Back
Home » ஆரோக்கியம்
இந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்
Boldsky | 13th Feb, 2019 03:50 PM
 • புற்றுநோய்

  உலகளவில் நடக்கும் மொத்த புற்றுநோய் இறப்புகளில், கழுத்து மற்றும் தலை பகுதி புற்றுநோயால் இறப்பவர்கள் ஒன்று முதல் இரண்டு சதவீதம் ஆகும். தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய் பாதிப்பு உள்ள நபர்களை குணப்படுத்துவதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் உள்ளன, எனவே இந்த புற்றுநோய் பாதித்த நபர்கள் உயிர் வாழ்வது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

  நல்ல செய்தி என்னவெனில், தற்பொழுது மருத்துவர்கள் நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறையை தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய் பாதித்த மக்களிடம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.நோயெதிர்பிய சிகிச்சை ஒரு பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு அறிக்கையின்படி, இந்த சிகிச்சை முறை பிரயோகப்படுத்தப்ட்ட மக்களின் வாழ்நாள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

  MOST READ: உங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...


 • தலை, கழுத்து பகுதி புற்றுநோய்

  நோயெதிர்பிய சிகிச்சை முறையை பற்றி அறிந்துகொள்வதற்ற்கு முன்பு, நாம் முதலில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் என்றல் என்ன, அது எவ்வாறு ஏற்படுகிறது என்பன போன்ற தகவல்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.


 • ஸ்குவாமோஸ் அல்லது செதில் செல்கள்:

  ஸ்குவாமோஸ் அல்லது செதில் செல்கள், மிகவும் மெலிதான, மற்றும் தட்டையான செல்கள் ஆகும். இவை தோலின் மேற்புறம், செரிமான மற்றும் சுவாச பாதைகள், மற்றும் சில முக்கிய உடல் உள்ளுறுப்புகளில் காணப்படுகிறது.

  பின்வரும் உடல் உறுப்புகளில் ஸ்குவாமோஸ் செல்களினால் வரும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

  * தலை மற்றும் கழுத்து
  * தோல்
  * கருப்பை வாய்
  * பெண் உறுப்பு
  * நுரையீரல்
  * ஆசனவாய்


 • வீரியமிக்க செல் பெருக்கம்

  தீங்கற்ற கட்டியை போல் இல்லாமல், வீரியமிக்க செல் பெருக்கத்தால் வரும் கட்டி புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. தலை மற்றும் கழுத்துப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பெருகும் புற்று நோய் செல்கள் மற்ற உடல் பக்கங்களை தாக்காமல் இருக்கலாம், ஆனால் தகுந்த முன்னெச்சரிக்கை சிகிச்சை எடுக்கைவில்லை எனில் புற்றுநோய் மற்ற உடல் பாகங்களுக்கும் பரவி ஆபத்தில் முடியும். இவ்வகையான கட்டிகள் ஆபத்தாகவும் சில சமயங்களில் உயிரிழப்புக்கு வழிவகுப்பதாகவும் இருப்பதால், நோயெதிர்பிய சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் இந்த வகையான கட்டிகளுக்கு அளிக்கப்படுகிறது,


 • எவ்வாறு அறிந்து கொள்வது?

  தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய் என்று நாம் பொதுவாக மொத்த தலை மற்றும் கழுத்து பகுதியையும் குறிப்பிடுவதால், நீங்கள் பதற்றமடைய தேவையில்லை. அப்படி என்றால், இந்த புற்றுநோய் வந்த ஒருவரை எப்படி அடையாளப்படுத்துவது என்று நீங்கள் கேட்கலாம். வாருங்கள் அதற்கான விடையை காணலாம்.

  தலை மற்றும் கழுத்து புற்றுநோய் கீழ்கண்ட ஏதாவது ஒரு பகுதிகளில் உருவாகும் கட்டியை குறிக்கிறது:

  * உதடு அல்லது வாய்
  * வாய் அல்லது தொண்டைக்கு பின்புறம் (ஆங்கிலத்தில் oropharynx)
  * தொண்டைக்கு கீழே மற்றும் குரல்வளையின் பின் பகுதி (ஆங்கிலத்தில் hypopharynx )
  * மூக்கிற்கு கீழே உள்ள தொண்டையின் மேற்பகுதி (ஆங்கிலத்தில் nasopharynx )
  * குரல்வளை (ஆங்கிலத்தில் larynx)

  MOST READ: ரொம்ப கூச்ச சுபாவம்... ஆனா நாத்தனாரோடு ரகசிய லெஸ்பியன் உறவில் இருந்தேன்... இப்படிதான் ஆரம்பிச்சது...


