Back
Home » ஆரோக்கியம்
உங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...
Boldsky | 12th Feb, 2019 11:55 AM
 • சுவாசப் பிரச்னை

  எனவே நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி என்பது, தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்தல் ஆகும். ஆரோக்கியமான உணவு கட்டுப்படுகளின் மூலம் நீண்ட நெடிய நோய நொடியற்ற வாழ்க்கையை வாழ முடியும். இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் மக்கள்தொகையின் உயர்வு காரணமாக, சுவாசப் பிரச்சனைகள் எப்போது அதிகமாகவே உள்ளன.

  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, 235 மில்லியன் மக்கள் குணப்படுத்தக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய அளவிலான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால், அவற்றை சிறப்பதாக செயல்பட வைக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

  MOST READ: சென்னையில் நிலநடுக்கம் - சுனாமி வருமா? ஜப்பானில் ஏற்பட்ட கெட்ட சகுனம்


 • ப்ரோக்கோலி

  இதில் வைட்டமின் சி, கரோடேனாய்டு, போலேட்மற்றும் பைடோ கெமிக்கல் அதிகமாக இருப்தால். நுரையீரலில் ஏற்படும் சேதாரத்தை தடுக்கிறது. மேலும் இதில் எல்-சல்போராஃபேன் அடங்கியுள்ளதால், சுவாசப்பிரச்சனைகளை தடுக்கும் வகையில், அழற்சியை எதிர்க்கும் ஜீன்களை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பிரக்கோலி ஒன்றையு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.


 • ஆப்பிள்

  நுரையீரல் சிறப்பாக செயல்பட அதிக அளவில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோடீன் உட்கொள்ளவேண்டும் எனவும், இவையனைத்தும் ஆப்பிளில் உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிளில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால், அது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


 • வால்நட்

  வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஒமோகா 3 ஃபேட்டி அசிட் அதிகம் உள்ளது. எனவே இதை கை நிறைய சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா மற்றும் இதர சுவாச கோளாறுகளை எதிர்த்து போராடும். மேலும் இந்த ஒமோகா 3 அசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் உள்ளன.


 • பெர்ரீஸ்

  அகாய் மற்றும் ப்ளுபெர்ரி இரண்டும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க திறம்பட செயல்படும் பெர்ரி ஆகும். இவற்றில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், செல் சேதமாவதை எதிர்த்து போராட உதவும்.


 • பிரக்கோலி சூப்

  பொதுவாக சூப் செய்யும்போது எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வோம். ஆனால் பிரக்கோலி சூப்பிற்கு வெறும் வெங்காயமும் பிரக்கோலியும் சேர்த்துக் கொண்டால் போதும். மிக சுவையாக இருக்கும்.

  MOST READ: பென்சிலின் ஊசி உங்களுக்கு ஒத்துக்காதா? அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுமா?


 • சாலட்

  உங்களுக்கு ஒன்று தெரியுமா? காரட் சாப்பிடுவது போல் பிரக்கோலியை வெறுமனே அப்படியே சமைக்காமல் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுபவர்கள் அல்லது லேசாக வெண்ணெய் சேர்த்து வதக்கி சாலட்டாகவும் சாப்பிட்டு வரலாம்.


 • கெய்ன் மிளகு

  இதில் உள்ள கேப்சைசின் மேல் மற்றும் கீழ் சுவாச பாதை இருந்து சளி சவ்வுகள் பிரித்து பாதுகாக்கிறது. இந்த மிளகில் தேநீர் வைத்து குடிப்பதன் மூலம்,அதிலுள்ள பீட்டா கரோடின் ஆஸ்துமா அறிகுறிகளை பெருமளவில் குறைக்கசிறப்பாக செயல்படுகிறது.


 • இஞ்சி

  இஞ்சி அழற்சியை எதிர்ப்பது மட்டுமில்லாமல், நுரையீரலில் இருந்து மாசூட்டிகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது.மேலும் இது நெரிசலை நீக்குதல், காற்றோட்டத்தை சரிசெய்தல் மற்றும் நுரையீரலில் சுழற்சியை போன்றவற்றின் மூலம், நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.


 • ஆளி விதைகள்

  பி.எம்.சி கேன்சர் ஆய்வுகட்டுரையில் வெளியான ஒரு ஆய்வின் படி, இந்த ஆளி விதைகள் கதிர்வீச்சுக்கு முன்பு நுரையீரல் பாதுகாப்பதுடன், அதனால் ஏற்படும் சேதத்தையும் பெருமளவில் குறைக்கிறது.


 • பூண்டு

  பூண்டு ப்ளேவேனாய்டுகளை மட்டுப்படுத்துவதால், க்ளூடாதியோன் உற்பத்தியை ஊக்குவித்து, டாக்சின் மற்றும் கார்சினோஜீன் குறைவதை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

  MOST READ: வலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன? கட்டாயம் படிங்க... • தண்ணீர்

  எது தண்ணீரை விட சிறப்பாக செயல்பட முடியும்? உங்களின் உடல் செயல்பாடுகளை சிறப்பாக செயல்பட வைக்க தண்ணீர் தான் சிறந்த வழி. காய்ந்த நுரையீரல் எரிச்சல் மற்றும் அதிக அழற்சிக்கு வழிவகுக்கும். எனவே தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும்.


 • மஞ்சள்

  மஞ்சளில் அழற்சியை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலுள்ள கர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபடவும், ஆஸ்துமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

  இந்த உணவு பொருட்களை உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் சந்தோசமான நுரையீரலை பெற்றிடுங்கள்.
நமது உடல் சிறப்பாக செயல்படுவதற்கு நமது நுரையீரல் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எனினும் நமது நுரையீரல்கள் தொடர்ந்து காற்றை மட்டுமில்லாமல், புகைப்படித்தலுடன் காற்றிலுள்ள மாசூட்டிகளால் சில ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பொருட்தளையும் சேர்த்தே சுவாசிக்கும் போது பெறுகிறது. இந்த மாசூட்டிகளால் ஆஸ்துமா, நிமோனியா, புற்றுநோய் என ஏராளமான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

   
 
ஆரோக்கியம்