Back
Home » வீடு-தோட்டம்
இப்படி உருளைக்கிழங்குலயே ரோஜா செடி வளர்க்கலாம் தெரியுமா? ரொம்ப ஈஸி... ட்ரை பண்ணிப்பாருங்க
Boldsky | 12th Mar, 2019 12:36 PM
 • டாய்லெட் கறை நீங்க

  கொகோ கோலா குடிப்பதற்கு மட்டும் தயாரிக்கப்படுகிற கார்பனேடட் பானம் வெளிநாடுகளில் வேறு சில விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. டாய்லெட்டுகளில் தேங்கியிருக்கிற கறைகளை என்ன தான் அதிக சக்தி கொண்ட ஆசிட் மற்றும் பினாயில்களைப் பயன்படுத்தினாலும் கூட போகாத கடினமான கறைகளைக் கூட கொகோ கோலா போக்கிவிடும்.

  பினாயில் ஊற்றுவது போல் கொகோ கோலாவை ஊற்றி சிறிது நேரம் ஊறவிட்டு பின் நன்கு தேய்த்துக் கழுவிப் பாருங்கள். பிறகு தெரியும். புத்தம் புதிதாக மாறிவிடும் உங்களுடைய டாய்லெட்.

  MOST READ: அண்ணியை கொழுந்தன்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோத சடங்கு... எங்க நடக்குது தெரியுமா?


 • தீமூட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்

  எங்காவது வெளியில் மலைப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், அங்கு கட்டாயம் கேம்ப் ஃபயர் மூட்டி குளிர்காய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த சமயத்தில் அங்கிருக்கும் சருகுகளைத் தூக்கிப் போட்டு குளிர் காயலாம். அந்த சமயத்தில் அவ்வளவு எளிதாக குச்சிகளில் தீ பரவாது. வேறு இடமாக இருந்தால் மண்ணெண்ணெய் போன்றவை கிடைக்கும். ஆனால் அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எப்படியும் ஸ்நாக்காக உருளைக்கிழங்கு சிப்ஸ், லேஸ் என கட்டாயட் வைத்திருப்போம். அதிலிருந்து சிலவற்றை எடுத்து குச்சிகளின் அடியிலும் மேல் பகுதியிலும் போட்டு தீயை பற்ற வையுங்கள். சீக்கிரம் பற்றிக் கொள்ளும்.


 • டைட் ஷூ

  புதிதாக வாங்கிய ஷூ உங்களுக்கு டைட்டாக இருந்தால் கால்களைக் கடிக்க ஆரம்பித்து விடும். பத்தாா ஷூவை போட்டுக் கொள்ளவும் முடியாது. இதற்கு இன்னொரு வழி இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் பழைய நியூஸ் பேப்பர்களைக் கொஞ்சம் எடுத்து தண்ணீர் தெளித்து நனைத்துவிடுங்கள். அப்படி ஈரமான பேப்பர்களை ஷூக்களில் போட்டு திணித்து வையுங்கள். சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு வெளியே எடுத்துவிடுங்கள். இப்போது அந்த ஷூவைப் போட்டுப் பாருங்கள். உங்கள் கால்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.


 • டீ பேக்

  ஷூ மற்றும் செருப்புகளில் கெட்ட துர்நாற்றம் வீசும். இந்த செருப்புகளை அணிவதால் நம்முடைய பாதங்களும் மோசமான துர்நாற்றம் வீசும். ஆனால் இப்படி துர்நாற்றம் வீசும் ஷூக்களில் ஓரிரு தேயிலை பேக் (டீ பேக்) போட்டு வைத்திருங்கள். அந்த உலர்ந்த டீ தூள் ஷூக்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். ஷூக்களில் உள்ள ஈரப்பதமும் சரியாகும். அதேபோல கொஞ்சம் அரிசி மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து ஷூக்களில் போட்டு வைத்து ஓரிரு நாட்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு அதை வெளியே எடுத்துவிட்டு ஷூக்களை அணியலாம்.

  MOST READ: ரத்த பரிசோதனை செய்யும்போது டாக்டர் நம்மிடம் மறைக்கும் பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா?


 • துணி வேகமாக காய

  மழைக்காலம் மற்றும் குளிர்காலம் மட்டுமல்ல, துணி துவைத்தவுடன் மிக வேகமாகக் காய்ந்து விட்டால் யாருக்குத் தான் பிடிக்காது. அதற்கு வீட்டில் டிரையர் இல்லையென்றால் என்ன செய்வது? இதோ ஒரு சிம்பிள் வழி இருக்கிறது.