 • காரணம் என்ன?

  ஆரம்ப நாட்களில், புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கமே தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய் வருவதற்கு காரணமாக கருதப்பட்டது. ஆனால் காலபோக்கில் நடந்த ஆய்வுகளில், இந்த புற்றுநோய் உருவாக முக்கிய காரணமாக இருப்பது ஒரு வகையான மனித பாபில்லோமா வைரசுகள் (human papillomaviruses - HPV ) என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமானால், நமக்கு கிடைத்த அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், HPV வகையை சேர்ந்த HPV -16 என்ற வைரஸானது ஆண்கள் மற்றும் பெண்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் உண்டாக்குவதாக தெரிகிறது, மேலும் இதே வைரஸ் ஓரோபாரின்ஸ் பகுதியில் (அதாவது வாய் மற்றும் தொண்டைக்கு பின்புறம் உள்ள பகுதி) புற்றுநோய் உண்டாக காரணமாக உள்ளது.


 • hpv வைரஸ்

  HPV வைரஸ் தோற்று பரவலாக நிறைய மனிதர்களிடம் காணப்படுகிறது. எனினும் ஒரு சிலருக்கே அந்த பாதிப்பு புற்றுநோயாக உருவெடுக்கிறது. ஏனென்றால் பலரிடம் இயல்பாகவே உள்ள நோயெதிர்ப்பு சக்தியால் நோய் பாதிப்பு முற்றிலும் உடலிலிருந்து நீக்கப்படுகிறது.

  இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் என்னவென்றால், HPV வைரஸிற்கும், தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய்க்கும் உள்ள சம்பந்தத்தை கண்டறிந்த பிறகு நடந்த ஆய்வில் பெரும்பாலான புற்று நோய் பாதித்த நபர்களிடம் HPV தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், புற்று நோய் பாதித்த, புகையிலை மற்றும் குடி பழக்கம் உள்ளவர்கள் எண்னிக்கை குறைய தொடங்கியது. இதற்கு என்ன காரணமாக இருந்து விட முடியும்? சமீபத்தில் ஏற்பட்ட சமூகம் மற்றும் பாலியல் சம்பத்தப்பட்ட மாற்றங்களால், வாய் வழி உறவு அதிகரித்து இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும் என்று வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

  தருபொழுதைய காலகட்டத்தில், HPV - பாசிட்டிவ் தலை மற்றும் கழுத்து புற்றுநோயை எவ்வாறு குணப்படுத்துவது என்பதில் ஆர்வம் பெருகி வருகிறது. ஏனென்றால், HPV - நெகடிவ் தலை மற்றும் கழுத்து கட்டிகளின் உயிரியியல் தன்மை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இதன் மூலம், HPV- தொடர்புடைய புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக பல்வேறு நோயெதிர்ப்பிசார் உத்திகளில் பல நிபுணர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.


 • நோயெதிர்ப்பு சோதனைகள்

  நோயெதிர்ப்பு சோதனைகள் என்பவை நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பில் பொதுவாக காணப்படும் ஒருவகை புரதத்தால் மேற்கொள்ளப்படுவதாகும். இவை டி-செல்கள் (T cell ) என்று அழைக்கப்படுகின்றன. இந்த டி செல்கள்தான் நம் உடம்பிலுள்ள காவல் அதிகாரிகள் போன்றவை. இவை நம் உடலில் எங்காவது புற்றுநோய் அல்லது வேறு கட்டிகள் வளர்ந்துள்ளனவா என்று கண்காணித்துக்கொண்டே இருக்கும்.

  இந்த டி செல்கள் உடலில் வேறு ஒரு செல்லை எதிர் கொள்ளும் பொழுது, தன் மேற்பரப்பில் உள்ள ஒருவித புரதத்தின் உதவியுடன், அந்த செல் சாதாரணமான ஒன்றா இல்லை அசாதாரணமான ஒன்றா என்று தீர்மானம் செய்யும். அசாதாரணமான செல் என்று தெரிந்தால் உண்டானடியாக டி செல் அந்த செல்லை தாக்கி அழித்து விடும்.

  சரி, இவ்வாறு தாக்கும் போது, நல்ல நிலைமையில் உள்ள ஆரோக்கியமான செல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? அதற்காகத்தான் சோதனை புரதங்கள் (checkpoint proteins) இருக்கின்றன. சோதனை புரதங்கள், டி செல்களின் மேட்புறத்தில் ஒட்டி கொள்வதன் மூலம் நல்ல செல்கள் எதுவும் தாக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.


