Back
Home » ஆரோக்கியம்
துளசியை வைத்து 2 வாரத்திலே உடல் எடையை குறைப்பது எப்படி..? செய்முறை உள்ளே...
Boldsky | 14th Mar, 2019 01:23 PM
 • எண்ணற்ற சத்துக்கள்


  நாம் நினைப்பதை காட்டிலும் துளசியில் ஏராளமான சத்துக்களும், தாதுக்களும் ஒளிந்துள்ளது. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற பலவித ஊட்டசத்துக்கள் இதில் உள்ளதாம். வெறும் வயிற்றில் கொஞ்சம் துளசி இலைகளை சாப்பிட்டாலே அதன் மகிமை அதிகம்.


 • உடல் அமைப்பு


  உடல் எடையை குறைக்க முதலில் நமது உடல் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நமது உடலுக்கு எந்த அளவு கலோரிகள் தேவைப்படும், எவ்வளவு ஆற்றல் வேண்டும் முதலிய கேள்விகளை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். துளசி சாப்பிட்டால் எப்படிப்பட்ட உடல் அமைப்பும் சீரான உடல் அமைப்பாக மாறி விடும்.


 • நச்சுக்கள்


  எடையை குறைக்க முதலில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு துளசி சிறந்த மருந்தாக உதவும்.
  உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை முழுவதுமாக இது நீக்கி விடும். அத்துடன் கொலஸ்ட்ராலையும் நீக்க கூடிய பண்பு இதற்குண்டு.


 • பாக்டீரியா


  செரிமான மண்டலம் நன்றாக இருந்தால் மட்டுமே நமது உடல் எடை சரியாக இருக்கும். செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாவை சீரான அளவில் பாதுகாக்க துளசி உதவும். இதனால் உடல் எடை குறைப்பை மிக எளிதாக செய்து விடலாம்.

  MOST READ: இந்த 8 உணவுகளை ஒரு முறை சாப்பிட்டாலே, எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் தெரியுமா?


 • ஆயுர்வேத ஆய்வு!


  துளசியை ஆயுர்வேதத்தின் பல்வேறு ஆய்வின் படி எவ்வாறு எப்போது பயன்படுத்த வேண்டும் என பிரித்துள்ளனர். முக்கியமாக இது உடல் எடையை குறைத்து, ஹார்மோன் குறைபாட்டை தீர்க்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான்.


 • உடல் எடை


  உடல் எடையை குறைக்க மிக கடினமான வழிகளை பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மாறாக துளசி வழியை பின்பற்றினாலே போதும். வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தாலே இதன் பலன் நமது உடல் எடையை குறைக்கும். இல்லையேல் வேறு துளசி டீ வழி கை கொடுக்கும்.


 • தேவையான பொருட்கள்


  துளசி இலைகள் 6
  துளசி விதைகள் 2 ஸ்பூன்
  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  புதினா இலைகள் 4
  தேன் (தேவைக்கு)


 • தயாரிப்பு முறை


  1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் துளசி இலைகள், துளசி விதைகள், ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். அதன் பின் இந்த நீரை வடிகட்டி கொண்டு அதில் எலுமிச்சை சாறு,

  நறுக்கிய புதினா இலைகள், தேன் கலந்து குடித்து வரலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடனே உடல் எடையை குறைத்து விடலாம்.

  MOST READ: இரவில் மட்டும் இதையெல்லாம் செய்யவே கூடாதாம்! மீறினால் பின் விளைவுகள் பயங்கரம்! • கொலஸ்ட்ரால்


  துளசியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் தொல்லை நீங்கும். எனேவ, விரைவில் இதய நோய்களையும் இது குணப்படுத்தும். அத்துடன் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க இந்த அருமையான மூலிகை டீ பயன்படும்.
வீட்டின் முற்றத்தில் பல காலமாக இந்த துளசி செடியை வைத்து தான் வழிபடுவோம். இது வெறும் வழிபாட்டு பொருளாகவே பல நூற்றாண்டாக பார்க்கப்பட்டது. அதன் பின் அறிவியல் மாற்றத்தால் இதன் பயன்கள் உலகிற்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. 1 துளசி இலையில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது என ஆய்வுகளும் சொல்கின்றன.

ஆயுர்வேத மருத்துவம் முதல் இன்றைய நவீன மருத்துவம் வரை துளசியின் மகத்துவத்தை கூறுகின்றனர். "மூலிகைகளின் ராஜா" என்றே இதை அழைத்தும் வருகின்றனர். பலவித மூலிகை தன்மை இதில் இருப்பதால் தான் அந்த காலத்திலே நம் முன்னோர்கள் மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகித்து வந்தனர்.

இதே துளசி தான் உங்களின் பானை உடலை சட்டென குறைக்க வழி செய்ய போகிறது. இதை எவ்வாறு அடைவது, இதனால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன போன்ற பல தகவல்களை இனி பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்