Back
Home » ஆரோக்கியம்
இந்த எகிப்திய மசாலா பாலை 1 மாதம் குடித்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?!
Boldsky | 21st Feb, 2019 05:56 PM
 • வரலாறு


  இலவங்கப்பட்டை எகிப்திய நாடுகளில் தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் எகிப்திய அரசர்களுக்கு பரிசாக வழங்க கூடிய உயரிய மசாலா பொருளாக எகிப்த்தில் பார்க்கப்பட்டது.
  ஆனால், இது தற்போது சர்வ சாதாரணமாக எல்லா மளிகை கடைகளில் கிடைக்கிறது. இதிலிருந்து மசாலா பால் தயாரித்து 1 மாதம் வரை குடித்து வந்தால் உடலில் எக்கசக்க மாற்றங்கள் உண்டாகுமாம்.


 • மூலிகை தன்மை


  மற்ற மசாலா பொருளை போன்றே இதிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது. இந்த மசாலா பொருளில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. இதை பாலில் கலந்து குடிக்கும் போது இதன் தன்மை இரட்டிப்பாகும் என ஆய்வுகள் சொல்கின்றன. அதுவும் இதற்கு இரவு நேரம் சரியான நேரமாம்.


 • இரவு நேரம்


  இந்த இலவங்கப்பட்டை பாலை இரவில் தூங்குவதற்கு முன்னரே குடித்து வந்தால் இரத்தத்தின் அளவு சீராக உறுப்புகளுக்கு பாயும்.

  முக்கியமாக இரத்தத்தில் சேர்ந்துள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் இன்சலின் உற்பத்தியை இது அதிகரிக்க உதவும்.

  MOST READ: இந்த ஒரு நோய் உங்களுக்கு இருந்தால், கூடவே புற்றுநோயும் வரும்-ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!


 • உடல் எடை


  உடல் எடை கூடி போனால் அதை நினைத்து வருந்தாமல் இந்த மசாலா பாலை குடித்து வந்தால் போதும். இதில் உள்ள மூலிகை தன்மை மிக சீக்கிரத்திலே உடல் எடையை குறைத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வை தரும். இந்த பாலை தயாரிக்க தேவையான பொருட்கள்...
  பால் 1 கிளாஸ்
  இலவங்கப்பட்டை பொடி கால் ஸ்பூன்
  தேன் 1 ஸ்பூன்


 • தயாரிப்பு முறை


  முதலில் பாலை காய்ச்சி கொண்டு மிதமான சூட்டிற்கு வந்ததும் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் கலந்து குடித்து வரலாம். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இந்த நன்மைகள் அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும்.


 • எலும்புகளுக்கு


  எலும்புகள் பலவீனமாக இருப்போருக்கு இந்த மசாலா பால் அருமருந்தாக செயல்படும். குறிப்பாக எலும்பு தேய்மானம், மூட்டு பிரச்சினை முதலியவற்றிற்கு இது தீர்வை தரும். பளுவான எலும்பை பெற இந்த மசாலா பால் போதும்.


 • செரிமானம்


  எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாமல் இருக்கிறதா? இதற்கு தீர்வு தருகிறது இந்த இலவங்கப்பட்டை பால். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல ஆரோக்கியமான உடல் நலம் உண்டாகும். கூடவே பற்களின் வலிமைக்கும் இது உதவும்.

  MOST READ: உங்க வீட்டுல இந்த 8 செடியில ஏதாவது ஒன்னு இருந்தா கூட உங்க ஆயுள் கெட்டி..! • குளிர் காலத்தில்


  இந்த மசாலா பாலை குளிர் காலங்களில் குடித்தால் சிறப்பான டானிக் போல வேலை செய்யும். சளி, இரும்பல் தொல்லை இதனால் நீங்கும். மேலும், உள் உறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவு பொருளுக்கு பின்னால் மிக பெரிய வரலாறே உள்ளது. ஒவ்வொரு உணவிற்கும் தனி சிறப்பு கிடைப்பதற்கு இந்த வரலாற்று சம்பவங்களும் மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு மசாலா பொருட்கள் நம் நாட்டில் இருந்தே உருவானதில்லை.

எகிப்து, ஐரோப்பா, கிரேக்கம், ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து இவை வந்திருக்கின்றன. இந்த வகை மசாலா பொருட்களில் ஏராளமான நன்மைகளும் உள்ளன. இவற்றில் இலவங்கப்பட்டையும் அடங்கும். வாசனைக்காக நாம் சேர்க்கும் இந்த பட்டையில் எண்ணற்ற மருத்துவ குணம் உள்ளது.

இதனை மசாலா பால் போல தயாரித்து குடித்தால் உங்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். இந்த பாலிற்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும், இதனால் எப்படிப்பட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதையும் இனி தெரிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்