Back
Home » ஆரோக்கியம்
விஷ்ணுதர்ம புராணத்தின் படி இதையெல்லாம் செய்தால், உங்களுக்கு இத்தனை வகையான கொடூர நோய்கள் ஏற்படுமாம்.!
Boldsky | 15th Feb, 2019 05:11 PM
 • ஆயுர்வேதம்!


  பாற்கடலை கடைந்து பகவான் விஷ்ணு அமிர்தத்தை எடுத்து வந்த புராணம் நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். நீண்ட ஆயுளை பெற தேவர்களுக்காக கொண்டு வந்த இந்த அமிர்தத்தின் காரணமாக பகவான் விஷ்ணு மருத்துவத்தின் தந்தையாகவே பார்க்கப்படுகிறார். இதனால் தான் ஆயுர்தேவத்தின் தலைமை தெய்வமாக விஷ்ணுவை போற்றுகின்றனர்.


 • விஷ்ணு புராணம்


  பல்வேறு வகையான புராணங்கள் இந்த பூமியில் இருந்தாலும் விஷ்ணு புராணத்திற்கென்று ஒரு தனி சிறப்பு எப்போதும் உண்டு. ஏனெனில், இவர் தான் நம்மை காக்கும் கடவுளாக உள்ளார்.
  அதனாலே விஷ்ணு புராணத்தின் மீது எல்லா கால கட்டத்திலும் தனி மதிப்பும் உள்ளது. மேலும், பலவித ஆராய்ச்சிகளுக்கு விஷ்ணு புராணம் மூல சான்றாக இருக்கிறது.


 • நீரும் உணவும்


  இந்த பேரண்டத்தின் மூல கருவே நீர் தான். நீர் இல்லையேல் உலகில் எந்த உயிரினமும் வாழ இயலாது. இதே நீர் மனித உயிருக்கு நஞ்சாகவும் மாறும்.
  எப்போதென்றால் சாப்பாட்டுக்கு பிறகு உடனே நீர் குடிப்பதால். சாப்பிட்டவுடன் நீர் குடித்தால் 103 விதமான நோய்கள் ஏற்படும் என விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது.

  MOST READ: ஆண்களே! உங்களுக்கு இதனால் தான் விந்து உற்பத்தி தடைபடுதாம்..!


 • பாத்திரங்கள்


  நாம் இன்று சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் பலவும் 48 வகையான நோய்களை உருவாக்குமாம். அலுமினியம், ஸ்டீல், மெட்டல் போன்ற உலோகங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாத்திரங்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம். பூமி தாய் தந்த மண்ணில் இருந்து செய்யப்படுகின்ற பாத்திரங்கள் நோய்கள் தடுக்கும் ஆற்றல் பெற்றது என அப்போதே புராணத்தில் கூறியுள்ளனர்.


 • பாலும் மதுவும்


  விஷ்ணு புராணத்தின் படி டீயை பாலில் கலந்து குடிப்பது உடலுக்கு நல்லதல்ல எனவும், இவ்வாறு குடிப்பதால் மிக விரைவிலே நோய்கள் இதயத்தை தாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  இது போன்று தான் மதுவின் பாதிப்பும் மனித உடலுக்கு ஆபத்தை தரும். இதனால் 80 வித நோய்கள் உடலில் உண்டாக வாய்ப்புள்ளதாம்.


 • சாப்பாடு


  மனிதன் உயிர் வாழ தேவையான உணவுகளை சாப்பிடுவதற்கும் புராணத்தில் சில கருத்துக்களை கூறியுள்ளனர்.
  அதாவது சமைத்த உணவை 12 மணி நேரத்திற்கு பிறகு நாம் சாப்பிடகூடாதாம். ஏனென்றால், இதிலுள்ள சத்துக்கள் முழுவதும் குறைந்து சக்கை போல மாறியிருப்பது தான் காரணம்.


 • ஆயுள் குறைவு!


  விஷ்ணு புராணத்தின் படி தூங்கும் போது வாயை திறந்து கொண்டே தூங்குபவர்களுக்கு ஆயுள் பாதியாக குறையும் எனவும், இதனால் சுவாசிக்கும் போது பலவித பிரச்சினைகள் உண்டாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  MOST READ: இந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, இதை தான் சாப்பிடறாங்க..!


 • செரிமான மண்டலம்


  நாம் செய்கின்ற சிறி தவறுகள் கூட செரிமான மண்டலத்தை முற்றிலுமாக பாதிக்கும் என விஷ்ணு புராணம் கூறுகிறது. அதுவும் சாப்பிட்டவுடன் குளித்தால் நிச்சயம் அஜீரண கோளாறுகள் ஏற்படுமாம். அத்துடன் நோய் தொற்றுகளும் உண்டாகும்.


 • முட்டை


  விஷ்ணு புராணத்தில் முட்டை சாப்பிடுவதால் ஏற்படுகின்ற பாதிப்புகளையும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது முட்டை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், இதயம் பலவீனம் அடைதல், மேலும் ஆண்களின் அந்தரங்க உறுப்புகள் பாதிக்கப்படுதல் முதலிய அபாயங்கள் உண்டாகும் என கூறப்பட்டுள்ளது.


 • இறைச்சி


  விஷ்ணு புராணத்தின் படி இறைச்சி சாப்பிடுவதால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும் எனவும், இதனால் இரத்தம், எலும்புகள், தசை போன்றவை வியாதிகள் சூழ பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
  சுமார் 160 வகையிலான நோய்கள் இறைச்சி சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் என விஷ்ணு புராணம் உரைக்கிறது.

  MOST READ: ஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு! வைரல் செய்தி!
இந்த பூமியை சுற்றி பல்லாயிர கணக்கான நோய்கள் வலம் வந்தாலும் அவற்றில் சில மட்டுமே நம் உயிருக்கு உலை வைக்கின்றன. எதுவாக இருந்தாலும் நாம் செய்கின்ற செயல்கள் தான் இந்த வித நோய்களுக்கு பிள்ளையார் சுழியை போடுகிறது. செயல்கள் தான் நம்மை இந்த அளவிற்கு பரிணாம வளர்ச்சி அடைய வைத்தது. அதே செயல்கள் தான் நம் உயிரை குடித்து வருகிறது.

உடலில் இருக்க கூடிய ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனி செயல்பாடுகள் இருப்பது போலவே அதனால் உண்டாகும் தாக்கங்களும் தனித்துவமாகவே உள்ளன. உடலில் ஏற்பட கூடிய மாற்றங்களை பற்றி விஷ்ணு புராணம் இதை தான் சொல்கிறது. இந்துக்களின் சாஸ்திரப்படி விஷ்ணு புராணத்தில் குறிப்பிடும் அனைத்துமே நம் வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.

இது ஆயுர்வேதத்தின் கரு என்றே போற்றப்படுகிறது. இந்த புராணத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே என்னென்ன செய்தால் எப்படிப்பட்ட நோய்கள் உருவாகும் என்பதையும், எத்தனை விதமான நோய்கள் ஏற்படும் என்பதையும் கூறியுள்ளனர். இதை பகவான் விஷ்ணுவே கூறியுள்ளதாக நம்பப்படுகிறது. இனி இதன் விவரத்தை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்