Back
Home » ஆரோக்கியம்
பித்தப்பை கல் பெண்களுக்கும் வருமா? உங்க கணையம் பத்தி உங்களுக்கே தெரியாத 5 விஷயம் இதோ
Boldsky | 14th Mar, 2019 12:10 PM
 • செரிமானத்திற்கு உதவுகிறது

  நீங்கள் சாப்பிடும் போது, உங்கள் கணையம் லிப்சேஸ் மற்றும் அமிலேசு உள்ளிட்ட அத்தியாவசிய என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை வெளியிடுகிறது, சிறு குடலில் புரதம் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவுகிறது, இதனால், செரிமானத்திற்கு உதவுகிறது.

  MOST READ: முடி ரொம்ப கொட்டுதா? ஷாம்புல அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து தேய்ங்க... முடி வளர ஆரம்பிக்கும்


 • சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த

  மேலே குறிப்பிட்ட செரிமான நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் தவிர, உங்கள் கணையம் இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா அணுக்கள் என்னும் குறிப்பிட்ட அணுக்களைக் கொண்டுள்ளது. இந்த இன்சுலின் என்னும் ஹார்மோன் நீங்கள் உட்கொள்ளும் உணவிலிருந்து சர்க்கரையை எடுத்து, இரத்த ஓட்டத்தின் மூலமாக அணுக்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு எரிபொருளாக பயன்படுத்தபப்டுகிறது. டைப் 1 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மூலமாக பீட்டா அணுக்கள் தாக்கப்படுகின்றன. இதனால் இன்சுலின் உற்பத்தி குறைக்கப்படுகிறது. இந்த வித வழக்குகளில் உங்கள் மருத்துவர் இரத்த சர்க்கரை அளவை கட்டுபாட்டில் வைக்க இன்சுலின் மாத்திரைகளை சாப்பிட பரிந்துரைப்பார்.


 • பித்தப்பை கற்கள்

  பித்தப்பையில் உண்டாகும் கற்கள், கணையத்தில் அழற்சியை உண்டாக்கும் நிலை ஏற்படலாம். செரிமான நொதிகள் குடலிலிருந்து கணையத்தை அடையும் நாளங்கள் இந்த சிறிய கூழாங்கற்கள் போன்ற சிறிய கற்காளால் அடைக்கப்படுகின்றன. காய்ச்சல், அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி, வாந்தி, வயிற்றுப் பகுதி லேசாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை உங்களுக்கு கணைய அழற்சி இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
  .

  MOST READ: இந்த வேர் ஒன்னு போதும்... 70 வயசானாலும் விறைப்பு தன்மையில பிரச்சினையே வராது...


 • மதுவில் இருந்து விலகி இருத்தல்

  கணைய அழற்சிக்கு மற்றொரு காரணாம் மது அருந்துவது. நீங்கள் சதா குடித்துக் கொண்டே இருப்பவர் அல்ல, எப்போதாவது ஒரு முறை தான் மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் என்ன பாதிப்பு உண்டாகும் என்று கவலை இல்லாமல் இருந்தால் அந்த முடிவை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.

  நீண்ட நாட்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களைப் போலவே ஒரு சிறு அளவு மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கும் ஒரு சிறு பாதிப்பு அல்லது குறைந்த அளவு அழற்சி கணையத்தில் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இது அடுத்த பல மாதங்கள் முதல் வருடங்கள் வரை உங்களை பாதிக்கும். மலம் கழிக்கும்போது அதிக துர்நாற்றம் அல்லது அதிக நீர்த்தன்மையுடன் மலம் கழிப்பது ஆகியவை உங்கள் உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்பதை உணர்த்தும். இந்த நிலை கணைய அழற்சியாக இருக்கலாம்.

  MOST READ: உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா? உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...


 • கணையப் புற்றுநோய்

  கணையப் புற்றுநோயானது இறப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தானது:
  பெரும்பாலும் கணையப் புற்று நோய் பெருமளவில் காணப்படுவதில்லை. ஆனால் இது மிகவும் கொடிய புற்று நோய் வகையாகும். மிகவும் தாமதமாகவே இந்த புற்று நோய் தாக்கப்பட்டது அறியப்படும். இதற்குக் கரணம் இந்த நோய் குறித்த எந்த ஒரு அறிகுறியும் ஆரம்ப நிலையில் உணரப்படுவதில்லை. புகை பிடிப்பவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் அல்லது குடும்பத்தில் இந்த புற்று நோய்க்கான வரலாறு இருப்பவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படலாம்.
வயிறு, சிறு குடல் மற்றும் பெருங்குடல் போன்ற நமது குடலின் பொதுவான உடற்கூறியல் என்பது நமக்குத் தெரியும். இவை தவிர மற்ற சில உடல் உறுப்புகளுக்கு தேவையான கவனம் கொடுக்கப்படாமல் அவற்றைக் குறித்த சில முக்கிய செய்திகளை நாம் அறிந்து கொள்ளாமல் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி நம் கவனத்தில் அதிகம் இல்லாத ஒரு உடல் உறுப்பு கணையம். கணையத்தில் எதாவது குறை அல்லது பாதிப்பு வந்தாலொழிய நாம் அந்த உறுப்பைப் பற்றி பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை.

இந்த உறுப்பை நாம் எப்போதும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பதன் காரணாம், இந்த உறுப்பு, செரிமான மண்டலத்தில் ஒரு முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது, மேலும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. உங்கள் அடிவயிற்றில் குடலுக்கு அருகில் இருக்கும் இந்த கணையம் என்ற உறுப்பு குறித்து ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே இந்த பதிவு..

   
 
ஆரோக்கியம்