Back
Home » ஆரோக்கியம்
வீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா? அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்!
Boldsky | 12th Feb, 2019 05:14 PM
 • காபி


  உங்கள் வீட்டில் இருக்க கூடிய உணவு பொருட்களில் காபி சற்று மோசமானது தான். ஏனெனில், நீங்கள் நிம்மதியற்று இருப்பதற்கு காபியும் ஒரு காரணம்.
  காபியில் உள்ள காஃபின் என்கிற மூலப்பொருள் உங்களின் மன நிலையை மாற்ற கூடிய தன்மை பெற்றவை. சில சமயங்களில் இது உங்களுக்கு நரம்பு பிரச்சினையாகவும் அமைந்து விடும்.


 • தக்காளி


  எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனி தன்மை உள்ளது. அந்த வகையில் தக்காளியை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் கோபம் அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மேலும், சீரற்ற மனநிலை உண்டாகுமாம்.


 • பால் பொருட்கள்


  உணவில் அதிக அளவில் பால் பொருட்களை சேர்த்து கொண்டால் ஆபத்து உங்களுக்கு தான். இவற்றில் உள்ள கொழுப்பு தன்மை மன நிலையை பாதித்து சோகத்தை உண்டாக்குமாம். கூடவே மூளையை மந்த தன்மையுடன் வேலை செய்ய வைக்கும்.


 • காளான்


  காளான் சத்தான உணவு தான், இருப்பினும் இதை கண்ட நேரங்களில் அதிக அளவில் எடுத்து கொண்டால் பல்வேறு பாதிப்புகள் உருவாகும்.

  அதில் ஒன்று தான் சீரற்ற மனநிலை இல்லாமல் செயல்படுதல். ருசிக்காக அதிக அளவில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும்.

  MOST READ:இப்படி பல்லால மூடிய திறக்கவே கூடாதாம்! மீறினால் நரம்பு மண்டலத்துல அபாயம் தான்! • காலிபிளவர்

  உணவில் அதிக அளவில் காலிபிளவரை சேர்த்து கொள்வதால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். சத்து கொண்ட உணவாக இருந்தாலும் இதன் அளவில் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் வயிற்று உப்பசம், வாயு தொல்லை, மன சோர்வு போன்ற பாதிப்புகளை உண்டாக்கி விடும்.


 • பிரட்


  குளுட்டன் அதிகம் சேர்ந்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் நடுக்கம், பயம், கோபம், மன அழுத்தம் போன்ற ஒட்டுமொத்த பிரச்சினைகளும் உங்களை குறி வைக்கும். மேலும், இதனால் பசியின்மை, வயிற்று போக்கு, வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்பட கூடும்.


 • சிவப்பு இறைச்சி


  சிவப்பு இறைச்சிகளை எப்போதும் குறைந்த அளவிலே சாப்பிட வேண்டும். காரணம், இவற்றில் அதிக அளவில் உள்ள நிறையுற்ற கொழுப்புகள் இன்சுலின் அளவை அதிகரித்து மோசமான தாக்கத்தை உடலுக்கு உண்டாக்கி விடும்.


 • எண்ணெய் உணவுகள்


  பல வீடுகளில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை மட்டுமே விரும்பும் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். ஆனால், இதிலுள்ள ஆபத்தை இவர்கள் அறிவதில்லை.

  எண்ணெய் உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலில் அமில தன்மையை அதிகரித்து கோபம், மன அழுத்தம், எரிச்சல் போன்ற பல மாற்றங்களை உடலில் கொண்டு வந்து விடும்.

  MOST READ: நீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க இந்த 8 அறிகுறிகள் போதும்!


 • செயற்கை!


  எதிலும் செயற்கை என்கிற உலகமாக மாறி விட்டது. ஆனால், அதற்காக அவற்றை நாம் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை.
  இந்த வகை உணவுகள் தான் ஆயுளை குறைத்து, அபாயத்தை தர கூடியவை. குறிப்பாக செயற்கை நிறமூட்டிகள், செயற்கை இனிப்பூட்டிகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  எனவே, மேற்சொன்ன உணவுகளை குறைவான அளவு சாப்பிட்டு கோபம், சோகம், எரிச்சல் போன்றவற்றை நீக்கி நிம்மதியாக வாழுங்கள் நண்பர்களே.
எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறீர்களா? எப்போதுமே இழவு வீட்டில் இருப்பது போன்று சோகமாகவே உள்ளீர்களா? இதனால் உங்களின் முழு நிம்மதியும் இழந்து விட்டதா? இப்படிப்பட்ட பிரச்சினைக்கு உங்கள் வீட்டில் இருக்க கூடிய சில பொருட்கள் தான் காரணம் என்றால் நம்புவீர்களா?! ஆனால், இதுதான் உண்மை. அறிவியல் பூர்வமாகவும் இதை நிரூபணம் செய்துள்ளனர்.

வீட்டில் இருக்க கூடிய சில உணவு பொருட்கள் தான் உங்களின் முழு நிம்மதியையும் பறித்து கொள்கின்றன. அத்துடன் உங்களின் மன அமைதியையும் முழுவதுமாக கெடுக்க கூடிய அபாயகர தன்மை இவற்றிற்கு உண்டு. இப்படி ஒரு மோசமான உணவு பொருட்கள் நம் வீட்டிலே உள்ளதா என்கிற கேள்வியின் பதிலே இந்த பதிவு. வாங்க, இனி எவையெல்லாம் உங்களை பாடாய்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்