 • வீரியமான புற்றுநோய்

  ஆனால், புற்றுநோய் ஒன்றும் சளைத்தது அல்ல, புற்றுநோயும் அதே மாதிரியான போலி சோதனை புரதங்களை உருவாக்குகிறது. இதன் மூலம் மனித நோயெதிர்ப்பு அமைப்பிடம் இருந்து புற்று நோய் கட்டி தப்பிக்கறது. நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பிக்க புற்றுநோய் செல்களின் மேற்பரப்பில் வெளிப்படும் ஒரு சோதனைப் புரதம் PD-1 ஆகும். தற்பொழுது மருத்துவ வல்லுநர்கள் இந்த PD - 1 புரதத்தை எவ்வாறு தடுக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இவ்வாறு கண்டறிந்து அந்த புரதத்தை அழிப்பதன் மூலம், ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலம், தானாகவே புற்றுநோய் செல்களை கண்டு அழிக்கிறது. இங்குதான், நோயெதிர்பிய சிகிச்சை அல்லது இம்யூனோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. PD -1 புரதத்தை தாக்கி அழிக்கும் மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டல சோதனை தடுப்பான்கள் (immune system checkpoint inhibitors) என்று அழைக்கப்படுகின்றன.

  MOST READ: அட! நம்ம கப்பீஸ் பூவையாருக்கும் தலைவி ஓவியாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்காமே!


 • நோயெதிர்பிய சிகிச்சை அல்லது இம்யூனோதெரபி

  கழுத்து மற்றும் தலை பகுதியில் மேற்புற தோல் செதில்களில் ஏற்படும் பரவக்கூடிய மற்றும் தொடரக்கூடிய புற்றுநோய்க்கு மருந்தாக இரண்டு நோயெதிர்ப்பு மண்டல சோதனை தடுப்பான்களை FDA அமைப்பானது 2016 ஆம் ஆண்டு அங்கீகரித்துள்ளது.

  தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவும் வாய்ப்பு இருந்தால், அதை நாம் பரவக்கூடிய புற்றுநோய்(Metastatic cancer) என்று அழைக்கிறோம். என்னதான் மருத்துவ சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்தாலும், எந்த ஒரு முன்னேற்றம் இல்லாமல் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கும் புற்றுநோயை தொடர்ச்சியான தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோய் (recurrent head and neck cancer ) என்று அழைக்கிறோம்.


 • பக்க விளைவுகள்

  * களைப்பு
  * ஹைப்போ தைராய்டிசம் (செயலற்ற தைராய்டு சுரப்பி)
  * குமட்டல்
  * கல்லீரல் நொதிகளின் அதிகரிப்பு
  * வயிற்றுப்போக்கு

  மொத்தத்தில், நோயெதிர்ப்பு மண்டலம் சம்பந்தமான பாதகமான விளைவுகள் என்றால், அவை ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம், மற்றும் நியூமேனிடிஸ் ஆகியவை ஆகும்.

  நோயெதிர்பிய சிகிச்சையில், நோயெதிர்ப்பு மண்டலம் சம்பந்தமான பாதகமான விளைவுகளை நாம் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் திசுக்களை மட்டுமல்ல, ஆரோக்கியமான திசுக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நியூமேனிடிஸ் நிலையில், ஒருவரின் நுரையீரலானது குறிவைக்க படுகிறது, இதன் மூலம் ஒருவரின் மூச்சு விடும் திறன் பாதிக்க பட்டு மூச்சு விட சிரமப்பட வேண்டியது இருக்கும்.


 • உடல் திசுக்கள்

  நமது உடல் எது நல்ல திசு எது கெட்ட திசு என்று தீர்மானம் செய்து கொள்ள உதவுவதால், நோயெதிர்பிய சிகிச்சை பெறுவது ஒரு மென்மையான செயலாக கருதப்படுகிறது.

  தற்பொழுது மூன்றாம் நிலை ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது, நோயெதிர்பிய சிகிச்சை முறையானது தற்பொழுது பயன்பாட்டில் உள்ள சிகிச்சை முறைகளுடன் சிறந்த வகையில் ஒப்பிட்டு, எந்த வகையில் சிறந்து விளங்குகிறது என்பதை கண்டறியும் ஒரு ஆய்வாகும்.


