Back
Home » ஆரோக்கியம்
கம்மங்கூழ் சாப்பிட்டா உடம்பு கூடுமா? குறையுமா? உண்மையை நீங்களே பாருங்க... அப்புறம் முடிவு பண்ணுங்க
Boldsky | 21st Feb, 2019 12:45 PM
 • இந்தியாவில் விளைச்சல்

  உயர் தட்ப வெப்பத்திலும், செழுமையான மண் இல்லாத போதிலும் இந்த பயிர் நன்கு விளைவதால் ராஜஸ்தானிய உணவுகளில் இது முக்கிய இடம் பிடிக்கிறது. கம்பு விளைச்சலில் ராஜஸ்தான் மாநிலம் முன்னிலையில் இருக்கிறது. உலக நாடுகளின் கம்பு உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அடிப்படையில் கம்பு என்பது ஒரு தானியம் அல்ல. சிறு விதைகள் கொண்ட குடும்பத்தை சார்ந்த திணை வகையை சேர்ந்ததாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்பே கம்பு இந்தியாவில் பயிர் செய்யப்பட்டது. கிமு2000 ஆண்டில், ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தது இந்த திணை.


 • ஊட்டச்சத்து

  ஊட்டச்சத்திற்கு ஆதாரமாக விளங்கும் உணவுகளை மட்டுமே ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் சிறப்பாக பொருந்தும் தன்மை கம்பிற்கு உண்டு. அதன் ஊட்டச்சத்து விபரங்கள் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோம்.


  100 கிராம் கம்பின் ஊட்டச்சத்து மதிப்பு:
  . ஆற்றல் - 361 Kcal
  . கார்போஹைட்ரெட் - 67 கிராம்
  . புரதம் - 12 கிராம்
  . கொழுப்பு - 5 கிராம்
  . கனிமம் - 2 கிராம்
  . நார்ச்சத்து - 1 கிராம்
  . கால்சியம் - 42 கிராம்
  . பாஸ்பரஸ் - 296 கிராம்
  . இரும்பு - 8 மிகி

  MOST READ: சமைக்கும்போது புதினா போடறது வாசனைக்கு நெனச்சீங்களா? அது இந்த 5 விஷயத்துக்கு தான்.


 • எடை நிர்வகிப்பு

  கம்பில் உள்ள கார்போஹைட்ரெட் காரணமாக, செரிமான பாதையில் மெதுவாக உறிஞ்சப்பட்டு, நீண்ட நேரம் பசி எடுக்காத நிலை உண்டாகிறது. இதனால் ஆற்றல் தொடர்ச்சியாக உடலில் இருந்து வெளிப்பட்டு எளிதான இயக்கம் சாத்தியமாகிறது. இதனால் ஒவ்வொரு உணவு இடைவெளியிலும் தேவையற்ற உணவை சாப்பிடாத நிலை உண்டாகிறது.


 • க்ளுடன் இல்லாத திணை

  தினமும் களுடன் அதிகம் உள்ள உணவை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு கம்பு ஒரு சிறந்த மாற்று உணவாக உள்ளது. கம்பில் க்ளுடன் இல்லாத புரதம் உள்ளது.


 • குடல் ஆரோக்கியம்

  கம்பில் உள்ள நார்ச்சத்து கரையக் கூடிய தன்மை இல்லாமல் இருப்பதால், குடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை புரிகிறது. மேலும் கரைய முடியாத நார்ச்சத்தின் காரணமாக, அதிகம் உணவு உட்கொள்ளும் பழக்கம் தடுக்கப்படுகிறது. இதனால் செரிமானம் தாமதமாகி, பசி எடுக்கும் நிலை தாமதமாகிறது. குடல் சுத்தீகரிப்பு மற்றும் மலச்சிக்கலைத் தடுப்பதும் கரையக் கூடிய தன்மை இல்லாத நார்ச்சத்தின் முக்கிய பணியாகும்.

  MOST READ: தன் கூட படிக்கும் மாணவிக்கு யாருக்கும் தெரியாம தாலி கட்டிய 10 ஆம் மாணவன்... அட கொடுமையே?


 • நீரிழிவு நோய்

  தினமும் நம் உணவில் நார்ச்சத்து உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து உணவில் நேர்மறை விளைவுகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள், ஆவணங்கள் உருவாக்கியுள்ளன. நீரிழிவு பாதிப்பில் நேர்மறை விளைவை உண்டாக்கும் தன்மை கம்பிற்கு உண்டு. இதற்குக் காரணம் கம்பில் உள்ள நார்ச்சத்து மற்றும் மெதுவாக செரிமானம் ஆகும் ஸ்டார்ச் அளவு ஆகியவை ஆகும் , ஸ்டார்ச் க்ளுகோஸாக மாற நீண்ட நேரம் எடுக்கும். இந்த தன்மை காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு நீடித்த ஆற்றல் கிடைக்க உதவுகிறது. இதனால் அவர்களின் நீரிழிவு பாதிப்பு சரியான முறையில் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் கம்பில் மக்னீசியம் அதிகமாக இருக்கிறது. நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும் ஒரு கனிமம் மெக்னீசியம் ஆகும்.


