Back
Home » ஆரோக்கியம்
பால் சாப்பிடுவதை நிறுத்தினால் நம்ம உடம்புல என்ன நடக்கும்னு தெரியுமா..?
Boldsky | 21st Jan, 2019 04:52 PM
 • எடை குறைவு


  பால் சார்ந்த பொருட்களை சாப்பிடாமல் இருந்தால் முதலில் நமது உடலில் ஏற்பட கூடிய மாற்றம் எடை குறைவே. கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைவதை நீங்களே உணர தொடங்குவீர்கள். மேலும், உடலில் சேரக் கூடிய கொழுப்புக்களின் அளவும் குறையும்.


 • வாய்ப்பு அதிகமா..?


  பொதுவாக பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் மிக குறைவாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தினமும் பால் பொருட்களை அதிகம் சாப்பிட கூடிய ஆண்களுக்கு அந்தரங்க உறுப்பில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.


 • விந்தணு குறைபாடு


  ஆண்கள் பலருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த பிரச்சினை இருக்கிறது. 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படும் என கண்டறிய பட்டுள்ளது. இதில் சீஸ் முதல் இடத்தில் உள்ளதாம்.


 • வாழ்நாளை குறைக்குமா..?


  பால் சாப்பிடுபவர்களை விட பால் குடிக்காதவர்களே 15 சதவீதம் அதிக ஆயுளுடன் வாழ முடியுமாம். குறிப்பாக பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவோருக்கு மிக சீக்கிரத்திலே மரணம் நெருங்க முடியும். அத்துடன் பலவித நோய்களும் உடலில் உண்டாக இது ஒரு பாலமாகவும் அமைய கூடும்.

  MOST READ: இந்த வயதில் தாம்பத்தியம் வைத்து கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாம்..! #அதிர்ச்சி தகவல்


 • முக அழகு எப்படி..?


  பொதுவாக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உண்டாக முகத்தில் சுரக்க கூடிய அதிக படியான எண்ணெய் தான் காரணமாக உள்ளன.
  நாம் பால் பொருட்களை சாப்பிடுவதை நிறுத்தினால் முகத்தில் உண்டாக கூடிய இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாது என தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


 • அடிக்கடி நோய்வாயா..?


  பால் சாப்பிடுவதை நிறுத்திய பலரும் இதை அனுபவித்திருக்க கூடும். அதாவது, அடிக்கடி எதோ ஒரு உடல் நல கோளாறு அவர்களுக்கு உண்டாகும்.

  மேலும், எதிர்ப்பு சக்தி குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் உடலில் இல்லாததே.


 • தலைவலி


  பலரும் தலைவலி ஏற்பட்டால் காபி அல்லது டீயை தான் தேடி போவார்கள். ஆனால், இந்த பால் சாப்பிடுவதை நிறுத்தினாலே தலைவலி, மயக்க நிலை உண்டாகலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், வைட்டமின் பி2 குறைபாடு தான். பால் சார்ந்த பொருட்களுக்கு பதிலாக வேறு சில சத்தான உணவுகளை சாப்பிட்டால் இதற்கான தீர்வும் கிடைத்து விடும்.


 • வயிற்று உப்பசம்


  பால் குடிப்பதை நிறுத்தினால் இது போன்ற ஒரு சில பாதிப்புகளும் நமக்கு உண்டாகும். குறிப்பாக நம் வயிறு உப்பசமாக மாற கூடும்.

  வயிற்றில் அதிக வாயு சேர்ந்துள்ளது போன்றும் தோன்றும். சிலருக்கு இதனால் செரிமான கோளாறுகளும் உண்டாகலாம்.

  MOST READ: இரவில் தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு... • ஊட்டசத்து குறைபாடு


  சிலருக்கு ஊட்டசத்து குறைபாடு பால் சாப்பிடுவதை நிறுத்துவதால் ஏற்படலாம். இவர்கள் பால் சாப்பிடுவதை நிறுத்திய பின்னர் அதில் இருக்க கூடிய ஊட்டசத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருத்தலே இதற்கு காரணம்.
  எனவே, ஒரு உணவு பழக்கத்தை நிறுத்தும் போது அதற்கு சமமான அளவில் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.


 • தீர்வு..!


  எந்த ஒரு உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிடும் போது அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே தான் இந்த பால் விஷயத்திலும். பால் சார்ந்த பொருட்களான தயிர், சீஸ், பன்னீர், ஐஸ் கிரீம் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டால் மேற்சொன்ன விளைவுகள் தான் நமக்கு நடக்கும். ஆதலால், அளவோடு உண்டு வளமாக வாழுங்கள் நண்பர்களே.
பொதுவாகவே நாம் குழந்தையாக பிறந்த முதலே பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு வருகின்றோம். தாய் பாலில் ஆரம்பித்து மாட்டு பால், கழுதை பால் என பல வகைகளை நாம் சுவைத்து வருகின்றோம். பாலில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், பால் சாப்பிடாமல் இருந்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பது தெரியுமா..? உண்மையில் இது உடல் அளவில் பல வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்த கூடிய தன்மை வாய்ந்ததாம்.

பால் மட்டும் இதில் சேராது. பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்ற எல்லா பால் பொருட்களும் இதில் அடங்கும். சாதாரண இந்த பாலால் அப்படி என்ன தான் விளைவு ஏற்படும்னு யோசிக்கிறீங்களா..? உங்களுக்கான விடையே இந்த பதிவு. பால் சாப்பிடாமல் இருப்பதால் ஏற்பட கூடிய நன்மைகளும் இதனால் ஏற்பட கூடிய மாற்றங்களையும் இனி அறிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்