Back
Home » ஆரோக்கியம்
உலர்ந்த திராட்சையை இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட ஆபத்துகள் உடலில் ஏற்படும்..?
Boldsky | 15th Mar, 2019 05:30 PM
 • சுவை மிக்கவை!


  திராட்சை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் திராட்சை அதிக அளவில் உற்பத்தியாக கூடிய கோடை காலங்களில் இதன் சுவை சற்று அதிகமாகவே இருக்கும். திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட அதை உலர் பழமாக சாப்பிட்டால் மேலும் இதன் சத்துக்கள் கூடும்.


 • ஆராய்ச்சி!


  உலர் வகை பழங்களை பற்றிய ஆய்வில் சில தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கால் கப் உலர் திராட்சையில் 108 கலோரிகளும், 1 கிராம் புரதமும், 29 கிராம் கார்போஹைட்ரேட்டும், 1.4 கிராம் நார்ச்சத்தும்,
  மேலும், பொட்டாசியம், சோடியம், இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதாம். இருப்பினும் இதில் சில சிக்கல்கள் உள்ளது எனவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.


 • அபாயம்!


  இந்த ஆய்வின் படி, திராட்சையில் இயல்பாகவே உள்ள சர்க்கரையின் அளவு உலர வைக்கும் போது மேலும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் உலர வைக்கும் திராட்சையில் அளவுக்கு அதிகமாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் நேரடியாக நமது உடலை பாதிக்கும் என இந்த ஆய்வுகள் சொல்கின்றன.

  MOST READ: இந்த 8 உணவுகளை சாப்பிடுவதற்கு முன் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! ஏன் தெரியுமா?
 • செரிமான கோளாறு


  அளவுக்கு அதிகமாக இதில் நார்சத்து இருப்பதால் இதனால் உண்டாகும் முதல் பாதிப்பு செரிமான கோளாறு தான். மலச்சிக்கல், வயிற்றில் வலி, எரிச்சல், வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகளை இது உண்டாக்குமாம்.


 • செல்கள் பாதிப்பு


  உலர் திராட்சைகளில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கிறது. இவை செல்களின் வளர்ச்சியை பாதித்து பல சமயங்களில் மோசமான விளைவை நமது உடலுக்கு ஏற்படுத்தும். அத்துடன் செல்கள் விரைவிலே சிதைவடையவும் இந்த உலர் திராட்சைகள் ஒரு முக்கிய காரணியாக இருக்க கூடும்.


 • கர்ப்பிணிகள்


  கர்ப்ப காலங்களில் உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது தான். என்றாலும், இதன் ஆக்சிடேடிவ் தன்மை அதிக அளவில் இருப்பதால் வயிற்றில் உள்ள கருவை பாதிக்க கூடும். சில நேரங்களில் வயிற்று போக்கு, செரிமான கோளாறு முதலிய பாதிப்பையும் இது உண்டாக்கும்.


 • உயர் இரத்த அழுத்தம்


  அதிக அளவில் உலர் திராட்சையை சாப்பிடுவதால் இவை இரத்த அழுத்தத்தை சீரற்ற அளவில் வைத்து கொள்ளும். குறிப்பாக இரத்த அழுத்தத்தை உயர்த்தி, இதயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  அத்துடன் இதய நோய்கள், மாரடைப்பு, இரத்த நாளங்களில் அடைப்பு முதலிய மோசமான தாக்கத்தையும் இது தரும்.


 • உடல் எடை


  100 கிராம் உலர் திராட்சையில் சுமார் 300 கலோரிகள் உள்ளது. ஆதலால், இவை உடல் பருமனுக்கு வழி வகுக்க கூடும். சுவை அதிகமாக உள்ளது என்பதற்காக எண்ணற்ற அளவில் சாப்பிடுவோருக்கு இந்த பாதிப்பு நிச்சயம் வர கூடும்.

  MOST READ: கேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..!


 • எவ்வளவு சாப்பிடலாம்?


  உலர் திராட்சையை அதிக அளவில் சாப்பிட்டால் மட்டுமே மேற்சொன்ன பாதிப்புகளும், அபாயங்களும் உண்டாகும். போதுமான அளவு உலர் திராட்சையை சாப்பிட்டால் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது.
  சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் தங்களது மருத்துவரை ஆலோசித்த விட்டு, அவர்கள் கூறும் அளவிற்கு சாப்பிடலாம்.
எந்த ஒரு உணவு வகையாக இருந்தாலும் அதை நாம் சாப்பிடுவதற்கு முன் 1 நொடி யோசித்து சாப்பிட வேண்டியது அவசியம். காரணம், நமக்கு பிடிக்கும் பல உணவுகள் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையிலே உள்ளன. விளையாட்டாக நாம் சாப்பிடும் சில உணவுகள் நமது உடல் நலத்தை கேள்விக்குறியாக மாற்றி விடுகிறது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும், வயதையும், செல்களின் திறனையும் பொருத்து உணவுகளின் வேலைப்பாடும் மாற கூடும்.

அந்த வகையில் பலருக்கும் பிடித்த உலர்ந்த பழங்களும் அடங்கும். வெறும் பழ வகைகள் மற்றும் பருப்பு வகைகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம். ஆனால், இவற்றில் கூட மோசமான ஆபத்துகள் ஒளிந்து கொண்டுள்ளது என தற்போதைய ஆராய்ச்சி ஒன்று கூறியுள்ளது.

குறிப்பாக உலர் திராட்சையில் இந்த பாதிப்பு அதிகமாகவே உள்ளது எனவும் கூறப்படுகிறது. உலர் திராட்சையை எவ்வளவு சாப்பிட வேண்டும்? இந்த அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் எப்படிப்பட்ட பின் விளைவுகளும் ஆபத்துகளும் உடலுக்கு உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்