 • ஆரோக்கியமான இதயம்

  கம்பில் மெக்னீசியம் அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள், இதனை தங்கள் உணவில் இணைத்துக் கொள்வது நல்லது. இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இதய நோயுடன் தொடர்புடைய அபாய காரணிகளை தடுக்க உதவும் பண்புகளைக் கொண்டது மெக்னீசியம். உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் மெக்னீசியம் பெரும்பங்கு வகிப்பதாக பல ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. மேலும் வாதத்தை எதிர்த்து உடலைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.


 • தாவர வேதிப்பொருள்

  பொதுவாக திணை உணவுகளில் தாவர வேதிப்பொருள் மிக அதிக அளவு உள்ளது. கம்பில் உள்ள மிகுதியான பாலிபினால்கள் ஃபிளாவனாய்டுகள் - டிரிக்ஸின், லுட்டோலின் மற்றும் அசசெட்டீன் ஆகியவை. இவை புற்றுநோய் எதிர்ப்பியாகவும், கட்டி எதிர்ப்பியாகவும் இருப்பதாக அறியப்படுகின்றன, மேலும், மார்பக புற்று நோய் வளர்ச்சியை தடுத்து நிறுத்த உதவுவதாகவும் அறியபப்டுகின்றன. ப்லவனைடுகள் , உடலில் அன்டி ஆக்சிடென்ட்டாக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இந்த அன்டி ஆக்சிடென்ட்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, வயது முதிர்வுக்கான அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன. வளர்சிதை மாற்ற நோய்க்குறியை எதிர்த்து உடலை பாதுகாக்கின்றன.

  MOST READ: எப்படி தேய்ச்சு குளிச்சாலும் அடுத்தநாளே தலைமுடி துர்நாற்றம் வீசுதா? இந்த 7 தான் அதுக்கு தீர்வு

  Image Courtesy


 • ஒமேகா 3 கொழுப்புகள்

  மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில், கம்பு, ஒமேகா 3 கொழுப்பு சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது . ஒமேகா 3 எண்ணெய்கள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ட்ரை க்ளிசரைடு, தமனிகளில் கொழுப்பு படிவதை தாமதிக்கவும், வழக்கமான இதய துடிப்பை நிர்வகிக்கவும் உதவுகின்றது. பொதுவாக, கம்பை உட்கொள்வதால் இதய பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.


 • இரும்பு மற்றும் பாஸ்பரஸ்

  கம்பில் மிக அதிக அளவு இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. அறிவாற்றலுடன் செயல்பட இரும்பு சத்து மிகவும் அவசியம். மேலும் இரும்பு சத்து ஆற்றல் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இரத்த சோகை நோயால் பாதிக்கபபட்டவர்கள் குறைவான இரும்பு சத்து கொண்டிருப்பதால், மிகவும் சோர்வாக உணர்வார்கள். திசுக்களில் கார்பன் டை ஆக்சைடு சேர்த்திருப்பதால், ஆக்சிஜன் குறைபாடு காரணமாக மிகவும் பலவீனமாக இருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவு மிகவும் அவசியம்.

  MOST READ: இந்த மாத்திரை அடிக்கடி சாப்பிடறவங்களுக்கு குடல்புற்றுநோயே வராதாமாம்... எப்படினு தெரியணுமா?

  Image Courtesy


 • எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

  கம்பு மூலம் தயாரிக்கப்பட்ட ரொட்டி, கிச்சடி, போரிட்ஜ் போன்றவை தயாரித்து உட்கொள்ளலாம். இதன் ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக, குளிர் காலத்திலும் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். சாலட் போன்ற சிற்றுண்டிகளிலும் கம்பை சேர்த்து உட்கொள்ளலாம். தென்னிந்திய உணவான ஊத்தப்பம் போன்றவற்றில் இதனை சேர்த்துக் கொள்ளலாம். தென் இந்தியாவின் மிக முக்கிய உணவான இட்லி மற்றும் தோசை மாவில் கம்பு சேர்த்து தயாரிப்பதால் அதன் ஊட்டச்சத்து தரம் மேலும் அதிகரிக்கிறது. தினமும் ஒரு முறை அல்லது குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு முறை இந்த அற்புத பாரம்பரிய உணவை உங்கள் வழக்கமான உணவுடன் சேர்த்துக் கொண்டு அதன் நன்மைகளைப் பெற்றிடுங்கள்.
இந்தியாவில் விடுமுறையை இன்பமாக கழிக்க உகந்த இடங்களில் ராஜஸ்தான் ஒரு இடமாகும். அங்குள்ள மக்களின் கலாச்சாரம், உடை, இசை ஆகிய அனைத்தும் மனத்தைக் கவரும் விதத்தில் உள்ளவை ஆகும். மேலும் அவர்களின் உணவு குறித்து சொல்லியே ஆக வேண்டும்.

நாவின் சுவை மொட்டுக்களை கிளர்ந்தெழச் செய்யும் சுவை இவர்கள் உணவிற்கு உண்டு. இவர்களின் உணவில் முக்கிய இடம் பிடிப்பது கம்பு. வறட்சி காலங்களிலும் வளரும் தன்மை கம்பிற்கு இருப்பதால் இந்த திணை, ராஜஸ்தானில் பயிர் செய்யப்படும் ஒரு முக்கிய வகையாகும்.

Image Courtesy

   
 
ஆரோக்கியம்