Back
Home » ஆரோக்கியம்
ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...!
Boldsky | 18th Jan, 2019 04:44 PM
 • ஆற்றல் மிக்க வெல்லம்..!


  நமது வீட்டில் இருக்க கூடிய உணவுகளை நாம் அவ்வளவு சாதாரணமாக நினைத்து விட கூடாது. வெந்தயம், மிளகு, இஞ்சி, மஞ்சள்... இந்த வரிசையில் வெல்லமும் சேரும்.

  நாம் வெல்லத்தை அளவான முறையில் எடுத்து கொண்டால் நமது ஆரோக்கியம் இரு மடங்காக உயரும்.


 • நச்சுக்களை வெளியேற்ற


  உடல் எடையை ,குறைப்பதற்கு முன் நமது உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டும். ஏனெனில், அவை தான் எடையை குறைய விடாமல் தடுக்கும் முக்கிய காரணி.
  இந்த நச்சுக்களை வெளியேற்றினால் எடையை எளிதாக குறைத்து விடலாம். வெல்லத்தில் உள்ள ஊட்டசத்துக்கள் இந்த நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. ஆதலால், மிக எளிதில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம்.


 • ஆரோக்கியம் நிறைந்த வெல்லம்..!


  வெல்லத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ளும். மேலும், நீர்ச்சத்தை குறைய விடாமல் பார்த்து கொள்ளும்.
  செரிமான கோளாறுகளை குணப்படுத்தினாலே உடல் எடையை நம்மால் எளிதில் குறைத்து விடலாம். அந்த வகையில், இது செரிமான பிரச்சினைக்கும் நல்ல தீர்வை தருகின்றது.


 • கொழுப்புகளை கரைக்க


  உங்களது உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைத்தாலே தொப்பை மற்றும் உடல் எடை கூடும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
  வெல்லத்தை கீழ் கூறும் உணவோடு சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பை சுலபமாக கரைத்து விடலாம். மேலும், மலச்சிக்களையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாம்.

  MOST READ: தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..?


 • எடையை குறைக்க


  உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும். இதற்கு தேவையான பொருட்கள்...
  வெல்லம் 1 சிறிய துண்டு
  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  வெது வெதுப்பான நீர் 1 கிளாஸ்


 • தயாரிப்பு முறை...


  வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை முதலில் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதன் பலன் அதிகம். மேலும், உங்களின் தொப்பையும் குறைந்து விடும்.


 • சிறுநீரக பிரச்சினைகளுக்கு


  சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை தீர்ப்பது எளிதானதல்ல. ஆனால், இதனையும் சுலபமாக தீர்த்து விடுகிறது இந்த வெல்லமும் எலுமிச்சையும்.
  இந்த நீர் சிறுநீரகத்தில் சேர கூடிய கற்களை கரைய வைக்கும் தன்மை கொண்டதாம். வெறும் எலுமிச்சை சாற்றை குடித்தாலும் இதன் பலன் அப்படியே கிடைக்கும்.


 • கடலை மிட்டாய்


  கடைகளில் விற்க கூடிய கண்ட சாக்லேட்டுகளை சாப்பிடுவதை காட்டிலும் இந்த கடலை மிட்டாய் பல மடங்கு உங்களுக்கு உதவும்.
  கடலை மிட்டாயில் உள்ள வெல்லம் தான் இதன் முக்கால் வாசி பயன்களுக்கு காரணம். நீங்கள் சோர்வாக உணரும் போதோ, பசியில் இருக்கும் போதோ கடலை மிட்டாய் சிறந்த தீர்வாக இருக்கும்.

  MOST READ: 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் எப்படிப்பட்ட அபாயங்கள் உடலில் ஏற்படும்..? • காரணம் என்ன.?


  வெல்லத்தினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்க சில முக்கிய ஊட்டசத்துக்களும், தாதுக்களும் தான் காரணம். முக்கியமாக ஜின்க், செலினியம், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் காரணம். இதனால் தான் வெல்லம் இவ்வளவு மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.


 • அளவு முக்கியம்..!


  நாம் வெல்லத்தை சாப்பிடுவதனால் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. ஆனால், இவற்றின் அளவு அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகள் உங்களை வந்தடையும்.
  எனவே, 2 டீஸ்பூன் அளவிற்கு மிகாமல் வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பக்க விளைவுகள் வந்து சேரும்.
இன்று பலருக்கும் இருக்க கூடிய பிரச்சினை உடல் எடை தான். உடல் எடை கூடிவிடுவதால் எதை சாப்பிட்டாலும் எடை கூடி விடுமோ என்கிற பயமும் கூடவே ஒட்டி கொள்கிறது. பலரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற இந்த உடல் எடை பிரச்சினைக்கு நம் முன்னோர்கள் பல்வேறு வழி முறைகளை கண்டு பிடித்து வைத்து விட்டனர்.

நாம் அதை இத்தனை வருடமாக பயன்படுத்தாமல் இருக்கின்றோம். அந்த வகையில் நமது வீட்டில் இருக்க கூடிய சாதாரண உணவு பொருளாக நாம் நினைத்து கொண்டிருக்கின்ற வெல்லம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறதாம்.

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லத்தை ஒரு சிலவற்றோடு சேர்த்து சாப்பிட்டோ அல்லது குடித்து வந்தாலே போதும். அது மட்டுமில்லாமல் நமது உடலில் சேர கூடிய கொழுப்புகளையும் இது குறைக்கும் ஆற்றல் பெற்றது. வாங்க, இந்த சாதாரண வெல்லம் எப்படி இத்தகைய மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகின்றது என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்