 • தைராய்டு

  தைராய்டுடன் தொடர்புடைய பாதகமான விளைவுகள் நுவோலூப் சிகிச்சை பெற்ற குழுவில் பொதுவாக காணப்பட்டது (7.6 சதவீத நுவோலூப் சிகிச்சை பெற்ற மக்களிடம் ஹைப்போ தைராய்டிசம் உருவானது, இந்த அளவு, சாதாரண சிகிச்சை பெற்ற மக்களிடம் ௦.9 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது).


 • நுரையீரல் தொற்று

  நியூமேனிடிஸ் பாதிப்பு, நுவோலூப் சிகிச்சை பெற்ற 2.1 சதவீத மக்களிடம் காணப்பட்டது. மேலும் இரண்டு பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர் (இதில் ஒருவர் நியூமேனிடிஸ் பாதிப்பினாலும் மற்றொருவர் ரத்தத்தில் அதிகப்படியான கால்சியம் உயர்வாலும் இறந்தார்). சாதாரண மருத்துவ சிகிச்சையில், ஒருவர் நூரையீரல் தொற்றால் இறக்க நேரிட்டது.

  ஆய்வின் முடிவில், அனைவரிடமும் வாழ்க்கையின் தரத்தை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டன. நுவோலூப் சிகிச்சை பெற்ற பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் குறையவில்லை என பதில் கூறி வியப்பில் ஆழ்த்தினர். மற்றொருபுறம், சாதாரண சிகிச்சை பெற்ற மக்கள், தங்கள் வாழக்கை தரம் நிறைய இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து காணப்பதாக கூறினர். குறிப்பாக வலி, உடல் மற்றும் சமுக நடைமுறை, உணர் உறுப்பு பிரச்சனைகளை கீமோதெரபி சிகிச்சைக்கு பின் சந்தித்தாக கூறுகின்றனர்.


  MOST READ: பூசணிக்காய் சதை பெண்களோட பிறப்புறுப்புல வர்ற இந்த வியாதிய கட்டுப்படுத்துமாம்...


 • இறுதியாக ஒரு வார்த்தை

  நோயெதிர்பிய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சையின் முகாந்திரத்தை ஏற்கனவே மாற்ற ஆரம்பித்துவிட்டது. நோயெதிர்பிய சிகிச்சை முறை நியாயமானது, அர்த்தமுள்ளதாக இருக்கிறது, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட பலன்களை கொடுக்கிறது.

  தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோயை குணப்படுத்துவது மிகவும் சிக்கலான நடைமுறை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே மருத்துவர் ஒருவர் பல காரணிகளை ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை முறையை அளிக்கலாம் என முடிவு செய்வார். ஒருவரின் கடந்த கால சிகிச்சை முறைகள், ஒருவருக்கு இருக்கும் மருத்துவ ரீதியிலான மற்ற பிரச்சினைகள், சில மருந்துகளினால் வரும் ஒவ்வாமை போன்றவற்றை ஆராய்ந்தே சிகிச்சை முறையை மருத்துவர் முடிவெடுப்பார்.

  அறிவைப் பெறுவதன் மூலம் ஒருவரின் புற்றுநோய்க்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களின் வாழ்க்கை பயணம் நீண்ட மற்றும் கடினமான ஒன்று. எனவே அதை பற்றி எதுவும் நினைக்காமல், கவலைப்படாமல் சவுகரியமாகவும் மகிழ்ச்சியுமாகவும் இருக்க கற்று கொள்ள வேண்டும்.
தற்பொழுதைய உலகில் புற்றுநோயானது சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படுகிறது. நம் உடலில் பாதிக்கப்படும் இடங்களுக்கு ஏற்ப புற்றுநோயானது வகைப்படுத்த படுகிறது. அவற்றுள் நாம் இன்று பார்க்க இருப்பது கழுத்து மற்றும் தலை பகுதியில் ஏற்படும் புற்றுநோயாகும்.

உலகளவில் ஏற்படும் புற்றுநோயில் கழுத்து மற்றும் தலை பகுதியில் உள்ள மேற்புற தோல் செதில்களில் ஏற்படும் புற்றுநோயானது ஆறாம் இடத்தை வகிக்கிறது.

இவ்வாறு உலகில் அதிகம் பேர் உயிரிழக்க காரணமாக உள்ள புற்றுநோயை குணப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.தற்போது வரை கீமோதெரபி,ரேடியோ தெரபி போன்ற மருந்துகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

   
 
ஆரோக்கியம்