  ஈரமான துணியை நன்கு உலர்ந்த துண்டின் மேல் விரித்துப் போடுங்கள். பின் துணி உள்பக்கம் வைத்திருக்கும்படி, அப்படியே அந்த துண்டை சுருட்டுங்கள். சுருட்டி நன்கு முறுக்குங்கள். அப்படி முறுக்குகிற பொழுது, துணியில் இருக்கிற அதிகப்படியான நீர் அத்தனையும் உறிஞ்சப்படும். பின் துணியை நன்கு உதறிவிட்டு கொடியில் சில நிமிடங்கள் போட்டு உலறவிட்டு எடுங்கள்.


 • வாட்டர் ஃபுரூப்

  உங்களுடைய கேன்வாஸ் ஷூக்கள் தண்ணீரில் நனைந்து விட்டால் அந்த ஷூ மிக சீக்கரமே பாழாகிவிடும். வாட்டர் ஃபுரூப் ஷூ வாங்க முடியலையா? இதுக்கெல்லமா் கவலைப்படலாமா?

  உங்களோட சாதாரண கேன்வாஸ் ஷூ முழுக்க மேல் பகுதியில தேன்கூட்டோட (honeywax) எடுத்து நல்லா கவர் பண்ணுங்க. இப்போது ஃபுளோ டிரையர் (blow dryer) வைத்து அந்த தேன்மெழுகை ஷூக்களின் மேலேயே உருகச் செய்யுங்கள். சில நேரம் அப்படியே ஓரமான எடுத்து வைத்து உலர விட்டுவிடுங்கள். பிறகு பாருங்கள். உங்களுடைய வாட்டர் ஃபுரூப் ஷூ ரெடி.

  MOST READ: சுப்பிரமணியன் கருப்பையா கவுண்டமணி ஆன கதை தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க...


 • உருளைக்கிழங்கில் ரோஜா

  Image Courtesy

  நகர்ப்புறங்களில் கிராமங்களைப் போன்று இட வசதியெல்லாம் பெருமு்பாலும் இருக்காது. தொட்டிச் செடிகள் தான் வளர்க்க முடியும். அதில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரியாக செட் ஆகாது. ஆனால் வீட்டில் ஒரு ரோஜா செடி இருந்தால் அது கொத்து கொத்தாக ரோஜா பூத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கு நேராக கிச்சனுக்குப் போங்க. ரெண்டு பெரிய சைஸ் உருளைக் கிழங்கு எடுத்துட்டு வாங்க. எதுக்குன்னு கேட்கறிங்களா? ரோஜா வளர்க்கத்தான்.

  ஆமாங்க. தொட்டியோ, மண்ணோ தேவையில்லை. வெறும் உருளைக் கிழங்குல ரோஜா செடியோட தண்டை வெட்டி வெச்சே செடி வளர்க்கலாம்.

  ஒரு உருளைக் கிழங்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு இடத்தில் சிறிய ஓட்டை போட வேண்டும். பின் ரோஜா குச்சியை நுனிப் பகுதியை கிராஸாக சீவி விட்டு அந்த உருளைக் கிழங்குக்குள் சொருகிவிடுங்கள். அதை அப்படியே துக்கி மண்ணிலோ அல்லது தொட்டிக்குள்ளோ வைத்து மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். பிறகு வழக்கம் போல தொட்டியில் நீர் விடுங்கள். மிக வேகமாகவும் செழித்தும் வளரும். நிறைய பூக்கள் பூக்கும்.

  இதற்கு ரோஜா செடி தேவையில்லை. ரோஜாவை வெட்டிய குச்சிகள் மட்டும் இருந்தாலே போதும். அதிலேயே செடி வளர்த்துவிடலாம்.
சில பொருள்கள் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவோம். அட்டை பெட்டி, டீ, பேக் இப்படி நிறைய. ஆனால் அந்த தூக்கி எறியக் கூறிய பொருள்களை வைத்து நம்முடைய வீட்டுக்குத் தேவையான சில விஷயங்களை நாமே எதிர்பார்க்காத வகையில் அழகானதாக மாற்ற முடியும் என்றால் அந்த சுவாரஸ்யத்தை நாம் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதில் ஒன்று தான் உருளைக்கிழங்கிலே ரோஜா வளர்ப்பு ஆகியவை.

சரி. உருளைக் கிழங்கில் வைத்து வெறும் ரோஜா குச்சிகளை நட்டு வைத்து எப்படி சீக்கிரமாகவும் செழிபாகவும் நிறைய பூக்கள் பூக்கும் ரோஜா செடியை வளர்க்கலாம் என்பது பற்றியும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வேறு சில விஷயங்களையும் இங்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்