Back
Home » ஆரோக்கியம்
இப்படி பல்லால மூடிய திறக்கவே கூடாதாம்! மீறினால் நரம்பு மண்டலத்துல அபாயம் தான்!
Boldsky | 12th Feb, 2019 03:16 PM
 • பற்கள் கடிப்பது


  சிலருக்கு கோபம் வருவது போன்று இருந்தால் உடனே ஆத்திரத்துடன் பற்களை கடிப்பார்கள். இது போன்ற செயல் மோசமான ஆபத்தை உண்டாக்கும்.
  பற்களை மரமரவென கடிப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் சுயநிலையை இழந்து வருவீர்கள்.


 • துலக்கு கண்ணா... துலக்கு!


  பற்கள் மிகவும் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக துலக்கி கொண்டே இருந்தால் ஆபத்து உங்களுக்கு தான்.

  பற்களும் ஒரு உறுப்பு தான் என்பதை மறவாதீர்கள். இதை அழுத்தி தேய்ப்பதால் எனாமல் தேய்ந்து பற்கள் மிக சீக்கிரத்தில் விழுந்து விடும்.


 • ஓட்டும் உணவுகள்


  பொதுவாக பல்லில் ஒட்டி கொள்கின்ற உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் அவை பற்களை பாதிக்க செய்து மோசமான விளைவை உண்டாக்கும். குறிப்பாக பல் சொத்தை, அமிலத்தன்மை அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.


 • நகம் கடித்தல்


  நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது. இது எவ்வளவு மோசமான பழக்கம் என்பதை அறியாமலே நாம் செய்து வருகின்றோம்.
  இது போன்று நகத்தை கடிப்பதால் பற்கள் பாதிக்கப்பட்டு தொற்றுகள் உண்டாகி விடும். மேலும், சில சமயங்களில் கைகள் மற்றும் பற்கள் இரண்டுக்குமே தொற்றுகளை ஏற்படுத்தும்.

  MOST READ: நிர்வாணமான கனவுகள் உங்களுக்கு வந்தால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா? • காபி


  காபி காதலர்களுக்கே இந்த மோசமான செய்தி. காபி குடிப்பதால் இவற்றில் உள்ள அமிலத்தன்மை பற்களை தாக்கும்.
  இதனால் பற்கள் விரைவாகவே மஞ்சளாக மாறி விடும். அத்துடன் இந்த கரையை போக்குவது அவ்வளவு சுலபமும் இல்லை.


 • ஐஸ்


  என்னதான் உங்கள் பற்கள் கம்பீரமாக இருந்தாலும், ஒரு துளி ஐஸ் பட்டதுமே சுள்ளென்று குத்தும். இந்த பாதிப்பு உங்களுக்கு வருவதற்கும் முக்கிய காரணம் இதே ஐஸ் தான். இவற்றை சாப்பிடுவதன் மூலமாக தான் உங்களின் பற்கள் இந்த அளவிற்கு ஆபத்தாக உள்ளது.
  மேலும் சிலர் ஐஸ்கிரீம்கள் மற்றும் சாக்லேட்கள் போன்றவற்றை அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதுவும் அவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டாகி விடும்.


 • மூடியும் அபாயமும்..!


  பலருக்கு இருக்கும் மோசமான பழக்கம் இதுதான். எந்த மூடியாக இருந்தாலும் ஸ்டைலாக அதனை பற்களால் கடித்து எடுக்கின்றனர். இந்த பழக்கம் ஆபத்தான தாக்கத்தை உங்களுக்கு உண்டாக்கி விடும்.
  முக்கியமாக பற்களின் தன்மையை பாதித்து, உங்களின் நரம்பு மண்டலத்திற்கே ஆபத்தை உண்டாக்கி விடும். சிலருக்கு இது மோசமான பாதிப்புகளையும் தரும்.


 • சோடா


  குளிர் பானங்களை கண்டதும் அதன்மீது நம் எல்லோருக்குமே அலாதி பிரியம் தான். என்றாலும்,இவற்றை குடிப்பதால் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் பற்களின் ஈறுகளை முழுவதுமாக பாதித்து விடும். சாதாரணமாக 1 கப் சோடாவில் 11 டீஸ்பூன் சர்க்கரை இருக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

  MOST READ: உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்! தமிழகத்தை குறி வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? • ரெட் ஒயின்


  அத்தியாகி அளவில் ரெட் ஒயின் குடிப்பதால் அவற்றின் அமில தன்மை அதிகரித்து ஈறுகளை பாதிக்க செய்யும். இதனால் பற்கள் மிக சீக்கிரத்தில் பாதிப்பை சந்திக்கும். மேலும், சுவியுங் கம் போன்றவற்றையும் சாப்பிடாமல் தவிர்ப்பது பற்களுக்கு நல்லது.
"புன்னகை செய்திடுங்கள்" என்று பல விளம்பரங்களில் இந்த வசனத்தை நாம் பார்த்திருப்போம். இந்த ஒற்றை வரியை வைத்து கொண்டு பலரும் சுலபமான முறையில் வியாபார தந்திரங்களை காட்டி வருகின்றனர். பொதுவாக பற்களை வைத்து ஒரு சில விஷயங்களை செய்யவே கூடாது என்பார்கள்.

உதாரணத்திற்கு நகம் கடிப்பது, துணியை வாயில் வைப்பது, சீப்பு போன்றவற்றை பற்களினால் பிடித்து வைத்திருப்பது...இப்படிப்பட்ட செயல்களை நம்மில் பலர் செய்து வருகின்றோம். ஆனால், இதில் மிக மோசமான செயல் சோடா அல்லது மதுபான பாட்டில்களின் மூடிகளை வாயால் கடிப்பது. இது உங்களுக்கு ஏராளமான பாதிப்பை உண்டாக்கும்.

பற்களின் பாதிப்பு என்பது பற்களை மட்டும் பாதிக்காது. நரம்பு மண்டலம், தசைகள், வாய் பகுதி, பற்கள் இப்படி அவற்றோடு சார்ந்திருக்கும் பலவற்றையும் பாதிக்கும். மூடிகளை வாயால் திறப்பதால் உண்மையிலே எத்தகைய அபாயம் உண்டாகும் என்பதையும், மேலும் இது போன்ற எந்தெந்த செயல்களை செய்யவே கூடாது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்