Back
Home » ஆரோக்கியம்
குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்?
Boldsky | 21st Feb, 2019 06:52 PM
 • விளைவுகள்

  தலைவலி, அதிக இரத்த அழுத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வெளிரிய சருமம் மற்றும் கண்கள் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே இதை சில வீட்டு முறைகளைக் கொண்டே இந்த வீக்கத்தை குறைக்கலாம். இதற்காக தினமும் மருந்து சாப்பிடுபவர்களும் ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்களும் உண்டு. அதெல்லாம் இனி தேவையில்லை. கீழ்வரும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இதை சரிசெய்து விடலாம்.


 • வெள்ளரிக்காய்

  வெள்ளரிக்காய்க்கு தண்ணீரை உறிஞ்சி கொள்ளும் சக்தி அதிக அளவில் இருக்கிறது. எனவே வெள்ளரிக்காய் துண்டுகளை காலில் வைத்து கட்டி பேன்டேஜ் மாதிரி போட்டு கொள்ள வேண்டும். அரை மணி நேரம் இப்படி வைத்திருந்தால் போதும். வீக்கத்தில் உள்ள நீர் முழுக்க உறிஞ்சப்பட்டு வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.


 • கடுகு எண்ணெய்

  கடுகு எண்ணெய்யை சூடுபடுத்தியோ அல்லது அப்படியே கொண்டு பாதங்களை மசாஜ் செய்து வர வீக்கம், வலி நீங்கும். உடனடி நிவாரணம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, குளிர்காலத்தில் பாதத்தில் கடுகு எண்ணெயை நன்கு தேய்த்தால் உடல் வெப்பநிலை கூடும். குளிரால் உண்டாகும் வீக்கம் குறையும். ஜலதோஷம் பிடிக்காமலும் காக்கும்.

  MOST READ: கால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்? இதோ ரொம்ப சிம்பிள்


 • எப்சம் உப்பு

  ஒர் பெரிய டப்பில் 1/2 கப் எப்சம் உப்பை தண்ணீருடன் கலந்து அதில் பாதங்களை அரை மணிநேரம் அளவுக்கு ஊற வைக்க வேண்டும். இது உண்மையிலேயே நல்ல பலனைத் தரும். நீங்கள் அதிசயிக்கும் வகையில் மிகப்பெரிய மாற்றத்தை இதன்மூலம் காணலாம்.


 • வெல்லப்பாகு மற்றும் பெருஞ்சீரக டீ

  1/2 டேபிள் ஸ்பூன் வெல்லப் பாகுடன் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அது அரை பங்காக வற்றும் போது வடிகட்டி ஆற வைத்து பருகவும். ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


 • முட்டைகோஸ் இலைகள்

  முட்டைக்கோஸ் இலைகள் உடலில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தை உறிஞ்சி கொள்கிறது. எனவே பாதங்களை முட்டைகோஸ் இலைகளால் மூடி பேன்டேஜ் போட்டு கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு துண்டுகளை கூட பயன்படுத்தி கொள்ளலாம்.


 • மக்காச்சோள நார்கள்

  மக்காளச்சோளம் வாங்கும்போது சிலர் அதன் மேல் சருகு மற்றும் பிரௌன் கலரில் உள்ள நார் ஆகியவற்றை பிரித்து தூக்கியெறிந்து விட்டு, வாங்குவார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த சோளத்தைவிட அதில் உள்ள நார்களில்தான் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. ஒரு கப் தண்ணீரில் சில மக்காச்சோள நார்களை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி அதை பருகவும். வீக்கம் மற்றும் வலி இவற்றை காணாமல் செய்கிறது.

  MOST READ: ரொம்ப கூச்ச சுபாவம்... ஆனா நாத்தனாரோடு ரகசிய லெஸ்பியன் உறவில் இருந்தேன்... இப்படிதான் ஆரம்பிச்சது...


 • லெமன் ஜூஸ்

  நீர்க்கட்டு (எடிமா) பிரச்சினைக்கு இது சிறந்தது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு லெமன் ஜூஸை பிழிந்து தினமும் குடித்து வந்தால் பாதங்களில் தேங்கியுள்ள நீரை உறிஞ்சி விடும்.


 • பூண்டு

  தினமும் 2-3 பூண்டு துண்டுகளை சாப்பிடும் போது திசுக்களில் உள்ள தேவையில்லாத கெட்ட நீர் ஊறிஞ்சப்படும். இது பாத வீக்கத்தை தடுக்கிறது. குறிப்பாக, சமையலில் பூண்டு சேர்த்துக் கொள்வதைவிட, தினமும் சாப்பிட்டு முடித்தபின், பச்சையாக இரண்டு பூண்டு பற்களை அப்படியே சாப்பிட்டு வரலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளையும் சேர்த்து குறைக்கும்.


 • கொத்தமல்லி விதைகள்

  கொத்தமல்லி விதைகள் அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. ஒரு கப் தண்ணீரில் 3 டீ ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை கலந்து கொதிக்க வைத்து அரைபங்காக வற்றும் வரை காய்ச்சி ஆறிய பிறகு வடிகட்டி குடிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.


 • ஆலிவ் ஆயில், பட்டை பொடி மற்றும் பால் கலவை

  1 டீ ஸ்பூன் பால் மற்றும் ஆலிவ் ஆயில், கொஞ்சம் பட்டை பொடி சேர்த்து பேஸ்ட்டாக்கி கால்களில் அப்ளே செய்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். இதை தினசரி செய்து வந்தால் பாதங்களில் ஏற்பட்டுள்ள அலற்சி வீக்கம் சரியாகும்.

  MOST READ: குழந்தைங்களுக்கு துளசி மாதிரி மூலிகை கொடுக்கலாமா? கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?
பாதம் மற்றும் கணுக்கால் வீக்கத்தால் பெரும்பாலும் கருவுற்ற பெண்கள் அவதியுறுகின்றனர். கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உடல் எடை, நீண்ட நேரம் நின்று கொண்டே இருத்தல், அதிக தூரம் பயணித்தல், மாதவிடாய், பொட்டாசியம் பற்றாக்குறை, நீர்த் தேக்கம் மற்றும் சிறிய காயங்கள் இவற்றால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதை சில வீட்டு முறைகளைக் கொண்டே இந்த வீக்கத்தை குறைக்கலாம். லெமன் ஜூஸ், எஸன்ஷியல் ஆயில் மசாஜ், எப்சம் உப்பு, பொட்டாசியம் அதிகமான உணவுகள் போன்ற பொருட்கள் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

   
 
ஆரோக்கியம்