Back
Home » ஆரோக்கியம்
மூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா? உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...
Boldsky | 19th Feb, 2019 11:25 AM
 • எளிய முறை

  அலற்சி அல்லது சலதோஷம் மூக்கடைப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு உப்பு கலந்த நீரை மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக ஊற்றினால் போதும். மூக்கடைப்பு சரியாகி சளியும் சேர்ந்து வெளியேறி விடும்.

  MOST READ: பெண்ணுக்கு பிறப்புறப்பில் மச்சம் இருந்தா பேரதிஷ்டமாம்... அப்போ ஆண்களுக்கு?


 • தேவைப்படும் பொருட்கள்

  இந்த முறையை செய்ய நமக்கு ஒரு பாட்டில் அதில் சலைன் நீர்மம் வேண்டும். இதற்கு துவாரம் உடைய நெட்டில் பாத்திரத்தை பயன்படுத்துங்கள். இந்த பொருட்களை எல்லாம் அருகில் உள்ள மருத்துவ கடைகளில் கூட வாங்கிக் கொள்ள முடியும்.


 • நீர்மக் கலவை

  ஏற்கனவே சலைன் நீர்மம் இருந்தால் கீழ்க்கண்ட முறையை பின்பற்ற தேவையில்லை

  முதலில் சலைன் பவுடரை எடுத்து 1-2 கப் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். இதை கொதிக்க வைக்கும் போது தொற்று சரியாகி விடும்.
  இதனுடன் 1/4 - 1/2 டீ ஸ்பூன் அயோடின் கலக்காத உப்பு மற்றும் சிறுதளவு பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்.


 • அமரும் நிலை

  மூக்கில் ஊற்ற நெட்டி பாட் அல்லது ஊசியை பயன்படுத்தலாம். தலையை 45 டிகிரி கோணத்தில் சாய்த்து வைத்துக் கொண்டு மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக சலைன் நீரை விடுங்கள். உடனே தலையை கவிழ்க்க வேண்டாம்.


 • ஊற்றும் விதம்

  நெட்டி பாட்டிலின் நுனி உங்கள் மூக்கு துவாரத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். வாயை திறந்த நிலையில் வைத்துக் கொண்டு பாட்டிலை அல்லது ஊசியை அழுத்துங்கள்.மூக்கினால் மூச்சுவிட்டால் திரவம் வெளியேறிவிடும். எனவே வாயைக் கொண்டு மூச்சு விடவும்.


 • காத்திருங்கள்

  இந்த உப்பு கலந்த நீர் நம் சுவாசப் பாதை வழியாக சென்று சுவாதி பாதையை சுத்தமாக்கி விடும். வாய் வழியாக வரும் போது அந்த நீரை துப்பி விடுங்கள். உள்ளே முழுங்க வேண்டாம். அப்படியே முழுங்கி விட்டாலும் பெரிதாக எதுவும் பயமில்லை.


 • மூக்கை சுத்தம் செய்யுங்கள்

  இப்பொழுது மூக்கை நன்றாக சீந்தி விட்டு மறுபடியும் இந்த முறையை செய்யுங்கள். இப்படி செய்யும் போது உங்கள் சுவாச பாதை சுத்தமாகி சீக்கிரம் சளி வெளியேறி விடும். மூக்கடைப்பு தொந்தரவும் இனி இருக்காது.

  MOST READ: ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு இந்திரியம் வெளியாகுமா?


 • எரிச்சல்

  உப்பை குறைந்த அளவு பயன்படுத்துங்கள். இந்த நீர் வெதுவெதுப்பாக இருக்கட்டும். சூடாக அல்லது குளிராக இருக்க வேண்டாம்.

  வேலை செய்யும் விதம்

  1-2 முறை பயன்படுத்தும் போதே நல்ல பலன் கிடைக்கும். திரும்பவும் பயன்படுத்தும் போது மூக்கடைப்பு, சளி தொல்லை, சைனஸ் பிரச்சினை சரியாகி விடும்.


 • சளி வெளியேற்றம்

  ஒரு நாளைக்கு ஒரு முறை என உப்பு கரைசலை பயன்படுத்தும் போது அது சளியை இளக்கி விடும். சுவாச பாதையில் உள்ள பாக்டீரியாவை அழித்து, வறட்சியை போக்கி மூக்கடைப்புக்கு நிவாரணம் அளிக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்து வந்தாலே போதும் சலதோஷம் ஓடி விடும்.


 • இது சரியானதா?

  இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரும் சலதோஷ பிரச்சினைகளை சரி செய்கிறது. காது தொற்று உள்ளவர்கள், மூச்சு விட ரெம்ப சிரமப்படுபவர்கள் இதை செய்ய வேண்டாம்.

  MOST READ: பாதாமை பச்சையாக சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்னு தெரியுமா? இனிமே சாப்பிடாதீங்க • மூக்கடைப்பு

  சுவாச பாதையில் உள்ள சுவர்கள் அலற்சி அடைவதால் இத ஏற்படுகிறது. இது சுவாச பாதையை வீங்க செய்து பாதையை அடைத்து விடும். அந்த பகுதி வறண்டு போய் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனா‌ல் பாக்டீரியாவும் பெருகி சலதோஷம், காய்ச்சல், தொண்டை வலி என்று ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும்.


 • நன்மைகள்

  இந்த சலைன் திரவம் சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து மூக்கில் உள்ள முடியின் மூலம் தேவையற்ற சளிகளை தொண்டைக்கு அனுப்புகிறது. வீக்கத்தை குறைப்பதால் அப்புறம் மூச்சுவிட லேசாகி விடும்.


 • அழற்சியை போக்க என்ன செய்ய வேண்டும்?

  வீட்டில் ஏசி உபயோகிக்க படுத்த வேண்டும்
  வீட்டினுள் ஈரப்பதத்தை பராமரியுங்கள்
  சமைக்கும் போது எக்ஸாட் ஃபேன் பயன்படுத்துங்கள்.
  தூசியில்லாமல் வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
  சுத்தமான தலையணை, விரிப்பை பயன்படுத்துங்கள்.

  MOST READ: குடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்?


 • மருத்துவர் ஆலோசனை

  உங்களுக்கு நாள்பட்ட சைனஸ் பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள். மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. அது தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.
மழைக்காலம் வந்துட்டாலே போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சலதோஷமும் சேர்ந்தே வந்துவிடும். இதனால் இரவில் மூக்கடைப்பு ஏற்பட்டு நிம்மதியாக தூங்க கூட முடியாது. அதிலும் குழந்தைகள் என்றால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதை எளிதாக சில வழிகளைக் கொண்டு சரி செய்ய இயலும். அதைப் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.

   
 
ஆரோக்கியம்