Back
Home » ஆரோக்கியம்
இந்த ஒரு நோய் உங்களுக்கு இருந்தால், கூடவே புற்றுநோயும் வரும்- ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!
Boldsky | 21st Feb, 2019 02:50 PM
 • நோய்கள் 1000!


  பல்வேறு நோய்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே நமக்கு மோசமான பாதிப்பை தருகின்றன. சில நோய்கள் வந்த உடனே நம்மை கொன்று விடும் அளவிற்கு வீரியம் வாய்ந்தவை. ஒரு சில நோய்கள் மட்டும் தான் நிதானமாக அதன் செயல்பட்டை நம் உடலில் தொடங்கும்.


 • சர்க்கரை நோய்


  உலக அளவில் சர்க்கரை வியாதி என்பது ஒரு மோசமான நோயாகவே கருதப்படுகிறது. காரணம் இதனால் உண்டாகும் பக்க விளைவுகள் தான். இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவில் தற்போது சர்க்கரை நோயின் பாதிப்புள்ளது. 2017 எடுத்த கணக்கெடுப்பின் படி 72 மில்லியன் இந்திய மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர். இது 2018 இரட்டிப்பாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


 • காரணம்


  சர்க்கரை நோய் நாம் நினைப்பது போன்று அவ்வளவு சாதாரணமான ஒன்று கிடையாது. நம் உடலில் இன்சுலின் உற்பத்தி தடைப்படும் போது அவை சர்க்கரை நோயிற்கு வழி வகுக்கிறது. இதற்கு கார்போஹைட்ரட்டின் அளவு அதிகரிப்பதும் ஒரு முக்கிய காரணம். சில நேரங்களில் மோசமான விளைவை இவை உண்டாக்கி விடும்.


 • அமில தன்மை


  உடலில் அமில தன்மை அதிகமாகினால் ஏராளமான பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றானாக உண்டாகும். அவற்றில் மிக முக்கியமானது தான் புற்றுநோயும். அமில தன்மை அதிகரித்தல் புற்றுநோய் செல்களை எளிதாக வளர்த்தெடுப்பதற்கு மூல காரணமாக இருக்கிறது.

  MOST READ: அஸ்வகந்தா மூலிகையில் இவ்வளவு ஆபத்துகள் உண்டா? இனி ஜாக்கிரதையா இருந்துக்கோங்க! • சர்க்கரையும் புற்றுநோயும்!


  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் நிச்சயம் அவை புற்றுநோய் செல்களுக்கு இருப்பிடத்தை உருவாக்கி கொடுக்கும். நொதித்த சர்க்கரையும், குறைவான அளவு ஆக்சிஜனும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.


 • பாலியல் நோய்கள்


  பால்வினை சார்ந்த நோய்களிலும் இந்த சர்க்கரையின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக HPV போன்ற தொற்றுகள் உடலில் ஏற்கனவே இருந்தால் அவை உங்களுக்கு கருப்பை புற்றுநோய், பிறப்புறுப்பில் புற்றுநோய் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை.


 • உடல் எடை


  உடல் பருமன் கூடி கொண்டே போகும் பலருக்கும் அதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி தெரிவதில்லை. உடல் எடை கூடினால் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரிக்கும். அதே போன்று இவை குடல் சார்ந்த புற்றுநோயையும் ஏற்படுத்தும்.


 • காரணம்?


  உடல் பருமனால் கூட புற்றுநோய் உண்டாகுமா? என்கிற கேள்விக்கும் பதிலுண்டு. அதாவது, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அளவு குறைகிறது இவை கணையத்தின் செயல்பாடு பாதிப்பதால் உண்டாகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புற்றுநோய் உண்டாகும் என கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  MOST READ: காலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா?


 • தவிர்த்தல்


  ஆகையால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவின் தன்மையும் முக்கியம் என்பதை மறவாதீர்கள். நார்சத்து உணவுகள், தானிய வகைகள், நன்கு சமைத்த உணவுகள் போன்றவற்றை எடுத்து கொண்டால் மேற்சொன்ன அபாயத்தில் இருந்து காத்து கொள்ளலாம். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த அல்லது பொறித்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
"நோய்களுக்காக பஞ்சமில்லை" என்கிற அளவுக்கு நோய்கள் அதிரடியாக உருவாகி கொண்டே இருக்கின்றன. மருந்துகள் தயாராகும் வேகத்தை விட நோய்களும் அதன் வீரியமும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எப்போவாவது தான் நோய்கள் கொத்து கொத்தாக மனிதர்களை கொள்ளும். ஆனால், தற்போது மோசமான அளவில் இது மனித இனத்தையே பலவீனம் கொள்ள செய்கிறது.

காரணம், நோய்களின் முழு பலமும், அதன் தொடர்ச்சியும் தான். ஒரு நோய் வந்தால் அதன் கூடவே வேறொரு நோயும் தொடர்ந்து வருகிறது. இன்று பெரும்பாலானோரை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நோய் சர்க்கரை வியாதி தான். ஒரு பக்கம் சர்க்கரை வியாதி வந்தால் இதய நோய் வரும், இரத்தத்தில் பாதிப்பு வரும் என்றெல்லாம் சொல்கின்றனர்.

ஆனால் தற்போது இவற்றை காட்டிலும் கொடூரமான விளைவை இவை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. இது எப்படி சாத்தியமாகும்? எதனால் இந்த அபாயம் போன்ற பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்