Back
Home » ஆரோக்கியம்
முளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள்! மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்!
Boldsky | 19th Feb, 2019 05:21 PM
 • உணவும் விஷயமாகுமா?


  பலருக்கும் இந்த கேள்வி உண்டு. எப்படி சாதாரண உணவு விஷமாக மாறிவிடுகிறது என்று! அதாவது, நாம் சாப்பிட கூடிய உணவு பொருளானது அதன் தன்மையில் தனியாக இருக்கும் போது எந்தவித பிரச்சினைகளும் உண்டாகாது.

  அதுவே அதற்கு எதிர்வினையாக இருக்க கூடிய உணவுகளோடு சேர்த்தால் அவ்வளவு தான். சில நேரங்களில் இது போன்று நடந்தால் உயிருக்கு ஆபத்தாகி விடும்.


 • முளைக்கட்டிய தானியங்கள்


  பச்சை பயிறு, வெந்தயம், சுண்டல், கொண்டை கடலை போன்றவற்றை நாம் நீரில் ஊற வைத்து மறுநாள் அவை முளைகட்டிய பின் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.
  இப்படி முளைகட்டிய உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இதனால் கூட உயிருக்கே ஆபத்து நேர வாய்ப்புகள் உண்டு என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.


 • சத்துக்கள்


  மற்ற உணவுகளை போலவே முளைக்கட்டிய தானியத்திலும் பல்வேறு ஊட்டசத்துக்கள், தாதுக்கள், கலோரிகள் உள்ளன. முக்கியமாக பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் கே, வைட்டமின் எ, ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள், நீர்சத்து ஆகியவை நிரைந்துள்ளன. இருப்பினும் முளைக்கட்டும் போது சில மாறுதல்கள் இவற்றில் ஏற்படுகின்றன. அவை தான் நமக்கு ஆபத்தே.


 • பாதிப்பு


  முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் சிலருக்கு உணவே விஷயமாக(food poisoning) மாறி விடுமாம். இதனால் அடிவயிற்றில் வலி, வயிற்று போக்கு, காய்ச்சல், செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் வாந்தி, மயக்கம் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

  MOST READ: வெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராவ்பெர்ரி பழத்தை இதோடு சேர்த்து தலைக்கு தடவினால் போதும்! • காரணம்?


  இப்படி ஒரு சாதாரண உணவு விஷ தன்மையுள்ளதாக மாறுவதற்கும் சில காரணிகள் உண்டு. தானியங்கள் முளைக்கட்ட நாம் அவற்றை நீரில் ஊற வைக்கும் போது தான் இந்த பாதிப்புக்கான அஸ்திவாரம் தொடங்குகிறது.
  நாம் நீரில் ஊற வைக்கும் போது ஈ. கோலி மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இந்த ஈரப்பதமான சூழலில் உருவாக தொடங்கும். இதுதான் இதன் இயல்பு.


 • சாப்பிடும் போது...


  இப்படி உருவாகிய பாக்டீரியாக்கள் அடங்கிய முளைகட்டிய தானியங்களை நாம் உண்ணும் போது நமக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதுதான் மேற்சொன்ன பாதிப்புகளை உண்டாக்குகிறது. குறைந்தது 12 முதல் 72 மணி நேரத்திற்குள் இதன் தாக்கம் நமக்கு ஏற்படும்.


 • எதிர்ப்பு சக்தி


  எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  இவற்றை பச்சையாகவோ அல்லது பாதியாக சமைத்து சாப்பிடும் போது தான் இதனால் அபாயங்கள் உண்டாகும். இதுவே இதனை நன்றாக சமைத்து சாப்பிட்டால் இதன் பாதிப்பு குறையும்.


 • தீர்வு?


  முளைக்கட்டிய தானியங்களை சாப்பிட விரும்புவோர் இந்த 4 டிப்ஸ்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
  1. ஃபிரஷ்ஷான முளைக்கட்டிய தானியங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கடைகளில் இருந்து வாங்கும் போது அவற்றின் காலாவதி காலத்தை பார்த்து வாங்க வேண்டும்.
  2. ஒரு வித நாற்றம் அல்லது வழவழப்பாக உள்ள முளைக்கட்டிய தானியங்களை பயன்படுத்தாதீர்கள்.

  MOST READ: இந்த நிறத்தில் இருக்கும் குடைமிளகாயை மட்டும் சாப்பிடுங்க! அப்புறம் பாருங்க என்னெல்லாம் நடக்குதுன்னுஇந்த பூமியில் ஆயிர கணக்கான உணவு வகைகள் உள்ளன. இவற்றில் சில உணவுகள் மட்டுமே நமது உடலுக்கு ஏற்றவையாக இருக்கும். ஒரு சில உணவுகள் மனித உடலுக்கு ஏற்றதாக இருக்காது. அப்படிப்பட்ட உணவுகளை நாம் தெரியாமல் கூட சாப்பிட கூடாது. சில உணவுகளை வேறொரு உணவோடு சேர்த்து சாப்பிட்டால் விஷ தன்மை பெற்று விடும்.

உதாரணத்திற்கு தேனையும் சுடு நீரையும் நாம் சேர்த்து குடிக்க கூடாது. மீறி குடித்தால் அவை விஷ தன்மை பெற்று விடும். அந்த வகையில் முளைகட்டிய தானியங்களும் அடங்கும். முளைக்கட்டிய தானியத்திலுமா பிரச்சினை..? என்று கேட்போருக்கான பதிலை தருகிறது இந்த பதிவு.

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடலாமா? சாப்பிடுவதால் எப்படிப்பட்ட பிரச்சினைகள் உடலுக்கு ஏற்படும்? இதற்கான தீர்வு என்ன? போன்ற பல தகவல்களை இனி அறிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்