ல, அதனுடைய பட்டை,விதை, வேர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? முங்கையை விடவும் காய்கறிகளின் வயாக்ரா என்று சொல்லும் அளவுக்கு மற்றொரு காய்கறி இருக்கிறது. அது நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான். அது என்னவென்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். அதைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.

   
 
ஆரோக்கியம்